(Reading time: 23 - 45 minutes)

வர்களை எப்படி நாடும் என் மனம் ? " என்று கேட்டுக் கொண்டான் மதியழகன் ...உண்மையில் ஓர் அன்னை போல  இரவும் பகலும் அவன் மீது அக்கறை காட்டினாள்  அவள் .. தந்தையை போல, தினம் பல நூறு ஆலோசனை வழகினாள்  அவன் ..

அரவணைப்பதில்  தாயாகி

அன்பில் தந்தையாகி

அணைக்கையில் சேயாகி

அழும்போது தோழியாகி

ஆத்திரத்தில் துணைவியாகி

அவனது ஒவ்வொரு உணர்வுகளுக்கும் அவள் ஒவ்வொரு உறவை மாறினாள்  ..

அவளது திட்டம் எதுவாக இருந்தாலும் தன் பொறுமையாக இருப்பது அவசியம், எந்த விதத்திலும் அவள் மனம் வாடும்படி  நடந்து கொள்ள கூடாது என்று முடிவெடுத்தான் மதியழகன் .. அவளது சந்தோஷத்திற்காக அவனது சுயத்தையும் இழக்க தயாரானான்  அவன்.. தேன்நிலாவின் திட்டம் என்ன ? ( இருங்க கேட்டு சொல்றேன் ​)

கண்ணீருடன் காவியதர்ஷினியின் அருகில் அமர்ந்து இருந்தான் ரிஷி . அந்த ஆழ்ந்த மயக்கத்திலும் கூட அவள்  வலியில்  முகம் சுளிப்பதை அவனால் உணர முடிந்தது . ஒரு சிறு பொய்,  அதுவும் விளையாட்டிற்காக சொன்னது இப்படி வினையாகி நின்றதை அவனால் ஜீரணிக்கவே இயலவில்லை ..  நடப்பதை  கை கட்டி சுவரோரம் சாய்ந்து வேடிக்கை பார்த்தான் அந்த புதியவன் .. வேகமாய் வந்த அந்த கார் அவளது ஸ்கூட்டியை இடித்து தள்ளும்போது  அதிர்ஷ்டவசமாய் காய்ந்த இலைகள் குவிக்கப்பட்ட இடத்தில் விழுந்து  பெரும் காயத்தில் இருந்து தப்பித்தாள்  காவியா.. அவளை இடித்து சென்ற அந்த காரே  எங்கோ  சென்றுவிட, இந்த புதியவன்தான் அவளுக்கு உதவினான் .. ரிஷி அழுவதை வைத்து, அவன் காவியாவிற்கு தெரிந்தவன் என்பதை உணர்ந்த அந்த புதியவன்  ரிஷியையும் மருத்துவமனைக்கு அழைத்து  சென்றான் .. நன்றி சொல்லி வழி அனுப்ப வந்த ரிஷியை தடுத்தவன் 

" இட்ஸ் ஓகே . அவங்க கண் விழிச்சதும் நான் போயிடுறேன் " என்று கூறி அந்த அறையிலேயே  அமர்ந்துவிட்டான் .. விழுந்த வேகத்தில் அவளது இடது காலில் கொஞ்சம் பலத்த காயம் பட்டு இருந்தது அவளுக்கு .. நீண்ட நேரத்திற்கு பிறகு கண் விழித்தாள்  காவியதர்ஷினி ...

" அ ... அண்ணா "

" கவி .... இப்படி பயமுறுத்திட்டியே !...என்னை மன்னிச்சிடு கவி ... ஏதோ விளையாட்டுத்தனம்மா  பொய் சொல்லிட்டேன் ..ப்ளீஸ்ம்மா ...என்னை மன்னிச்சிரு " என்றான் ரிஷி ..

