(Reading time: 12 - 23 minutes)

10. என் உயிர்சக்தி! - நீலா

பெஸ்ஸி பீச்சில் இவர்கள் செந்திலை சந்தித்த இரண்டு நாட்கள் கழித்து...

என்னது??!! 

....

En Uyirsakthi

டேய் மச்சி! நிஜமாதான் சொல்லறியா?? 

டேய் உண்மைதான் டா!

இது சரி வராது! நீ ஸ்கைப் ல வா... நாங்க உன்கிட்ட பேசனும்!

டேய் இப்போ முடியாது டா... என்கிட்ட டாப் கூட இல்ல.. நைட் வேற..

அப்போ நீ பொய் சொல்லற!

இல்ல டா வெற்றி! நிஜமாதான்... உன் ப்ரண்ட் பூங்குழலீ என் பக்கத்துல தான் இருக்காங்க...இரு பேசு.

ராத்திரி ஏழு மணிக்கு உனக்கென்ன வேலை அவ வீட்டுல? நீ மெசேஜ் செய்தேனு தான் கால் செய்தேன்! பட் நீ பொய் சொல்லற! எனக்கு வேற வேலை இருக்கு டா பிரபு!

நீ நம்ப மாட்றே.. இரு உன் ப்ரண்ட் கிட்ட கொடுக்கிறேன்...

மொபலை ஹோல்ட் மோடில் பொட்டுவிட்டு...

'அத்தை...' என்று கூறும் போதே மலரும் குழலீயும் வெளியே தோட்டத்தின் பக்கம் செல்வதை பார்த்துவிட்டான்.

இல்லை... ஒன்னுமில்லை! என்றுவிட்டு நகர்ந்தான். பின்னோடு எழுந்தான் செந்தில். 

ஏய்... என்ன டீ இப்படி டல் அடிக்கற? எத்தனை வருஷம் கழிச்சு பார்க்கிறோம்... உற்சாகமா இருப்பனு பார்த்தா... கல்யாண பொண்ணு வேற...

ம்ம்.. அது ஒன்னு தான் குறைச்சல்! எல்லாமே முடிஞ்சு போச்சு டீ மலர்... இவ்வளவு என்னை உயிருடன் நடமாட வைத்த அந்த தைரியம்.. நம்பிக்கை எல்லாமே என்னை விட்டு போயிடுச்சு! இனி உற்சாகத்திற்கு என்ன?? இதுக்கு மேல எனக்கு போராட சக்தி இல்லைடீ... வாழ்க்கையை அதன் போக்கில் எடுத்துக்கலாம் னு இருக்கேன்! என்ற குழலீயை இறுக அணைத்து கொண்டாள் பொன்மலர்.

லூசு மாதிரி பேசாதே டீ! இன்னிமே தான் டீ இருக்கு சுவாரஸ்யமே...மக்கு!

நீ ஏன் பேசமாட்ட?? உனக்கு செந்தில் இருக்கற உற்சாகம். 

உனக்கென்ன டீ கொறச்சல்?? உனக்கும் தான் பிரபு இருக்கார்..

'ஆமாம்.. ஆமாம் இருக்கார்!' என்று மனதில் அவள் நினைக்கும் போதே... அதே வார்த்தைகளை வெளிப்படையாக கூறிக்கொண்டே வந்தான் பிரபு.

ஒரு சிறு அமைதி...

மொபைல்லை ஆன் செய்துவிட்டு..'என் ப்ரண்ட் உன்கிட்ட பேசனுமாம்... இந்தா பேசு' என்று நீட்டினான்.

யேஸ் மிஸ். பூங்குழலீ ஸ்பீக்கிங்..

என்ன மேடம்? எப்படி இருக்கீங்க?

ரொம்ப நல்லா இருக்கேன். நீங்க...

நாங்க எல்லாம் இருக்கிறது கூட நியாபகம் இருக்கா?

நீங்க யாரு?

யாரா?? மச்சான் உங்க தங்கச்சிக்கு நான் யாருனு தெரியனுமா?

இப்படி கொடு என்று தொலைப்பேசியை வாங்கி..'எப்படி குழலீ இருக்க? ஒரு பத்து நாளிலேயே எங்களை எல்லாம் மறந்துட்டியா?' என்றது டேவிட் தான்.

டேவிட் அண்ணா?!

நானே தான். எப்படி இருக்க?

சாரி அண்ணா. நானே கால் செய்யறேனு வெற்றிட்ட சொன்னேன். பட் அதுக்குள்ள என்னேனமோ நடந்து போச்சு!

என்ன ஆச்சு குழலீ? இந்த பையன் வேற உங்க வீட்டுல... இத்தனை மணிக்கும் இருக்கான். இஸ் எவ்ரிதிங்க் ஃபைன்?

