(Reading time: 23 - 46 minutes)

இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 10 - புவனேஸ்வரி கலைச்செல்வி

காலேஜில் எப்போதும் போல, அந்த மரத்தடியில் அமர்ந்திருந்தாள்  முகில்மதி. ஒருபுறம் அன்பெழிலன் வந்துவிட்டான் என்ற சந்தோசம் இருந்தாலும் இன்னொரு புறம் அவனுடன் ஒரு இடைவெளியுடன் பழக வேண்டியதாய்  உள்ளதே என்று சலித்துக் கொண்டாள் ...

தொலைவான போது  பக்கம் வந்தவள், பக்கம் வந்தபோது தொலைவாவதோ ?

என்ற பாடல் வரிதான் அவளுக்கு ஞாபகம் வந்தது .. ஆனால் ஒன்று மட்டும் அவளுக்கு நன்றாய் புரிந்தது. அன்பெழிலனுக்கு பொறுமை அதிகம். அவன் இடத்தில் வேறொருவன் இருந்திருந்தால், இவளது மௌன போராட்டத்திற்கு என்றோ சூறாவளியாய் மாறி இருப்பான். அதை நினைத்து அவள் இதழில் புன்னகை அரும்பிய நேரம், அங்கு வந்து கோபமாய் அமர்ந்தால் அவளது தோழி கீர்த்திகா

Ithanai naalai engirunthai

" என்னாச்சு கீர்த்ஸ் .. காலையிலேயே செம்ம ஜாலி மூட்ல இருக்க போல " - முகில்மதி

" ஏண்டி சொல்ல மாட்ட ? வரியா , ரெண்டு பேரும்  ஒண்ணா டூயட் ஆடலாம் "

" ஆடிட்டா போச்சு .. ஹிந்தி சாங்கா இல்ல தமிழ் சாங்கா ?"

" இப்படியே பேசிகிட்டு இருந்த நான் எழுந்து போயிடுவேன் மதி.. நான் ஆல்ரெடி கெட்ட  கோவத்துல இருக்கேன் "

" அதான் அகத்தின் அழகு முகத்தில் தெரியுதே செல்லம் .. சரி சொல்லுடீ என்னாச்சு "

" ப்ச்ச்ச் எல்லாம் நம்ம மஞ்சு பத்திதான் "

" ஏன் அவளுக்கென்ன? ராஜேஷ் விஷயமா"

" ஹ்ம்ம் பார்க்க பாப்பா மாதிரி இருக்குற உனக்கு கூட தெரியுது அவ லைப் ல இருக்குற ஒரே வில்லன் அவன் தான்னு .. ஆனா இவ விட்டா அவனுக்காக கோவிலே கட்டிடுவா போல " என்று உண்மையான வருத்தத்தில் சொன்னாள்  கீர்த்தி

" விடுடீ .. அவ என்ன சின்ன பொண்ணா  ? "

" அதைத்தாண்டி நானும் சொல்றேன் .. அவ சின்ன பொண்ணா  ?? இந்த ஏஜ் ல தானே பெண்களுக்கு ஆபத்து அதிகமே "

" நமக்கு புரிஞ்சு என்ன பண்ணுறது கீர்த்ஸ் ? மஞ்சு புரிஞ்சுக்கனுமே "

" ம்ம்ம்ம் நாம்தான் ஏதாச்சும் பண்ணனும் "

"கண்டிப்பா கீரத ..  அவன் நல்லவன் இல்ல ..அவன்கிட்ட மஞ்சுவை விட்டிட கூடாது .. மஞ்சு பாவம் ... மஞ்சு ...  " என்று படபடத்த  முகில்மதியின் கை விரல்கள் நடுங்கின ... அதை கவனித்த கீர்த்திகா அவள் கரங்களை பிடித்துக் கொண்டாள் ..

" ஹே என்னடி ஆச்சு உனக்கு ? ஏன் இப்படி நடுங்குற "

" இல்ல ... கீர்த்ஸ்.... அவ பாவம் "

" ச்சு .... விடு மதி ..நாம அவளை பார்த்துக்கலாம் ... நீ பயப்படாதே "

" ம்ம்ம்ம் " என்று சொன்னாலும் அவளால் பயப்படாமல் இருக்கமுடியவில்லை .. அவளும் இதுபோன்ற சூழ்நிலையில் தானே இருந்தாள்  ? அன்று அன்பெழிலன் இல்லாமல் போயிருந்தால் ?? எண்ணி பார்க்கவே நடுங்கினாள்  முகில்மதி... அதற்குள் கீர்த்திகா பேச்சை மாற்றிவிட தற்பொழுது அந்த சிந்தனைகளுக்கு முற்றுபுள்ளி வைத்தாள் முகிலா ..

று நாட்கள் கடந்ததே தெரியவில்லை .. நாளை இங்கிருந்து சென்று விடுவோமே என்ற கலக்கத்தில் இருந்தார் பாட்டி .. அதே நினைவில் தான் இருந்தாள்  தேன்நிலா.. முதல் நாள் அங்கு வந்தபோது அவளுக்கு எந்த கோபமும் வரவில்லை என்றாலும் கூட, பெற்றோருக்கு தெரியாமல் மதியழகனின் வீட்டில் இருப்பது தவறோ ? என்று எண்ணினாள் ..பிறகு அவளே சமாதானமாய் " தூரத்தில் இருக்கும் பெற்றோரை பயமுறுத்துவானேன் ? " என்று எண்ணிக் கொண்டாள்.