" ஷ்ஷ்ஷ்ஷ் .... ரிஷி அண்ணா ... ப்ளீஸ் லீவ் இட் .. தப்பு என்னோடது .. நீங்க சொன்னது  உண்மையாகவே இருந்தாலும் கூட நான் இப்படி ரியாக்ட் பண்ணி இருக்க கூடாது .. அது கண்டிப்பா தப்பு தானே அண்ணா "

" .... "

" ஆனா அது உண்மை இல்லை தானே " என்று கண்களை உருட்டி கேட்டாள்  காவியா ..

" எதும்மா ?" என்று கேட்டவனுக்கும்  அவளது முக பாவனையில் புன்னகையே உருவானது ..

" உங்களுக்கு தெரியாதா அண்ணா ?"

" ஏன் அதை  நீயே சொல்லுறது ?"

" அடேங்கப்பா நீங்களும் சரி உங்க நண்பரும் சரி அது எப்படித்தான் எல்லாம் தெரிஞ்சும் அப்பாவி மாதிரி  நடிக்கிரிங்க தெரில "

" நடிப்பா .. அய்யயோ ..அதெல்லாம் நாங்க டிவி ல பார்க்குறது மட்டும்தான் தாயி .. மத்தபடி நாங்க ஒன்னும் தெரியாத அப்பாவிங்க "

" ஹா ஹா ..உங்களை அப்பாவின்னு சொன்னா, அப்போ உண்மையான அப்பாவிகளை என்னன்னு சொல்லுவாங்களோ போங்க  " என்று சலித்து கொண்டாள்  ..

" ம்ம்ம் ரொம்ப வலிக்கிறதா கவி ?"

" ம்ம் இல்லன்னா ?"

" எப்படி வலி தெரியும் ?  மகாராணிக்கு இப்போதானே வலி குறைய ஊசி போட்டாங்க ... கொஞ்ச நேரம் ஆகட்டும் அப்போ தெரியும் " என்றான் அந்த புதியவன் உரிமையாய்  .. அப்போதுதான் அங்கு நின்ற புதியவனை கண்டாள்  காவியா .. முகத்தில் சந்தோசம் கொப்பளிக்க

" டேய் ஹிட்லர் " என்று அவனை நோக்கி கை நீட்டினாள்  காவியா ..

" வர மாட்டேன் போடி " என்று முகத்தை திருப்பி கொண்டான் அந்த ஹிட்லர் ..

" டேய் .... இந்த நிலைமையில் என்னை நீ கெஞ்ச விடலாமா ? நான் பாவம் இல்லையா? " என்று முகத்தை சுருக்கி கேட்டதும் பாகாய்  உருகிவிட்டான் அவன் ..

"  முகத்தை பாவமா காட்டியே என் கோபத்தை கொல்லுறியே டீ கில்லர் .. சும்மாவா உனக்கு கில்லர்ன்னு பேரு வெச்சேன் " என்று காலரை தூக்கி விட்டு கொண்டான் அவன் ..

" அய்யே .. படம் பார்த்து அதுல இருந்தபேரு சுட்டுட்டு என்னமோ சொந்தமா கண்டுபிடிச்ச மாதிரி உடான்ஸ் விடாதே .. "

" உடான்ஸ் ?? நான் ?? ஹ்ம்ம் மேடம் சென்னை வ்வந்ததும்  சூப்பரா செந்தமிழ் பேசுறிங்க போல " என்றான் அவன் .. அவர்கள் இருவரும் பேசி  கொள்வதை வைத்தே அவன் காவியாவிற்கு நன்கு தெரிந்தவன் என்பதை கண்டுகொண்டான் ரிஷி .. அவன் பார்வையை கவனித்த காவியவும் அவனை ரிஷிக்கு அறிமுகபடுத்தி வைத்தான் ..

