(Reading time: 6 - 11 minutes)

05. உன்னிடம் மயங்குகிறேன்..! சொல்ல தான் தயங்குகிறேன்..! - ஸ்வேதா

டல் நலம் தேரி வீட்டிர்க்கு வந்தவுடன் கவிதாவை அழைத்து வீட்டை பராமரிக்கும் வேலையை அவளிடம் ஒப்படைத்தார். 

இடைமறித்த பேரனை பார்வையிலே அடக்கி

உன்னிடம் மயங்குகிறேன்..!சொல்ல தான் தயங்குகிறேன்..!"நீ தான் அவளை தொழிலை கற்றுக்கொள்ளவும் விட மாட்டேன் என்கிறாய், பொறுப்பாக வீட்டின் பராமரிப்பாவது அவள் கற்றுக்கொள்ளட்டும்" என்றார்  வேணிம்மா.

அர்ஜுனிற்கு வழக்கம் போல்  கோபம் எழுந்தது அடங்கியும் போனது.

"நான் பார்த்துகொள்கிறேன் பாட்டிம்மா ஆனால் உங்க கிட்ட கேட்டு தான் எல்லாம் செய்வேன்  சரியா” கவிதா 

"அதற்கென்ன ராஜாத்தி! நான் எல்லா வகையிலும் உனக்கு உதவி செய்வேன் " வேணிம்மா.

அர்ஜுன் பக்கம் திரும்பி பார்த்து   கவிதா “சார் நான்  பார்த்துக்கொள்கிறேன்” என்றாள்.

அவள் அப்படி  ஆறுதலாக பேசியது எரிச்சல் கொடுத்தது அவனிற்கு மனதினுள் கருவிக்கொண்டன் என்னமாய் நடிக்கிறாள் என்று .

கவிக்குள் சட்டென தாக்கிய அதிர்ச்சியில் இருக்கும் அர்ஜுனை தேற்ற வேண்டும் என்ற எண்ணம்   இருந்ததால்  அர்ஜுனின் ஏகதாளம் நிறைந்த பார்வை புரியவும் இல்லை.

 நாடகம் முடிந்ததோ என்ற பாவனையில் "நான்  வேலைக்கு கிளம்புகிறேன் “என்று  சொல்லி அகன்றான்.

வேணிம்மா  ஓய்வு என்று படுத்துக்கொண்டார். அறை விட்டு வெளியே வந்த கவிதாற்கு  ஆகாஷ் நன்றி சொன்னான். 

" நீங்க கூட இருக்கும் தைரியத்தில் தான் நானும் அர்ஜுனும் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறோம், அக்கா இல்லாத இந்நேரத்தில் நீங்கள் உதவி செய்ததற்கு நன்றி”  என்றான் 

கவிக்கு மனம் இளகிற்று. அவன் நன்றியை ஏற்றாள்.                                          

அவர்கள் பேச்சு காதில் விழுந்தும் கவனியாது அர்ஜுன் சென்று விட்டான்.

ஆகாஷும் விடை பெற்று கிளம்பி விட்டான் .

ந்த நாள் கவிதாவிற்கு மிகவும் சவாலாகவே அமைந்தது.

அடுக்கடுக்காக வேலைகள் என்று நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்தாள். மாலை அர்ஜுனும் அகஷும் வந்த பின் தான் வேலைகள் முடிந்ததென அவளும் ஓய்வெடுத்தாள்.

ஆசுவாசமாக தலையை பின் சாய்த்து சோபாவில் அமர்ந்துக் கொண்டிருந்தவளை பார்க்க அர்ஜுனிர்க்கு அவளை மேலும் விட்டால் வீட்டின் அதிகாரம் முழுதும் எடுத்துக்கொள்வாள் என்று தோன்றியது.

அவள் எதிர்க்கே சோபாவில் அவனும் வந்தமர்ந்தான். வேண்டுமென்றே   கையில் இருந்த  கோப்பை சத்தம் வருவது  போல் போட்டான்.

