(Reading time: 6 - 12 minutes)

07. என் இதய கீதம் - Parimala Kathir

னது அறைக்குள் நுழைந்த அஸ்வின் முதல் வேலையாக சங்கருடன் வேலை செய்யும் அவனது நண்பன் ரவியுடன் தொடர்பு கொண்டான்.

"ஹலோ ......  ம்.... ஆமாங்க நான் அஸ்வின் தான் பேசுறன்.  "

"ஆ ...... சொல்லுங்க சார் . என்னாச்சு அபி நம்பிட்டான்களா?"

En ithaya geetham

"ம்அ ... அவ உங்க கூட கதைக்க முதல் அப்செட்டா  தான் இருந்தா, நீங்க சொன்னத கேட்டு ஓகே  ஆகிட்டா. பை தி வே ரொம்ப தாங்க்ஸ் மிஸ்டர் ரவி."

"இதில என்ன சார் இருக்கு  ஒரு நல்ல காரியத்துக்கு தானே பொய் சொன்னோம். இந்த உண்மை மட்டும் உங்க தங்கைக்கு தெரிந்தால் அவளவு தான்."

" இந்த செமஸ்டர் எக்ஸாம் நல்ல படியா முடியட்டும். அதுக்கப்பறமும் நிலைமை அப்பிடியே இருந்தாள் இத பத்தி அவகிட்ட சொல்லலாம். அவ என்னை நம்பி தன்னோட எதிர் காலத்தை ஒப்படைச்சிருக்கா பாக்கலாம்.  எங்களுக்கு இன்னும் ஒரு மாத கால அவகாசம் இருக்கில்ல.  எனக்கும் கொஞ்ச நாள் தேவைப் படுது மிஸ்டர் ரவி. அதுக்குள்ளே நான் எல்லாத்தையும் கிளியர் பண்ணிடுவன்.   சரி ரவி ஏதாவது தேவைன்னா தயங்காம எனி டைம் கூப்பிடுங்க பாய்"  என்று சொல்லி போன் இணைப்பை துண்டித்தான்.

ஸ்வின் சங்கர் பற்றிய எண்ண  ஓட்டங்களோடு தனது  அறையினை மூன்றாவது  தடவையாக தனது கால்களால் அளவெடுத்தான்.  

"மா...........மா.....  மாமா கதவை திறங்க மாமா உள்ள இவளவு நேரமாய் என்ன பண்ணிட்டிருக்கீங்க?  மா.... " என்று கதவே உடைந்து விடும் அளவுக்கு சர்ஜிகா அஸ்வின் அறை கதவை  தட்டினாள்.

அவளது குரல் கேட்டு தனது சிந்தை கலைந்தவன். "ப்பா.... ஏண்டி இப்பிடி கதவை உடைக்கிறாய். இப்ப உனக்கு என்னடி வேணும். "

"ஏன் மாமா என் மேல கோவப்படுறே வை மாம்ஸ் வை?'

"முதல்ல தள்ளி நின்னு பேசடி .. இடிக்காதடி சொன்னால் கேளு ஏய்..... இங்க இருந்து போடி முதல்ல.  அம்மா.... அம்..."

"ஸ்..... கத்தாதீங்க மாமா.....  கட்டிக்க போறவ தானே......  நான் தொட்டால் நீங்க என்ன அப்பிடியே  கரைஞ்சிடுவீங்களா? ஹிம்." 

"ஹா.... யாரு நான் உன்னை கட்டிக்க போறனா? ஏண்டி பகல் கனவு காணுறாய்.  ஆமா இப்ப எதுக்கு கூப்பிட்டாய்?"

"வேணாம் மாமா விளையாட்டுக்கு கூட அப்பிடி பேசாதிங்க அப்புறம் என்ன செய்வன் என்று எனக்கே தெரியாது சொல்லிட்டன்." 

அதற்குள் அங்கு வந்த மணிமேகலை ஏண்டா என் மருமகளை  சும்மா சீண்டிராய்? பாரு அவ முகமே வாடிப் போச்சு நீ கவலைப் படாத சர்ஜி  அவன் என்ன சொல்றது உன்னை கட்டிக்க மாட்டன் என்று நான் நடத்தி வைக்கிறான் உங்க கல்யாணத்தை."

"ம்...  தாங்க்ஸ் அத்தை.  ஐ லவ் யூ அத்தை "  என்று மேகலையின் கழுத்தை கட்டிக் கொண்டு அஸ்வினுக்கு ஒழுங்கு காட்டினாள். மேகலை அறியா வண்ணம்.

