(Reading time: 8 - 15 minutes)

என்ன தவம் செய்து விட்டேன் – 01 - புவனேஸ்வரி கலைச்செல்வி

" ளமை இதோ இதோ

இனிமை இதோ இதோ

காலேஜ்ஜு  டீனேஜு பெண்கள்

எல்லோர்க்கும் என் மீது கண்கள் "

Enna thavam seithu vitten

என்று உல்லாசமாய் பாடிக் கொண்டிருந்தார்  நாற்பத்தைந்து வயது இளைஞன் அர்ஜுன்  சார்.

" என்ன அங்க சத்தம் ?" என்று குரல் கொடுத்தார் அவரின் காதல் மனைவி சுமித்திரா ...

" ஒண்ணுமில்ல சுமி .. நான் பூச்செடிக்கு தண்ணி காட்டிகிட்டு இருக்கேன் " என்றார் பவ்யமாய் ..

" அதோட நிறுத்திகோங்க..எனக்கு தண்ணி காட்ட நெனச்சிங்க, குடிக்க காபி கூட கிடைக்காது " என்று வீட்டினுள் இருந்தபடி செல்லமாய் மிரட்டினார் சுமித்திரா  ..

" ச்ச ச்ச என்ன சுமிம்மா  இப்படி சொல்லிட்ட.. உன்னை போயி ஏமாத்த முடியுமா ? "

" ஆமா ஆமா , ஏமாறாமதான்  உங்களை காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டேன் பாருங்க " என்றார் சுமி  காதலுடன் ..

ஒரு வசீகர புன்னகையுடன் அந்த வீட்டை பார்த்து ரசித்து நின்றார் அர்ஜுன்  ... இளம் வயதில் இருந்தே ஓயாத உழைப்பில் முன்னேறி, இன்று பளிச்செனும் மின்னும் செல்வந்தர்களில் ஒருவராக மின்னுபவர் அவர்.. அவரின் வெற்றியின் சின்னமாய் கட்டியிருந்த அந்த பிரம்மாண்டமான வீட்டை பெருமையாய் பார்த்து ரசிப்பது  அவரது தினசரி வாடிக்கையில் ஒன்று.

நிச்சல் குளத்திற்கு  அருகில் இருந்த அவரது தோட்டத்திற்கு நீர் பாய்ச்சியபடி பாட்டுப் பாடிக் கொண்டிருந்தவருக்கு காபி கொண்டு வந்து நீட்டிய மனைவியை காதலுடன் பார்த்தார் அவர்.

" பார்வை எல்லாம் பலம்மா இருக்கே ... நமக்கு கல்யாண வயசுல ஒரு பொண்ணு இருக்கா , அது நியாபகம் இருக்கட்டும் "

" ஹ்ம்ம் உன் முகத்தை பார்க்காதவரை நியாபகம் இருக்கு சுமிக்கண்ணு  ... பார்த்தாதான் இப்படி ஆகிடுறேன் .. "

" போதுமே , கொஞ்சம் விட்டா என்னை வெச்சு ஒரு காவியமே எழுத ஆரம்பிச்சிடுவிங்க ... இன்னைக்கு என்ன விசேஷம்னு மறந்து போச்சா ? "

" எப்படி மறக்கும் ? பாப்பா எழுந்துட்டாளா  ? "

" யாரு உங்க பொண்ணு இவ்வளவு சீக்கிரம் எழுந்துட்டாலும் "

" இன்னைக்கு ஒருநாள் அவளை சீக்கிரமா எழ வைக்க வேண்டியதுதானே டீ ? அவங்க எல்லாரும் வந்திடுவாங்க இப்போ  ..சீக்கிரம் போ .. போயி அவளை எழுப்பு " என்று மனைவியை அவசரப்படுத்தினார் அர்ஜுன்  ..

" அதானே பார்த்தேன்  என்னடா இன்னும் என் வாய  கிளறாமல் இருக்கிங்களேன்னு ..அதெப்படிங்க அப்பாவுக்கும் பொண்ணுக்கும்  ஒருவரை ஒருவர் கொஞ்சும்போது நான் தேவை இல்லை .. இதுவே ஏதும் காரியம் ஆகணும்னா, இல்ல திட்டனும்னா மட்டும் என் ஞாபகம் வருது "

" அடடே , என் ராசாத்தி, என் பஞ்சவர்ணக்கிளி, என் பட்டு , என் தங்கமே , என் வைரம் , என் வைடூரியம் , என் செல்லமே "

" எதுக்கு இவ்ளோ ஐஸ் ?"

" போயி பாப்பாவை எழுப்பிடு செல்லம் " என்று நயமாய் பேசிய கணவரை கோபமாய் முறைக்க முயற்சித்து தோற்றுத்தான் போனார் சுமித்திரா . அக்கம் பக்கம் பார்த்து விட்டு " என் செல்லம்  " என்று சொல்லி கணவரின் கன்னத்தை கிள்ளிவிட்டு ஓடினார் அவர்  .. அர்ஜுனின்  சிரிப்போசை அவரை பின்தொடர்ந்தது ..

" சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு ?

தென்றலே உனக்கெது  சொந்த வீடு ?

உலகம் முழுதும் பறந்து பறந்து

ஊர்வலம் வந்து விளையாடு "

பாடகி பி சுசிலா அவர்களின் குரல் அவளது அறை  முழுதும் நிறைந்திருந்தது. என்னதான் அவள் இந்த நவநாகரீக உலகத்தில் பூத்த புதுமலர் என்றாலும் அவளது ரசனைகள் என்னவோ 50-70 வதற்குள் தான் அடங்கி இருந்தது . அதிலும் பழைய பாடல்கள் கேட்பது என்றாள்  அவளுக்கு அத்தனை பிடித்தம் .. அவளே சில நேரம் சுமித்திராவிடம்

" நான் ஒரு நாற்பது வருஷத்துக்கு முன்னாடி பிறந்து  இருக்கணும் மம்மி .. உங்க நல்ல நேரம் நான் உங்களுக்கு இப்போ பொண்ணா  பிறந்துட்டேன்  " என்பாள்... சுமித்திராவோ " அட போடி " என்று அவளை முறைத்து செல்ல, அர்ஜுன்  " சரியா சொன்ன டா பட்டுகுட்டி " என்று அவளை செல்லம் கொஞ்சுவார் ..

அந்த நினைவுகளுடன்  அறைக்குள் நுழைந்தவர் அவளது போர்வையை விளக்கி  பார்க்க, சுமித்திராவை வரவேற்றது அவளது தலையணைதான் ..

" மண்ணில் நடக்கும் நதியே

உன்னை படைத்தவரா

இந்த பாதை சொன்னார்

உங்கள் வழியே உங்கள் உலகு

இன்ப வழிதான் எந்தன் கனவு "

என்று பாடலோடு இணைந்து பாடிக் கொண்டு பால்கனியில் நின்று கொண்டி இருந்தாள் நமது கதாநாயகி  சாஹித்யா !!

வட்ட முகம், கண்ணனின் வண்ணத்தை வரமாய் பெற்றவள் , சற்று பருமனான உடல்வாகு .. பார்த்தவுடனே " வாவ் " என்று மயங்கும் தோற்றம் இல்லாத எளிய பெண் . எனினும் அதைப்பற்றி துளியளவும் எண்ணம் இல்லாமல் நம்பிக்கையும் அளவு கடந்த அன்பையுமே அழகின் வஸ்திரமாய், அஸ்திரமாய் பெற்றவள்.

" குட் மோர்னிங் பேபி "

" குட் மோர்னிங் அம்மா " என்றவாறே  ஓடி வந்து சுமித்திராவை கட்டிக் கொண்டாள் ..

" ஹ ............. "

" அம்மா நோ ... அதை மட்டும் சொல்லிடாதிங்க ப்ளீஸ்... நான் இத்தனை வருஷம் கட்டி காத்த வரலாறு உங்க ஒரு வார்த்தையில் தவிடுபோடியாகிடும் ப்ளீஸ் "

"சரி சரி ... அவங்க எல்லாரும் வந்துகிட்டு இருப்பாங்க .. நீ இன்னும் குளிக்காம நிற்குற..உங்கப்பாவுக்கு பீ பி ஏறும்முன்னே  கிளம்பி வாடா செல்லம் .. ஆமா எப்போ எழுந்த நீ ? "

" ஹா ஹா.. அதுவாம்மா .. நீங்க அப்பாவின் கன்னத்தை கிள்ளி  செல்லம் கொஞ்சும்போதே எழுந்துட்டேனே " என்றாள்  பரம சாதுவாய் .. மகளின் வார்த்தையை கேட்டதுமே சுமியின் முகம் செவ்வானமாய் சிவந்தது .. அதை மறைத்தவாறு

" சரி சரி .... பேசிகிட்டே நிக்காத பேபிம்மா ... உனக்கு டிரஸ் எடுத்து வைக்கிறேன் .. சீக்கிரம் ரெடி ஆகு.. அவங்க  வந்திடுவாங்க " என்று அவளை அவசரப்படுத்தினார் ..

" கூல்  டவுன் அம்மா.. என்னை பார்க்க வர்றவங்க, எனக்காக வைட் பண்ண மாட்டாங்களா ? நான் ரெடி ஆகுறேன் நீங்க போயி சமையல் வேலைய பாருங்க .. "

" சரி டா.. "

" அம்மா இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன் "

" என்னடீ ? "

" ஒரு கன்னத்தை கிள்ளுனா மறு கன்னத்தையும் கிள்ளன்னும்னு சாஹித்யாவின் அகராதியில் குறிப்பிட்டு இருக்கு .. சோ மறக்காமல் அப்பாவின் மறுக் கன்னத்தையும் கிள்ளிடுங்க  " என்று சொல்லி சுமித்திராவின் கைகளில் சிக்காமல் ஓடியே விட்டாள்  அவள் ...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.