(Reading time: 9 - 17 minutes)

04. வாராயோ வெண்ணிலவே - சகி

னவினில்...

தன்னிறைவு அடைய என் மனம்...

நிஜத்தினில் தேடி அலைந்தது,

Vaarayo vennilave

கனவான உன்னை!!!!

காதலியே!!!!

அன்றைய விடியல், வித்தியாசமாய் பட்டது ரஞ்சித்திற்கு!!!

வழக்கத்திற்கு மாறாக அவனது மனம்,எதையோ அவனிடம் கூற முயன்றப்படி தோற்றது.

ஜன்னலின் திரைச்சீலையை விலக்கினான்.

அருமையான தென்றல் காற்று அவனை வருடியப்படி சென்றது.அதன்,தீண்டல்...அதன் தீண்டலை,எத்தனை முறை அவன்,அவளின் தீண்டலோடு ஒப்பிட்டு பார்த்திருக்கிறான்.????

எத்தனை முறை அந்த தென்றலானது,அவளின் தீண்டலின் முன்னே தோற்றிருந்தது..??

கண்களை மூடினான்.

அவளின் கால் கொலுசின் ஒலி,உடலின் ஒளியை( உயிரை) அப்படியே கரைத்து விடும் அல்லவா?அந்த கண்களின் தெரியும் இரக்கம்,அல்ல...தைரியம் அது தானே!!! அவனை, அவள் முன்னே தடுமாற வைத்தது.

அந்த பேச்சு,அதில் இருக்கும் இனிமை???

பெருமூச்சை வாங்கினான்...

"தம்பி!"-அவனுக்கு உதவியாய்,இருக்கும் பரசுராமன் அவனை அழைத்தார்.

"என்னப்பா?"

"சாப்பிடலையா தம்பி?"

"இல்லைப்பா! பசிக்கலை!"

"தம்பி...நீ தப்பா எடுத்துக்கலைன்னா,ஒண்ணு சொல்லட்டா?"

"சொல்லுங்கப்பா!"

"நீ இப்போ சரியில்லைப்பா!

நீ பழைய மாதிரி இல்லை.உன்      கல்யாணத்துக்காக அம்மா ஏங்கிட்டு இருக்காங்க!எனக்கு தெரியும்...நீ அந்த கார்த்திகாக்காக தான் இங்கே வந்திருக்கன்னு! எத்தனை நாள் தான்,தனியா வாழ போற?"

"மனசுல அவ நினைவு இருக்கிற வரைக்கும்!"

"தம்பி...இது கதைக்கு சரிப்படும்.நிஜத்துக்கு இல்லை!"

"நிஜத்துல வாழணும்னு நினைக்கறதை நடத்த தான்,கற்பனையில நாம உயிர் கொடுக்கிறோம்!"

"அந்த பொண்ணு,உன்னை விட்டுட்டு போனது கஷ்டமாக தான் இருக்கு!என்னால,அவளை மறக்க முடியாது.இந்த வீட்டுக்கு கிடைத்த மஹாலட்சுமி அவ!"

"இழந்துட்டேன்! அந்த மஹாலட்சுமியை நான் இழந்துட்டேன்."

"தம்பி!"

"நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்!"

"சரிப்பா!"-கார் சாவியை எடுத்து கொண்டு கிளம்பினான்.

ண்கள் புலப்படுத்தும் பாதையை பார்த்து பயணித்தான்.

திடீரென பயணத்தை பாதியில் நிறுத்தியவன், காரிலிருந்து கீழே இறங்கினான்.

அங்கே வரிசையாக நின்று,காடு போல தோற்றம் தந்தன மரங்கள்.

அதில்,ஒன்றில் தானே!! அவன்...அவன் பெயரையும்,அவள் பெயரையும் எழுதி வைத்தான்.

வித்தியாசமான பிறவி அவள்,மரத்திற்கு வலிக்கும் என்று அவள் துடித்தாளே...!

ன்று....

"ஏ...நம்ம பேரை,இந்த மரத்துல எழுதட்டா?"

"வேணாம் ரஞ்சு...அதுக்கு வலிக்கும்!"

"ஙே..!மரத்துக்கும் வலிக்குமா?"

"ஆமா!அதுக்கும்,உயிர் இருக்கும்!"

"ஹே..!லூசு! மரத்துக்கு வலிக்காது!"

"ரஞ்சு...!"-அவன்,அவள் பேச்சை கேட்கவில்லை. எழுதினான்.

"ஏன் நீ இப்படி எல்லாம் பண்ற?என் பேச்சை கேட்கவே மாட்டியா?"

"இப்போ! என்ன பண்ணிட்டேன்?மரத்துல தானே எழுதினேன்?"

