(Reading time: 6 - 12 minutes)

06. உன்னிடம் மயங்குகிறேன்..! சொல்ல தான் தயங்குகிறேன்..! - ஸ்வேதா

டுத்து வந்த நாட்கள் நரகமாய் அமைந்தது கவிதாவிற்கு.

அர்ஜுன், "என்னை ஏம்மாற்றி வீட்டிற்க்குள் நுழைந்து எளிதாக வெளியே செல்ல முடியாது உன்னால், அவளிற்கும் சேர்த்து நீ அனுபவி” என்றான்.

உன்னிடம் மயங்குகிறேன்..!சொல்ல தான் தயங்குகிறேன்..!தொழிலில் வரவு செலவு கணக்குகள் பார்க்க சொல்லி தருகிறேன் என்று வேண்டுமென்றே கூடத்தில் அனைவரும் பார்க்குமாறு  அமர்த்தி கொண்டு அவளை குழப்பி எல்லார் முன்னிலையிலும் திட்டி தீர்த்தான்.

"கண்ணா ஆபீஸ் ரூம்குள்ளே டிஸ்கஸ் பண்ணலாமே??" என்று வேணியம்மா யோசனை சொல்ல 

"இல்லை பாட்டி தனியா உட்கார்ந்தால் கம்பெனி விஷயமா பேசமாட்டோம், இவள் பேசவும் விடமாட்டாள்" என்றான் இருவருக்கும் இரு மாதிரி முகத்தை காட்டி.

வேணியம்மவிற்கு மகிழ்ச்சியாகி போனது அவர்கள் இருவருக்கும் ராசாயகி விட்டது என்று.  வேண்டுதல் நிறைவேறும் மகிழ்ச்சி அவருக்கு.!!

கவிதவிற்க்குள் பயம் தொற்றிக்கொண்டது. இவன் ஏன் இப்படி நடந்துகொள்கிறான் என்று. விபரம் தெரிந்ததும் அவளை விரட்டி அடித்திருக்க வேண்டும், இல்லை இரக்கம் என்றால் பாட்டியம்மாவிடம் அவளை பற்றி சொல்லியிருக்க வேண்டும் ஆனால் அவனோ  அவன் சுற்றியிருக்கும் தருணங்களில் அவள் நாக்கு வறண்டு விடும் அளவிற்க்கு அதிர்ச்சி, இல்லை மிரட்டல் என்று வறுத்து எடுத்தான்.

ன்று பகல் நேரம் செய்வதற்கு ஏதுமில்லை அர்ஜுன் கொடுத்திருந்த பணியெல்லாம் முடிந்திருக்க சும்மா இருந்தவள் சமையல் அறையிலிருந்து சத்தம் வருவது கேட்டு அங்கே சென்று பார்த்தாள்.

சமையல்காரன் மாரிமுத்து கையில் காயம் பலமாக பட்டு ரத்தம் வழிய நின்றிருந்தான்.

"அயோ அண்ணே எப்படி ஆச்சு ரத்தம் ரொம்ப வருதே"

"பட்ட காலிலே படும் போல கண்ணு காலையில நசுக்கிக்ட்டேன், இப்போ வெட்டிகிட்டேன்"

"சரி சரி தண்ணி குடிங்க, வேலையெல்லாம் முடிந்தது தானே ரெஸ்ட் எடுங்க " என்றாள் கவிதா 

'இல்லைம்மா தம்பிங்க வரும் நேரம் தான் சாம்பார் கொதிக்க வைப்பேன் அது மட்டும் முடியல"

"அப்படியா அத நான் செய்யறேன் இருங்க" என்றப்படி சமையலில் இறங்கினாள்.

அவரும் பக்கத்தில் நின்று கொண்டு அவள் செய்வதையே மேற்பார்வை பார்த்தார். சாம்பார் செய்து முடித்தவள் காய்கள் பாதி நிலையில் வெட்டபட்டு இருப்பதை பார்த்து எதற்க்கு என்று விசாரிக்க அது வெஜ்ஜிடேபல் சாலட்ற்காக எனவும் அதையும் செய்து முடித்தாள்.

அர்ஜுனின் வறுத்தெடுப்பில் அவன் பேச்சில் தாழ்வுமனப்பான்மையில் இருந்தவளிற்கு கம கம சாம்பாரை அவள் சமையல் அறிவை மற்றவர் புகழ அர்ஜுனை எதிர்கொள்ளும் சக்தியின் அளவு எரியதுப்போல் உணர்ந்தாள்.