சத்தம்  கேட்டு கண் முழித்தவளை பார்த்து "என்னம்மா சொகுசான சோபா எப்படி இருக்கு என்றான்     

அந்த வார்தை கேட்டு மனம் வலித்தாலும் "ஓடி ஓடி வேலை பார்ப்பவர்களுக்கு கட்டான் தரையும் பஞ்சு மெத்தை   தான் " என்றாள்.

 அவளை நோகடித்துவிடும் தோரனையில் “அது உழைப்பவர்களுக்கு தானே”  என்றான்.

அவன் பேச்சின் கடுமை புரிந்தது அவளிற்கு ஆனால் அது ஏன் என்று தான் புரியவில்லை .

அவள் புரியவில்லை என்பதுப்போல் பார்க்க

அவன் "என்ன கவிதா நான் பேசுவது புரியவில்லையா என்ன??" என்றான்.

அவன் பேச்சை கேட்ட கவிதாவிற்கு ஒரு நிமிடம் பூமி சுழலுவது நின்றது. அதிர்ச்சியில் முகம் வெளுத்தது. அந்நேரம் வேணிம்மா அழைப்பதாக வந்து சொல்லிய வேலைக்காரன் பின் ஓடினாள் கவி.

அவள் முகத்தில் தெரிந்த கலவரம் அவனிற்கு முகத்தில் புன்னகையை கொடுத்தது. அவள் செல்வதையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான் அவன்.

நிஷா அவளின் கேமேரவை சுழற்றிக்கொண்டே அந்த  லடாக் பகுதியை சுற்றிகொண்டிருந்தாள். அவளுடன் இன்னும் இரு போட்டியாளர்களும் இருந்தனர். நிஷவின் கண்ணோட்டம் "இயற்கையின் அழகு" என்ற தலைப்பிற்கு  எப்படி அதை எவ்வாறு பதிவு செய்வது என்று தேடுதலில் இருந்தது.

"என்ன நிஷா இரண்டு நாட்களை இங்க தான் சுற்றுகிறோம் நீ எதையும் போடோகிரப் பண்ணவே இல்லையே " என்று கேட்டான் விபுன் அவளுடன் இருக்கும் போட்டியாளன்.

"நான் தேடும் அழகு என் கண்ணில் படவில்லை விபுன்" என்றாள் அவள்.

கண்களை மட்டும் தொடாது உனர்விணையும் தொடும் ஒன்றை தனே அவள் மனம் தேடுகிறது. 

இருவரும் பேசிய படியே நடக்க அவன் மட்டும் புகைபடங்களை எடுக்க அவனுக்கு உதவி மட்டுமே செய்துக்கொன்டிருந்தாள் நிஷா.

அந்தி சாயும் நேரம் போடியாளர்கள் தங்கும் இடம் வந்து சேர்ந்தவர்கள் கண்ணில் விழுந்தது அந்த அழகான காட்சி.

அந்த விடுதியில் வேலை பார்க்கும் பெண்மணியின் பெண் அவள் அம்மாவின் கண்ணத்தில் கட்டிபிடித்து முத்தம் கொடுத்த அந்த காட்சி அவள் நெஞசம் நிறைந்தது.

அதுப்போலான முத்ததிற்க்கு அவள் ஏங்கிய நாட்கள் எத்தனை. உணர்வை தொட்டதை கேமிரவில் பதிவு செய்தாள். 

கொடுத்த தலைப்பிற்க்கு கிடைத்து விளக்கம் அவளிர்க்கு.

பாரம்  மனதை அழுத்த கவிதா ஒளிரும் நிலவை பார்த்தப்படி அமர்ந்திருந்தாள். அர்ஜுன் "கவிதா" என்று அழைத்ததிலிருந்து மனம் பதறிய படியே இருக்க எதுவுமே தோன்றாமல் அமர்ந்திருந்தாள்.