அண்ணா! எனக்கு ஒரு உதவி மட்டும் செய்யறீங்களா?? இந்த தங்கைக்காக அண்ணா! ப்ளீஸ்...

சரி...பட் என்ன பிரச்சனை?

என்னை எதுவும் கேட்காதீங்க! ப்ளீஸ்..?

சரி சொல்லு.

நீங்க... நீங்க டீனா வெற்றி யாழினி... எல்லோரும் புறப்பட்டு சென்னை வரீங்களா...? உடனே! எவ்வளவு சீக்கிரம் முடியுமோ... அவ்வளவு சீக்கிரம் னா ப்ளீஸ்! ஐ வான்ட் ஜஸ்ட் யூவர் பிரசன்ஸ் ஹியர்!

....

அண்ணா??

பிரச்சனையை சொல்லு!

எனக்கு... திருமணம் நிச்சயம் செய்திரிக்காங்க... அடுத்த மாதம்...

என்ன சொன்ன?? இரு கால் கட் செய்துட்டு ஸ்கைப்ல வா...

வ்ராந்தாவில் அமர போனவர்களை தடுத்து உள்ளே அழைத்து சென்றான் அருள். 

மாமா... அக்காவோட ஸ்டடி ரூம்ல உட்காருங்க.. இதோ வரேன்!' என்றுவிட்டு நாற்காலி எடுத்துவர நகர்ந்தான்.

அவள் டாபை ஆன் செய்தவுடன் வெற்றியிடம் இருந்து அழைப்பு வந்தது.

ஹே குழல்! என்ன ஆச்சு?? திடீர்னு? - வெற்றி 

இப்படி கொடு டா அதை.. என்று டேவிட் பேச தொடங்கினான்.

என்ன டா ஆச்சு? ஏன் திடீர்னு?

யாரு டீ பையன்? ஏன் முகம் இவ்வளவு வாடியிருக்கு? உனக்கு பிடிக்கலையா?? - டீனா

அப்பா...! ஒவ்வொருத்தரா கேள்வி கேளுங்க! இப்படி கேட்டா எப்படி அவ பதில் சொல்ல முடியும்?' என்று பேசியபடியே குழலீயின் நாற்காலிக்கு பின் இருந்த கட்டிலில் அமர்ந்தான் செந்தில்.

யாரு சார் நீங்க? எங்க குழல் கிட்ட நாங்க பேசறோம். உங்களுக்கென்ன?

ஓ!

ஹேய்.. யாரு டீ இவரு?- டீனா

நான் குழலீயோட தாய்மாமா பையன். என் பெயர் செந்தில்.

இவரு தான் மாப்பிள்ளையா?? என்ற டீனா செந்திலை இப்போது கவனித்தாள்.

என்ன சார்? என்ன நினச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுல? அவ முகத்தை பார்த்தீங்களா எவ்வளவு வாடியிருக்கு... இதிலேயே தெரியல அவளுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லைனு?

ஹலோ ஹலோ.. கொஞ்சம் பொருமை டீனா மேடம்! டேவிட் எப்படி தான் உங்களை வைத்து சமாளிக்கறாரோ? ஒரு நிமிஷம் நான் பேசி முடிச்சிடுறேன்! அப்புறமா நீங்க திட்டலாம்.. ஓகே வா?

....

திட்டுங்க... தாராளமா திட்டுங்க... ஆனா என்னை இல்ல.. கல்யாண மாப்பிள்ளையை திட்டுங்க!

அப்ப நீங்க மாப்பிள்ளை இல்லையா?' என்று அசடு வழிந்தாள் டீனா. 

இல்லை! மாமா பையன் னா கல்யாண மாப்பிள்ளையா இருக்கனுமா?! மேடம் என் வைஃப் நல்லவ.. அதுவும் குழலீயோட உயிர் தோழி... அதனால நான் தப்பிச்சேன்! இல்லனா.. நல்லா இருக்கிற குடும்பத்தில சண்டை வரவெச்சிடுவீங்க போல?! அவ முகம் வாடியிருக்கு தான்.. ஆனா அதற்கு காரணம் அலைச்சல்... வாழ்க்கை முழுவதுக்கும் பிடிக்காத ஒருவரோடு எப்படிங்க வாழ முடுயும்? அதுவும் குழலீட்ட எடுபடுமா? எனக்கு தெரிஞ்சு இந்த திருமணம் அவளுக்கு பிடிச்சு தான் நடக்குது... எனக்கு ஒரு சந்தேகம்... இது காதல் திருமணமோ னு! உங்களுக்கு ஏதாவது தெரியுமா?' என்று கூறும் போதே குழலீயிடமிருந்து நான்கு அடி வாங்கிக்கொண்டான் செந்தில்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.