"உன் மேல,யாராவது கத்தியை வைத்து கீறினா..

அப்போ தெரியும்!"-அவனை,விட்டு விலகி தனியாய் நின்றாள்.

சிறிது,நேரம் மௌனமாய் நின்றவன்...

பின்,அவளருகே சென்று நின்றான்.

"என் மேலேயும் அது மாதிரி எழுதி இருக்காங்க!"

".............."-கேள்வியாய் பார்த்தாள்.

"நீ தான் அது! என் மனசுல,உன் பெயரை ஆழமா எழுதினது."

"ரஞ்சு!"-அவன்,அவளை அணைத்துக் கொண்டான்.

தன்னவனின்,காதலின் ஏக்கத்தை உணர்ந்தவள்...

மௌனமாய் நின்றாள்.

"எனக்கு,அப்போ வலிக்கலையே!

நீ எப்படி மரத்துக்கு வலிக்கும்னு சொல்ற?"-அவனது,கேள்விக்கு அவளிடம் பதில் இருந்திருக்கும்????

னால்,இன்று வலிக்கிறது...

அவள்,அன்று எழுதிய பெயர் இன்று...உயிரையே அறுக்கிறது.

அவன்,அந்த மரத்தின் அருகே சென்றான்.அதில்,

அவர்களது பெயர் எழுதியிருந்தது.

அதை வருடியவன் மனதில்,ஆயிரமாயிரம் எண்ணங்கள்!!!

'உனக்காக,அவ அன்னிக்கு சண்டைப் போட்டா! இதில் எழுதுனது உன்னை விட்டும் அழியலை,என் மனசுலையும் அழியலை."-துன்பங்கள், அடுக்கடுக்காய் தாக்க...கண்ணீரானது வற்றி,கானலான புன்னகை தோன்றுமாம்.அதைப் போல தான் அவனுக்கும்,அந்நேரம் கசந்த நகை அரும்பியது.

"விஷ்வா!"

"என்ன நிலா?"

"அன்னிக்கு ஒரு பொண்ணை பற்றி சொன்னல்ல??"

"ஆமாம்!"

"அவ எங்கே இருப்பான்னு தெரியுமா?"

"அது தெரிந்தால்...நான் ஏன் உன் கூட சுத்த போறேன்??"

"எது?"

"சு...சு...சும்மா!அது தெரியாது! ஆனா,இதே ஊர்ல தான் இருக்கா!"-கூறி கொண்டிருந்தவன் பார்வை,எங்கோ பட,அவனது கண்கள் விரிந்தன.

"நிலா...நிலா...நிலா...!"

"என்னடா?"

"அதோ,அதோ! அந்த பொண்ணு தான் நிலா!"

"டேய்! நான் தான்டா நிலா!"

"ஐயோ! அவ வைஷ்ணவி!"

"எங்கே?"

"அதோ!அந்த வெள்ளை கலர் சுடிதார்!"-அவன்,கூறிய இடத்தில் அவள் பார்த்தாள்.

"அந்தப் பொண்ணா?"

"ம்..."

"நிஜமா சொல்லு அந்தப் பொண்ணா?"

"உன் மேல சத்தியமா அவ தான்!"

"அப்போ..இரு! நான் போய் பேசிட்டு வரேன்!"

"ஹே!!! விளையாடாதேம்மா! நானே அதிகமா பேசினது இல்லை."

"நீ ஸைடு பிட்! நான் ஹீரோயின்.நான் போய் பேசுறேன்!"

"இது எல்லாம் போய் டயலாக் பேசுதே!"

"விடுடா!விடுடா!"-வெண்ணிலா,   அப்பெண்ணின் அருகே சென்றாள்.

"க்ஸ்யூஸ்மீ!"-வைஷ்ணவி திரும்பினாள்.

"ஹாய்!"

"நீங்களா?எப்படி இருக்கீங்க??"

"நல்லா இருக்கேன்மா! நீ??"

"நல்லா இருக்கேங்க!"

"இந்த ஊர்ல  தான் இருக்கியா?"

"ஆமாம்!!சித்தப்பா கூட!"-அவர்கள் என்ன பேசி கொண்டிருந்தனர் என விஷ்வாவிற்கு கேட்கவில்லை.

வைஷ்ணவி எதார்த்தமாக திரும்ப,விஷ்வா அவள் பார்வையில் பட்டான்.

சட்டென,முகம் மாறியவளின் போக்கினை கண்டு,

"என்னாச்சு வைஷு?"-என்றாள் வெண்ணிலா.

"அது...ஒண்ணுமில்லைங்க! அதோ,இருக்கார் பாருங்க!"-விஷ்வாவை சுட்டினாள்.

"ஆமா!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.