(Reading time: 8 - 15 minutes)

11. என்னுயிரே உனக்காக - சகி

"ச்சான்...."

".........."

"மச்சான்...."

"........."

Ennuyire unakkaga

"ஏ...ரகு."

"ஆ....என்னடா?"

"ஏன்டா?உனக்கு என்னடா ஆச்சு?நடுராத்திரில பேய் மாதிரி எந்திருச்சி வானத்தையே பார்த்துட்டு இருக்க??ஐயயோ....இன்னிக்கு வேற அமாவாசை ஆச்சே...!!!உன் பக்கத்துல நம்பி படுக்கலாமா???"

"என்ன நக்கலா?"

"இல்லை....கிண்டல்..."

"உன்கிட்ட ஒண்ணு சொல்லட்டா???"

"சொல்லு..."

"அந்த ஸ்ரேயாவை எங்கேயோ பார்த்தா மாதிரி இருக்குடா???"-அதைக் கேட்டவனுக்கு முகத்தில் 1000 வாட்ஸ் விளக்கு எரிவதுப் போல் பிரகாசித்தது.தன் மனதுள்ளே,

"அடேங்கப்பா....ஆதித்யா நினைச்சது நடந்துவிடும் போல இருக்கே!"-என்று எண்ணினான்.

"என்னடா யோசிக்கிற?"

"நானா??ச்சேச்சே...."

"நிஜமா?"

"அட நிஜமா தான்! நாங்கலாம் எக்ஸாம் வச்சாலே யோசிக்க மாட்டோம்..."

"நீ எப்படிடா சி.பி.ஐ.ஆன?"

"அதான் மச்சான்....தெரியலை???எவனோ செய்வினை வச்சிட்டான்."

"நீ திருந்தவே மாட்டடா!"

"நீ வேணும்னா முயற்சி பண்ணு."

"ஆள விடுடா!!!!"

"அது சரி....எனக்கு தெரிஞ்சிடுச்சி!!!"

"என்னது?"

"என்னது?ஆ....வானம்...நட்சத்திரம்...நீ,நான்,டேபிள்,பெட்,எல்லாமே தான்."

"சரி தான்...எனக்கு புரிஞ்சிடுச்சி!"

"என்னது?"

"நீ லூசாயிட்டன்னு."

"என்னை அசிங்கப்படுத்தலைன்னா...ஒருத்தனுக்கும் தூக்கம் வராதே!!!!"

"பேசாம தூங்குடா!"

"மச்சான்...உன்கிட்ட ஒண்ணு கேட்கட்டா?"

"என்ன?"

"உனக்கு தூக்கம் வருதா?"

"ம்?????"

"இல்லை...பசிக்குது...ஆனா,சாப்பிட முடியலை.களைப்பா இருக்குது...ஆனா,தூக்கம் வரலை.இப்படி எதாவது இருக்கா?"

"என்னை ஐ.சி.யூ.லையா அட்மிட் பண்ணி இருக்காங்க??நல்லா தூக்கம் வருது.பேசாம தூங்கவிடு!"

"இவன் ஸ்ரேயாவைப் பற்றி பேசி நம்ம தூக்கத்தை கெடுத்துட்டு....இப்போ பேசாம இருன்னு சொல்றானே!!!ஸ்ரேயாவைப் பார்த்தா மாதிரி இருக்குன்னு சொல்றானே???ஒருவேளை கதையில டிவிஸ்ட் வருமோ??இரண்டு பேருக்கும் முன்னாடியே ரொமான்ஸ் போயிருக்குமோ??இல்லை...இனி தான் ஆரம்பிக்கப் போகுதா?அடேய்....ஆதித்யா இவன் கூட அனுப்பி என் தூக்கத்தை கெடுத்துட்டியே!!!!இன்னிக்கு முழுசும் உனக்கு தூக்கம் வராது பார்டா."-மனதுள்ளேயே சபித்தான் அவன்.

ந்நேரத்தில் நிரஞ்சன் ஆதித்யாவை சபித்தானோ??அவன் கூறியதுப் போலவே உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தான் ஆதித்யா.அவன் மனம் பல எண்ணங்களில் லயித்தது.