" சோ, உங்க கம்பனில இருக்குற ஒரு ஹீரோ லீவ் ..அந்த செய்தியை தாங்க முடியாம ஹீரோயின் இப்படி காலை உடைச்சுகிட்டிங்க  "

" டேய் .. சும்மா ஹீரோ ஹீரோயின்னு உளறாதே "

" ஹா ஹா .. பார்த்தியா உன்னை ஹீரோயின்னு சொன்னா உனக்கே பொறுக்கல "

" டேய் ... "

" ஆனாலும் எனக்கு இந்த மீடியா மேல எல்லாம் செம்ம கோவம் டீ "

" போச்சுடா இவன் ப்ளேடு போட ஆரம்பிச்சுட்டான் .. அண்ணா டாக்டர் கிட்ட  சொல்லி காதுல வெச்சுக்க பஞ்சு எடுத்துட்டு வரிங்களா ப்ளீஸ் " என்றாள்  பாவமாய் .. ரிஷியும் ஒரு இறந்சல் பார்வையை ஹிட்லர் மீது செலுத்த

" ஹே கூல்  கூல்  .. நான் நேரா விஷயத்துக்கே வர்றேன் " என்றான்

" சொல்லும் .. சொல்லி தொலையும் " என்றாள்  காவியா

" இல்ல நம்ம கேப்டன் சாரோட வாரிசு சகாப்தம் படத்துல நடிக்கிறார்னு இவ்ளோ விளம்பரம் போட்டாங்களே ... ஆனா அவருடைய தங்கச்சி சென்னைல நாடு ரோட்ல சும்மா சர்ரு  சர்ருன்னு  ஸ்டன்ட்  பண்ணதை பத்தி ஒரு வரி கூட எவனும் சொல்லலியே "

" டேய் .. என்னடா உளறுற ? யாருடா அவர் தங்கச்சி " என்றாள்  காவியா இறைஞ்சும் குரலில் ..

" ஹா ஹா நீதாண்டி கில்லர் .. நான் பாட்டுக்கு சென்னை மாநகரத்தை ரசிச்சுகிட்டு அழகா என்ட்ரி கொடுத்தா வானத்துல ஒரு லேடி பறக்குறா ..வாவ்ன்னு கை தட்டி விசில் அடிக்கலாம்னு பார்த்தா நம்ம கில்லர் " என்று சொல்லி பெரிதாய்  காமிடி சொல்லியது போல கை தட்டி சிரித்தவனை இருவரும் முறைத்தனர் ..

" சரி சரி விடுங்க .. துன்பம் வரும் வேளையில  சிரிக்கனும்னு தாடி வெச்ச என் தாத்தா சொன்னாரு "

" அதான் நீ வந்ததுமே  எங்களை சிரிக்க சொல்லுறியா ஹிட்லர் ?"

" போடீ ... " என்றவன் ரிஷி புறம் திரும்பி

" ஏன் பாஸ் கவலை படுறிங்க  ? இவ தலையில் இடியே விழ வந்தாலும், ஐயோ இவளான்னு  கொஞ்சம் தள்ளி ஓடி போயிரும் .. அதான் நான் இருக்கேன்ல .. நீங்க வேணும்னா வீட்டுக்கு போயி ரெஸ்ட் எடுங்களேன் " என்றான் .. காவியாவும்

" ஆமா அண்ணா, இவன் என்னை நல்லா பார்த்துப்பான் .. நான் உங்களுக்கு எதும்னா கால் பண்ணுறேன் .. ரொம்ப நேரமா இங்க தானே இருக்கீங்க ? நீங்க போய்ட்டு வாங்க  " என்றாள்  .. அங்கிருந்து செல்ல மனமில்லை என்றாலும், அந்த ஹிட்லர் அவளை நன்றாய் பார்த்து கொள்வான் என்று உணர்ந்து நிம்மதியாய்  " சரி " என்று சொல்லி கிளம்பினான் ரிஷி .. ரிஷி போவதையே புன்னைகையுடன்  பார்த்துக் கொண்டு இருந்தாள்  காவியா ... அவன் சென்றதுமே

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.