 பாட்டியின் அன்பான உபசரிப்பிலும் மதியழகனின் கண்காணிப்பிலும் நன்கு குணம் ஆகி இருந்தாள்  தேன்நிலா .. அங்கிருந்த பணியாட்கள் கூட அவளை தலை மீது வைக்காத குறையாய் தாங்கினர் .. அன்றும், கடற்கரையோரம் பாடல் கேட்டுக் கொண்டு நடக்க ஆசைப்பட்டு கிளம்பினாள்  தேன்நிலா ..

" நிலாம்மா  "

" சொல்லுங்க அய்யா ... என்னை நிலாம்மான்னு கூப்பிடாதிங்க .. நிலான்னே சொல்லுங்கன்னு எத்தனை தடவை சொல்றது அய்யா ? "

" நீங்க கூடத்தான் நான் முத்துன்னு கூப்பிட சொன்னா அய்யான்னு கூப்பிடுறிங்க  ? "

" ஹா ஹா .. அவர் உங்களை அய்யான்னு தானே சொல்றாரு "

" ஆமா ... "

" அப்போ நானும் அப்படியே கூப்பிடுறேனே "

" ஹா ஹா மதி தம்பிக்கு ஏற்ற ஜோடிதான்மா நீங்க ... சரிம்மா .. இப்போ எங்கயாச்சும் வெளில போறீங்க போல .. "

அவர் சொன்ன விதத்தில் கோபத்திற்கு பதிலாய் நாணம்  தான் அவள் முகத்தில் பூத்தது .. " கள்ளன் அவன் மனசை என்கிட்ட தவிர மத்த எல்லாருகிட்டயும் சொல்றான் போல " என்று சொல்லிக் கொண்டாள் .. முத்தையாவிடம்

" உங்க தம்பி என்னை தனியா போக விட்டுருவாரா அய்யா ? சும்மா கடலோரம் காலாற நடக்கணும் போல இருந்துச்சு அதான் " என்றாள்  புன்னகையுடன் .. மதியழகனை பற்றி பேசும்போது என்னதான் அவள்  சலிப்புடன் பேச நினைத்தாலும் அவளது குரல் குழைந்து தழைந்து தான் போனது...

" சரிம்மா .. நான் பக்கத்துல தான் இருக்கேன் ஏதாச்சும் வேணும்னா குரல் கொடுங்க "

" அதற்கு அவசியமே இல்லை அய்யா .. உங்க நிலாம்மாவுக்கு துணையா தான் நான் கூடவே போறேனே  " என்று சொல்லியபடி அங்கு ஸ்டைலாய் வந்து நின்றான் மதியழகன்..

" இந்த ஸ்டைலுக்கு மட்டும் ஒன்னும் குறைச்சல் இல்ல " என்று அவர்கள் இருவரும் கேட்பது போலவே சொல்லிவிட்டு திரும்பி நடந்தவளை கேள்வியாய்  பார்த்தான் மதியழகன்.. ( பின்ன அவங்களும் எவ்ளோ நாளுதான் வைட் பண்றதாம் ? ஹீரோ சார் இன்னைகாச்சும் உங்க காதலை சொல்லிடுங்களேன் )

 முத்தையாவோ இருவருக்கும் தனிமை கொடுக்க விரும்பி " நான் உள்ள வள்ளி வேலையை முடிச்சிட்டாளானு  பார்த்துட்டு வரேன் தம்பி " என்று ஓடினார் .. " சரி அய்யா " என்று சொல்லி அவன் அவளை தொடர்வதற்குள் கடற்கரையை  அடைந்திருந்தாள்  தேன்நிலா ..

" ப்ப்பாஆஅ என்ன ஒரு வேகம் " என்று அவன் மனதிலே சொல்லிக் கொண்டான் .. ( இதை மட்டும் நீங்க நிலா கிட்ட சொல்லி இருக்கணும் .. " பின்ன எல்லாரும் உன்னை மாதிரி இருப்பாங்களா டா " ன்னு ஏக வசனத்தில் கொதிச்சு இருப்பாங்க )

" ஹ .... நிலா "

" .... "

" நிலாம்மா "

" .."

" தேன்நிலா  "

" ப்ச்ச்ச் நல்லாத்தான் காது கேட்குது எனக்கு .. என் பேரு என்ன பரோட்டவா ? அதை எதுக்கு கொத்திகிட்டு இருக்கீங்க ? " என்றாள்  போலியான எரிச்சலில் ..

" என் மேல உனக்கென்ன கோபம் நிலா ? "

அவனுக்கு பதில் சொல்லாமல் கடலை வெறித்தாள் தேன்நிலா  ?  அவளுக்கு என்ன கோபம் இருக்க போகிறது ? அதுவும் அவனிடம் ? எனினும் அவன் தனது மனதில் உள்ள காதலை சொல்லாமல் இருப்பது அவனை விட இவளுக்குத்தான் சிரமமாய்இருந்தது.. இளம் வயதில் இருந்தே கல்வியும் குடும்பமுமே இரு கண்கள் போல என்று அவள் பாவித்து வளர்ந்திருந்தாலும், தனது மணவாளன் எப்படி இருப்பான் என்று கனவு காணாத பெண்ணும் வையகத்தில் உண்டா ? அதுவும்  தேன்நிலா , கனவுகளுக்கே கனவு காண சொல்லித் தரும் அளவு சுட்டித்தனமானவள்.. உறவின் ஆழத்தையும் காதலின் அழகையும் ரசிப்பவள்.. காதலை நேசிப்பவள்.. பணத்திற்கு மயங்காதவள்  பாசத்திற்கு அடிமைசாசனம் எழுதி தருபவள் ... ( போதுமா நிலா ..எனக்கு மூச்சு வாங்குது )

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.