"இனி...அடுத்தக்கட்டம் என்ன?அன்று நம்மை சுட வந்தது யார்?எந்த நோக்கம்?இந்நேரம் ரவி இங்கே வந்திருக்க வேண்டுமே!!!ரகு திடீரென்று மும்பை செல்ல காரணம் என்ன?நிச்சயம் அவன் எதையோ மறைக்கின்றான்??என்ன அது?ராஜசிம்மபுரத்திற்கு நான் செல்ல நிச்சயம் ரகு உடந்தை தான்?என்னை தனிமைப் படுத்த காரணம் என்ன?மும்பையில் என்ன நடக்கிறது??ரகு ஏன் இங்கு வரவில்லை?"-இப்படி மூளை யோசிக்க மனமோ,

"ரகுவிற்கு எப்படியாவது நல்ல வாழ்க்கையை அமைத்து தர வேண்டும்.கீதாவின் நினைவுகளில் இருந்து அவனை எப்படியாவது வெளியே கொண்டு வர வேண்டும்.அவனை ராஜசிம்மபுரம் அழைத்து வர வேண்டும்.ஸ்ரேயா யார் என்று அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு தான்.ஆனால்,எப்படியாவது இருவருக்கும் இடையேயான உறவினை வெளியே கொண்டு வர வேண்டும்."-என்று தன் நண்பனின் வாழ்க்கையை எண்ணி கவலைக் கொண்டது.

"கண்ணா..."

"................"

"கண்ணா."

"ஆ....என்னம்மா?"

"என்னப்பா..இன்னும் தூங்கலையா?"

"தூக்கம் வரலைம்மா..."

"எதையாவது யோசிச்சுட்டு இருக்கியா?"

".......ஆமாம்மா...நிறைய விஷயம் குழப்பமா இருக்கு."

"என்னடா கண்ணா???இங்கே வா இப்படி உட்காரு!"-அவன் மெத்தையில் அமர்ந்தான்.

"வாழ்க்கையில குழப்பம் வராம இருக்காது.அந்த குழப்பத்தையும் சகிச்சிக்கிட்டு அதையும் ஜெயித்துக் காட்றவன் தான் தலைவன்.நீ எல்லா விஷயத்துலையும் தலைவனா இருக்க...சில சின்ன விஷயத்துக்காக துவண்டுப் போயிடலாமா?வா முதல்ல தூங்கு!"

"அம்மா....இன்னிக்கு நான் உங்க மடியில படுத்து தூங்கவா?"-அத்தாயின் கண்களில் கண்ணீர் திரண்டது.அவர் கைகள் அவன் கன்னத்தை வருடின.

"என்னடா நீ?புதுசா கேட்கிற?என் மடியில நீ தானேடா படுத்து தூங்குவ?வா...படுத்துக்கோ!"-ஆதித்யா அவர் மடியில் தலை சாய்ந்தான்.

"அம்மா...எதாவது பாட்டு பாடுறீயா?"

"சரி கண்ணா....நீ தூங்கு!"-ராஜேஸ்வரி தன் இனிமையான குரலில்,

 'கருப்பு நிலா...நீ தான் கலங்குவதேன்?துளி துளியாய் கண்ணீர் விடுவது ஏன்?சின்ன மானே,மாங்குயிலே!உன் மனசுல என்ன குறை?பெத்த ஆத்தா போல் இருப்பேன்.இந்த பூமியில் வாழும் வரை!எட்டு திசை யாவும் கட்டி அரசாள வந்த ராசா நீ தானே!'-என்று அவனுக்கு தாலாட்டு பாடினார்.அந்த இனிமையான ராகத்தில்,தன்னையே மறந்து சிறு குழந்தையைப் போல் உறங்கிப் போனான் ஆதித்யா.ஆம்....குழந்தைகள் எவ்வளவு பெரியவர்களாய் வளர்ந்திருக்கட்டும் பாசம் ஊட்டி வளர்த்த தாயானவளுக்கு அவன் கைக் குழந்தை தானே???தாய் மடி சேரும் பொழுதினில் கிடைக்கும் சுகமே அலாதி தான்!!!!இனி...யாராவது கடவுள் அனுகிரகம் எனக்கு கிடைத்துவிட்டது என்று உங்களிடத்தில் கூறினால்,காலரை உயர்த்தி கூறுங்கள் எனக்கு என் தாயின் அனுகிரகம் உள்ளது என்று!!என்ன நான் கூறுவது சரிதானே?????

றுநாள் காலை.....

செங்கதிரவன் தம்முடைய அழகிய ஒளி பிழம்பினால்...உலக மக்கள் அனைவரையும் மெல்ல விழித்தெழ செய்தான்.இரவின் அழ்ந்த அரவணைப்பு கலைய மெல்ல கண்விழித்தான் ஆதித்யா.இன்னும் தான் தன் அன்னையின் மடியில் உறங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தான்.எழும்ப மனம் இல்லாவிடினும்,மெல்ல எழுந்தான்.

"என்னடா கண்ணா?சீக்கிரமா எழுந்துட்ட?"

"நீ ராத்திரி முழுசும் தூங்கவே இல்லையாம்மா?"-அவனது பேச்சில் தொனிந்த வித்தியாசமே அது வரை அவர்களிடத்தில் இருந்த ஒரு சிறு விலகலை உடைத்து எறிந்தது.

"நான் தூங்குன அப்பறம் நீ போய் தூங்கி இருக்கலாம்ல?"

"நீ எழுந்துடுவியே?"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.