ஒரு வாய் சாப்பிட்ட அர்ஜுன் மாரிமுத்துவை புகழ அவன் பெருமையாக கவிதாவை கைகாட்ட அர்ஜுன் கொஞ்சம் அதிர்ந்தே போனான்.

"பரவாயில்லையே..., சூப்பரா செய்திருக்கீங்க" என்று மனமார்ந்து பாராட்டிய ஆகாஷின் பாராட்டளுக்கு கவிதா புன்னகை புரிய அர்ஜுனுக்குள் எரிமலை வெடித்தது.

அர்ஜுனும் ஆச்சர்யமாக "கணக்கு தான் வரவில்லை சமையலாவது நல்லா வருதே உனக்கு" என்றான் ஏளனமாக.

ளைப்பில் வேலை பளுவில் சோர்ந்து வீட்டினுள் வந்து அமர்ந்தான் கணேஷ். சௌமியா அவள் வளவளப்பை தொடங்கினாள்,

"கணேஷ் பாட்டிக்கு உடம்பு நல்லா தேரிட்டதாம், ஆகாஷ் இப்போ தான் ஸ்கைப் காலில் சொன்னான்"

எரிச்சல் மூண்டது அவனிற்கு. நீ இங்கே கடல் மலை தாண்டி இருந்தாலும் குடும்பத்தை ஸ்கைப்லே தான் நடத்துற சௌமி என்றான்.

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் முக்கால்வாசி பேர் அப்படி தானே இருகாங்க அதில் என்ன தப்பு.

"ஆமாம், உனக்கு உன் தம்பிங்க பாட்டியை தவிர உலகத்தில் வேற எதுமே தெரிய மாட்டேங்கற்தே அது தப்பா தெரியலையா "

"உங்களை நல்லா தானே கவனிசிக்குறேன், எல்லாம் நேரம் பார்த்து செய்கிறேன் தானே "

"ஆனால் உன் மனசு முழுக்க அவங்க தானே இருக்காங்க "

ஆரம்பித்துவிட்டது அன்றைய நாளிற்கான சண்டை. கணேஷ் சௌம்யா அமரிக்கா சென்று அங்கே வாழ்கை தொடங்கிய நாள் முதல் இந்த சண்டையும் ஆரம்பித்துவிட்டது.

என் தம்பி அர்ஜுன் இப்படி ஆகாஷ் அப்படி என்று எப்போதும் அவர்கள் பற்றியே தான் பேச்சு. கணேஷிற்கு அவள் அவனை பொருட்டாய் நினைக்கவே இல்லையே என்கிற  எரிச்சல்.

காரணமேயின்றி மச்சினர்கள் இருவர் மேலும் அவனுக்கு கோபம் கிளம்பியது. சௌமியா அன்பானவள், பாசமானவள் அதில் மயங்கி தான் திருமணம் செய்துக்கொண்டான் அவன்.அதுவே இன்று பெரும் தலைவலியாக.

அந்த பேச்சு விட்டால் அத்தை இன்றைக்கு  என்று தொடங்கி மாமியார் மாமனார் புகழ் பாட தொடங்கி விடுவாள். அவன் மனம் அவன் இரசனை என்று எப்போதும் அவள் கேட்டதேயில்லை. அவனுக்கு அது பெரிய குறையாகவே பட்டது.

காலை உணவிற்கு என்று மேஜை மீது எல்லாரும் அமர்ந்திருக்க அர்ஜுன் சாந்தமாக,

"மாரிமுத்து!! அதான் கவிக்கே நல்லா சமைக்க வருதே!! உங்களுக்கு வேற கை அடிப்பட்டிருக்கு லீவ் எடுத்துக்கோங்க " என்றான். 

கேட்ட கவிக்கு புரை ஏறியது. எல்லாருமே அதிர்ச்சியாக பார்க்க அர்ஜுன் வேணியம்மாவை நோக்கி "அவளுக்கு டைம் மானேஜ்மெண்ட் தெரியவேண்டும் பாட்டி " என்றான்.

"இல்லைங்கய்யா, என் கை சரி ஆகிடும்" என்று மாரிமுத்து இழுக்க 

"நீங்க ரெஸ்ட் எடுங்க பரவாயில்லை" என்று அழுத்தமாக அர்ஜுன் முடித்தான்.