"அத ஏண்டி எனக்கு லவ் யூ சொல்றே உன் மாமனுக்கு சொல்லன். "

"ம்க்..... அத சொல்லிட்டு யாரு உங்க மகனிட்ட உத வாங்கி கட்டுறது."

"அந்த பயம் இருக்கில்ல அப்புறம் ஏன் அவனிட்ட வம்பு பண்றே?"

"என்னத்தை செய்றது  இவளவு ஹான்சமாய் ஒரு பையனை பெத்து வைச்சிருக்கீங்க என்னோட ப்ரண்ட்ஸ் எல்லாம் சைட் அடிக்கிராளுக சொந்த மாமன் பொண்ணு எனக்கு அந்த உரிமை இல்லையா என்ன? ம்...ம்... "

"யாரு சொன்னது  உனக்கு உரிமை இல்ல என்று உனக்கு தான் எல்லா உரிமையும் இருக்கு. ம்ஆ... மறந்தே போய்ட்டன்  உன்னோட பெரிய மாமா வந்ததும் வெளியில போலாம் என்று பிளான் பண்ணி இருக்கோம் நீயும் வா நான் அண்ணன் கிட்ட சொல்லிடுறன். சரியா?"

"இல்ல அத்தை நீங்க உங்க வெட்டிங் அனிவசரிக்கு வமிலியா போய் என்ஜாய் பண்ணுங்க இடையில நான் எதுக்கு அத்தை. நான் அஸ்வின் பாரின்ல இருந்து வந்திட்டதா அப்பா சொன்னாரு அது தான் பாத்திட்டு போலாம் என்று வந்தனான். நான் வீட்டுக்கு போறன் நேரம் ஆகுது நீங்க ரெடி ஆகுங்க பை." 

அது வரை தாயினதும் சர்ஜிகாவினதும் விவாதத்தை ஒரு பார்வையாளனாக மட்டும் இருந்து பார்த்து வந்தவன் அவளது இறுதி வார்த்தை கேட்டு தாய் பேசும் முன் 

"ஏன் சர்ஜி நீயும் எங்க பாமிலி தானே எதுக்கு இப்பிடி பேசுறாய். நீயும் எங்க கூட வாராய் அவளவு தான் நான் மாமா கிட்ட பேசறன் ஓகே."      

"அதுக்கில்ல அஸ்வின் அது வ..."

"நான் தான் சொல்றன் இல்ல போ கோவிலுக்கும் போறதால் போய் சல்வார் மாத்திட்டு சீக்கிரம் வா. என்ன வருவாயில்ல?"

"ம்..... " என்று கலங்கிய கண்களுடன் தலை அசைத்தாள்.

மேகலை அவளை ஆதரவாக தோள் சாய்த்தாள்.  சர்ஜிகா அங்கிருந்து விலகியதும் 

"ரொம்ப நன்றிப்பா பாவம்டா அவள் அண்ணி ஹாட்டடாக்கில இறந்ததுக்கு அப்புறம் இப்ப தான்  சகஜ நிலைக்கு வந்திருக்கிறா நீ சொன்னதால தான் வெளியில வர சம்மதிச்சிருக்கா இல்ல என்றால் வந்தே இருக்க மாட்டாள். "

ஆதரவாக தனது தாயின் தோள்களை பற்றியவாறு "நீங்க கவலைப் படாதிங்கம்மா போகப்போக எல்லாம் சரியாகிடும்."

"ம்.. அவ உன் கூடவே  இருந்திட்டால்  நான் ரொம்ப சந்தோசப் படுவண்டா"

"அம்மா நீங்க எங்க சுத்தி எங்க வர்றீங்க என்று எனக்கு தெரியுது.  போங்க அப்பா வர்ற ரைம் ஆகுது போய் ரெடி ஆகுங்க." என்று தாயை அனுப்பி வைத்தவன் புவிக்காவின் நினைவில் தன்னை தொலைத்தான்.

சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்  ஸ்பென்சர் பிளாசாவுக்கு தனது நண்பர்களை சந்திக்க அஸ்வின் சென்றிருந்தான். அப்போது தான் அவன் புவியை முதல் முதலாய் பார்த்தான்.  