தான்  வந்த வேலை முடியும் வரை யாருக்கு தெரியாமல் இருக்க வேண்டும் என்று நினைத்து முடிந்த அளவிற்கு நடித்து கொண்டிருந்தளோ  அவனிற்கே தெரிந்து விட்டதே. இனி போக்கிடம் ஏது. நிஷாவும் தொடர்பு எல்லையில் இல்லை . மனம் தன் போக்கில் யோசனையில் இருக்க அந்த பிரமாண்டமான வீட்டின் நீச்சல் குளத்தில் கால்களை லொலப்பிகொண்டிருந்தாள்.

பின்னிருந்து  "ஹலோ டிராமா குயின் " என்று கேட்க 

திரும்பாமலே அவளிற்கு தெரிந்தது அது அர்ஜுன் தான் என்று. அசையாமல் அமர்ந்திருந்தவள் முடிவுடன் எழுந்து திரும்பி நிற்க, மிக அருகில் அவன் நின்றிருந்ததால் தடுமாறினாள்.

"கூல் கவிதா"

"சார்..., நான் நிஷா இல்லை தான் " என்று அவள் பேச்சை தொடங்க அவன் கைகளை உயர்த்தி நிறுத்து என்றான்.

" உன்னை  மாதிரி பிராடு எல்லாம் இங்கே பேசவே கூடாது "

ஆத்திரத்துடன் அவள் "என்னை பிராடு என்று சொல்லுறீங்க நான் யார் என்று தெரியாமல் என் பெயர் மட்டும் தெரிந்துக்கொண்டு வாய்க்கு வந்தப்படி பேசாதீங்க!!" என்றாள் 

"எல்லாம் தெரியும், ஊரு மதுரை, அப்பா வேல்முருகன், படித்தது எம்.பி.ஏ அதுவும் ஸ்காலர்ஷிப்பில், போதுமா ??" என்றான் 

"நான் ஏமாற்றனும் எனும் எண்ணத்தில் உங்கள் வீட்டிற்க்குள் வரவில்லை" - கவிதா 

"பின்ன எதுக்கு "  என்றான் இளக்காரமாக 

"சார் இன்று  வரை நான் நிஷா என்று சொல்லிக்கொள்ளவும் இல்லை "

"ஆமாம், அதே போல் இல்லை என்றும் சொல்லவில்லை!! அப்படி தானே "

" சார்..!!" என்று அவள் இழுக்க அவன் கோபமாக பேச தொடங்கினான் 

"என்னை என்ன இளிச்சவாயன் என்று நினைத்தீர்களோ இருவரும், ஏமாற்றி விட்டு ஓடிய அவள் ஒரு பிராடு அவள் போல் நடித்து எங்களை ஏமாற்றும் நீயும் ஒரு பிராடு.."

"பாருங்க நான் ஏமாற்றும் எண்ணத்தில் இங்கே வரவில்லை "

"ஏய் என்ன நீ நான் பேச பேச திருப்பி பேசுகிறாய் " என்று அவன் உறும்ப.

"என் பக்கம் நியாயம் நான் சொல்லியே ஆகணும் அர்ஜுன் சார் " என்று அவள் சொல்லிக்கொண்டிருக்க 

தடுமாறி நீச்சல் குலத்தின் ஓரத்தில் நின்றவளை " சொல்லு..., சொல்லு " என்றபடி அவள் எதிர்பார்க்காத தருணத்தில் தள்ளி விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

நீரில் விழுந்த அதிர்ச்சியில் ஓரிரு நிமிடம் தடுமாறினாலும் நீந்தி கரை சேர்ந்தாள் கவிதா. 

குளிரில் உடல் நடுங்க, அடுத்து என்ன என்பதில் மனம் நடுங்க கவிதா கேள்விகளின் கூடமாகி போனாள்.

தொடரும்!

Go to episode # 04

Go to episode # 06


{kunena_discuss:700}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.