தொடங்கியது கவிக்கு ஏழரை காலம். அவனே சமாதானமாக "நல்லா சமையல் செய்கிறாய் தானே எதற்கு வீணாக சமையலுக்கு ஆள் நிஷாகுட்டி" என்று கண் சிமிட்டி சென்று விட்டான்.

ஆகஷினுள் மணி அடித்தது. அண்ணனின் போக்கில் வேறுப்பாடும் நிஷாவின் பார்வையில் என்ன கண்டானோ,

"தினப்படி மெனு மாறும் அதெல்லாம் தெரிந்துக்கொண்டு உன் அடுத்த சவாலில்  இறங்கு” என்றுவிட்டு ஓடி மறைந்தான் அவன் அண்ணனுடன்.

பரிதாபமாக மாரிமுத்து 'என்னால் தானே கண்ணு உனக்கு இது, வாம்மா என்ன எது எப்படி என்று சொல்லி தந்து விட்டு போகிறேன் " என்றார்.

அவருக்கு கிடைத்த லீவில் ஊருப்பக்கம் போக ஆவல் பிறந்துவிட்டது.

வீட்டு மளிகை அதற்குண்டான பட்டியல் , காய்கறி பட்டியல், பாட்டியின் மாத்திரை விவரம், அர்ஜுனிற்கும் ஆகாஷிர்க்கும் நேரத்திற்கு ஏற்ப கொடுக்க வேண்டிய பானம், அதில் சர்க்கரை அளவு என்று பட்டியல் நீண்டு கொண்டே போக அயர்ந்தே போனாள் அவள். 

செயல்படுதலில் நிமிடம் கூட நிற்க என்று அவளுக்கு நேரம் கிடைக்காமல் போனது. குறை கூறிக்கொண்டே அர்ஜுன் நோகடித்தான். 

தனிமையில் கவி "என்னை ஏன் சார் இப்படி கொடுமை செய்றீங்க, நான் இந்த வீட்டை விட்டே போயிர்றேன் என்னை விட்டுடுங்களேன் நான் செய்தது தப்பு தான் " என்று கை எடுத்து  கும்பிட 

"நல்லா நடிக்கிறாய் "

"இல்லை இது உண்மை "

"நீங்களா உங்க எண்ணம் போலே எல்லாரும் முட்டாள் என்று நினைத்துக்கொண்டு வருவீங்களாம் , நாங்க கண்டு பிடித்து தண்டனை கொடுத்தால் கொடுமைகாரனாம்"

"ஐயோ.." என்று கூவி அவள் தலையை அடித்துக்கொள்ள 

அவள் செய்கை கோபத்தை கிளற நெற்றி மேலிருந்த கையை ஓரெட்டில் முன்னே வந்து இருக்கமாக பற்றி "இது அர்ஜுன் மணிவண்ணன் கோட்டை இங்கே என் சட்டம் தான் நீ குற்றவாளி தான் " என்று சீறினான்.

அவளுக்குள் சலிப்பு தோன்றியிருக்க வேண்டும் "அப்படியா அர்ஜுன் மணிவண்ணன் அப்போ என் பதிலடிக்கு காத்திருங்க, நான் புழு இல்லை சீறும் வகை " என்று சொல்லிவிட்டு தள்ளி விட்டு கர்வமாக அவனை விட்டு நகர்ந்து வந்துவிட்டாள்.

அதன் பின் தான் சீராக சுவாசிக்கவே முடிந்தது அவளால். கைகளை பார்த்தாள் மணிக்கட்டு சிவந்திருந்தது அவன் விரல்கள் பதிந்திருந்தது. நினைத்துப்பார்க்கையில் கண்ணுக்கு நேராய் பார்த்து அவள் படபடப்பை படித்திருப்பனோ அதன் பின் தான் கையில் இறுக்கம் தளர்ந்தது.

படுக்கையில் மூடிய அர்ஜுனின் விழிக்குள் அவன் நெஞ்சில் கை வைத்து பின் தள்ளி நான் சீரும் ரகம் என்றவள் வந்து நின்றாள். "நான்சென்ஸ் என்று சொல்லிக்கொண்டு படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்துக்கொண்டான்"

தொடரும்!

Go to episode # 05

Go to episode # 07


{kunena_discuss:700}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.