அவளது நீள் கூந்தலை ஒற்றை பின்னலாக தளரப்பின்னி  இளம் சிவப்பு வண்ண சுடிதார்  அணிந்து   அழகு தேவதையாக ஒரு சிறு குழந்தையுடன்  அந்த  மாலின் பார்க்கிங் லாட்டில் நின்று  விளையாடிக் கொண்டிருந்தாள்.  அஸ்வின் தனது காரை பார்க் செய்து விட்டு இறங்க எத்தனிக்கையில் தான் புவியை பார்த்தான்.  அவனின் முதல் பார்வையிலேயே  புவிகா  அஸ்வினின்  உயிர் வரை  ஊடுருவி செல்வதை அவனால் தடுக்க முடிய வில்லை.

மழலையோடு மழலையாக மாறி விளையாடிக்  கொண்டிருந்தவளை பூக்களை மொய்க்கும் கருவன்டுக் கூட்டம் போல் அவன் கண்கள் அவளையே மொய்த்தன.  அவனது கைபேசியின் அழைப்பில் தன் நிலை மீண்டான்.  அழைப்பில் காத்திருந்த நண்பனுடன் பேசிவிட்டு அஸ்வினின் கண்கள் மறுபடியும் அந்த அழகியை தேடிச் சோர்வடைந்தது. 

பார்க்கிங் லாட் முழுதும் தேடிப் பார்த்தும் அவளைக் காணாமல் மனம் சோர்ந்து போனான்.  இந்த மனநிலையோடு தனது நண்பர்களை சந்திக்க விரும்பாது  அவர்களிடம் அவசர வேலை என குறும் செய்தி மூலம் தகவல் அனுப்பி விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

விதி வலியது என்று பெரியவர்கள் சொல்லி சென்றது உண்மை தான். அஸ்வின் தன் நண்பர்களை சந்திக்க உள்ளே சென்றிருந்தானானால் கண்டிப்பாக அன்று புவிக்காவை அவன் பார்த்திருப்பான்.

ஏனெனில் அவள் அப்போது தான் தனது தாயுடன் மாலினுள் சென்றிருந்தாள். 

அதன் பின் அவளது நினைவுகள் அவனை ஆட்சி செய்ய தொடங்கின. எங்கு திரும்பினாலும் அவளது முகமே அவனுக்கு பிம்பமாக தோன்றியது. அஸ்வின் அப்பொழுது தான் தன்னை உணர்ந்தான். தான் அவள் மேல் கொண்ட காதலை உணர்ந்தான். ஆனால் அதனால் என்ன பயன் அவள் பெயர், ஊர், எதுவுமே தெரியாது ஏன் அவள் திருமணம் ஆனவளா என்று கூட தெரியாது. இருந்தும் அவன் இதயம் அவளுக்காக ஏங்கியது. 

தன் எதிர்காலத்தை எங்கெல்லாமோ தேடினான். அவனால் அவளை கண்டு கொள்ள முடியவில்லை. ஆனால் அவன் ஒவ்வோர் இடமாக அவளை தேடிச்சென்ற போதெல்லாம் அங்கு அவள் அஸ்வினின் அருகாமையிலேயே தான் நின்றிருந்தாள்.

அஸ்வினின் உள்ளுணர்வு அவள் தனது அருகிலேயே தான் இருக்கிறாள் என்று சூழுரைத்துக் கொண்டே தான் இருந்தது. ஆசை கொண்ட மனது என்று தனது இருதயத்துக்கு வலுக்கட்டாயமாக ஒரு பூட்டு போட்டு பூட்டி வைத்தான்.

இன்று அவளை சந்தித்து பேசியதில் அவன் போட்டு வைத்த பூட்டு சுக்கல் சுக்கலாக நொருங்கி விட்டது. 

"கண்ணா.... அஸ்வின்  கண்ணா.... அப்பா வந்திட்டார்டா நீ ரெடியாப்பா?"

 எதிர்காலம் பற்றிய இறந்தகால நிகழ்வுகளுக்குள் மூழ்கி இருந்தவன் தனது தாயின் அழைப்பில் நிகழ்காலத்துக்கு மீண்டு வந்தான். "இதோ ரூ மினிற்ஸ்ல வந்திடுறன்மா"

"சரி நாங்க கார்ல இருக்கோம் சீக்கிரமா வந்திடு கண்ணா!!!"

அஸ்வின் வந்ததும் அனைவரும் சர்ஜிகாவையும் அழைத்துக் கொண்டு பிரசித்தம் பெற்ற அம்மன் கோவிலுக்கு சென்றனர். 

தொடரும்!

Go to episode # 06

Go to episode # 08


{kunena_discuss:702}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.