24. நினைத்தாலே இனிக்கும்... - புவனேஸ்வரி
மாலை மயங்குகின்ற வேளை, கலங்கி இருந்த தனது மனதை தெளிய வைத்த நந்துவை காதலுடன் பார்த்தான் சந்துரு .. " எப்படி பார்க்கிறான் பார் " என்று மனதிற்குள் கேட்டு வைத்தாள் நந்திதா ..
ஒரு மின்சார பார்வையின் வேகம்
வேகம் உன்னோடு நான்
கண்டுகொண்டேன்
ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம்
தாபம் என்னோடு நான்
கண்டுகொண்டேன்
இதயம் பாடலை முணுமுணுக்க , அவன் விழியோடு விழி கலந்தாள் ஆபத்து தான் என்பது போல பட்டென எழுந்து நின்று கொண்டாள் நந்து ..சற்று முன்பு அவனுடைய இறுகிய அணைப்பில் கட்டுண்டு இருந்ததை மொத்தமாய் மறந்துவிட்டாள் போலும் ..
" அத்தான் "
" ம்ம் "
" மணி ஆச்சு "
" அப்படியா .. மணி என்ன ? உன் கை காட்டு வாட்ச் ல பார்க்கலாம் " என்று அவளது கையை பிடிக்க வந்தான் சந்துரு .. பின்னே அனிச்சையாய் நகர்ந்தவள்
" ஊரறிய கை பிடிங்க ..அதுக்கப்பறம் இந்த மணி பார்க்கற வேலையை பார்க்கலாம் " என்று கண்சிமிட்டிவிட்டு , அவனது கேசத்தை கலைத்து ஓடினாள் ..சந்துருவும்
" நந்து ..நில்லு " என்று அழைத்தபடி அவளை தொடர்ந்தான் .. சுபியின் அறைக்குள் நந்து நுழைந்துவிட , சந்துரு வெளியே இருந்த பெஞ்சில் அமர்ந்து அவளுக்காக காத்திருந்தான் .. சரியாய் பத்து நிமிடம் கழித்து வந்தாள் நந்து .,.
" ஓகே அத்தான் ..சுபி கிட்ட சொல்லியாச்சு .. வாங்க போகலாம் "
" ஹும்கும் .. மனசுல மதர் தெரேசா நெனப்பு தான் டீ உனக்கு " என்று நக்கலாய் கூறியபடி அவளை அவன் எட்டி பிடிக்க முயல ,
" இப்போ வம்புதும்பு பண்ணாமல் என்னை வீட்டில் விட முடியுமா இல்லை மாமா கிட்ட சொல்லவா ?" என்றாள் நந்து ..
" மாமா , எப்பவும் என்பக்கம் .. வேணும்னா சொல்லிக்க "
" ஹா ஹா .. மக்கு அத்தான் .. நான் மாமான்னு சொன்னது , உங்க அப்பாவைத்தான் .. எப்படி வசதி ? சொல்லிடட்டுமா ?" என்று முகத்தை தீவிரமாய் வைத்து கொண்டு வினவ
" அய்யோ வேணாம் வேணாம் ..எனக்கு எங்கப்பான்னா ரொம்ப பயம் " என்று கண்களை உருட்டி சிரித்தான் சந்துரு ..
You might also like - Nanaikindrathu nathiyin karai... A fast paced romantic thriller story
அதன்பின் நந்து, ஹாஸ்டலை அடைந்த நேரம் , அயர்வினால் அனு நித்திராதேவியுடன் கைகோர்த்துவிட , ஆருவும் வின்ஸ் பற்றிய நினைவுகளுடன் கண்மூடி படுத்திருந்தாள் .. அவர்களை தொந்தரவு செய்ய விரும்பாமல் தனது அறைக்கு திரும்பினாள் நந்திதா .. அங்கு தீப்தி வழக்கம் போல இருளில் ஜன்னல் வழியே வானத்தை பார்த்து கொண்டு அமர்ந்திருந்தாள் .. வலது கரத்தில் சிராய்வு ஏற்பட்டிருந்த இடத்தில் பிளாஸ்திரி ஒட்டி இருக்க , அதை தொட்டு பார்த்தது அவளது கண்ணீர் துளி ... இருளில் இதயெதும் கவனிக்கவில்லை நந்து .. அவள் மனமுழுக்க சந்துரு தான் இருந்தான்... மேலும், என்று தான் இரு வீட்டாரின் தந்தையும் சந்தித்து இருக்கும் பகைமைகளை போக்கி கொள்வார்களோ என்ற கவலையும் அவளுக்குள் எழுந்தது .. மேலும் சுபியும் சந்துருவும் பேசி விடுவார்களா , என்ற கேள்வி ஒரு பக்கமென , தீப்தி என்று ஒருத்தி தன்னுடன் ஒரே அறையில் இருக்கிறாள் என்பதையே மறந்தவளாய் உறங்க சென்றுவிட்டாள் நந்து .. (என்னமா நீங்க இப்படி பண்ணுறிங்களேம்மா )
தீப்திக்குள் ஏதோ ஓர் எதிர்பார்ப்பு தான் , நந்து அவளிடம் பேசுவாள் , ஏதேனும் கேள்விகள் கேட்பாள் , அதன் மூலமாய் அவளுடன் கொஞ்ச நேரம் பேசலாம் என ! ஆனால் அனைத்தும் நூல் அருந்த பட்டமாய் தரை இறங்கியது .. கண்கள் கரித்து கொண்டு வந்தது அவளுக்கு ..
" என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ்கிறேன் நான் ? எனக்கு மட்டும் ஏன் யாருமே இல்லை " தன்னிரக்கத்தில் கண்கள் கலங்கிட அவளது செல்போன் ஒலித்தது .. புதிய எண்ணை பார்த்ததும் கேள்வியாய் அமர்ந்திருந்தவள் , அறையில் இருந்து வராண்டாவிற்கு நடந்து வந்தாள் ..
" ஹெலோ " ..எப்பொதும் போல திமிர் இல்லை அவள் குரலில் .. லேசாய் தழுதழுத்த குரலில் தான் பேசினாள் அவள் ..
" ஹெலோ ..யார் ?"
" மிஸ் தீப்தி "
" ம்ம்ம் நீங்க ?" யாரோ புதிய ஆடவனின் குரல் கேட்டு இன்னும் குழம்பி போனாள் அவள் ..
" நான் பிரசாத் "
" வெறும் பேரை சொன்னதை கண்டுபிடித்துவிடும் அளவிற்கு பெரிய ஆளா நீ ?" சட்டென மூண்ட எரிச்சலில் , பழைய தீப்தி லேசாய் தலை தூக்கினாள் ..
"ஷ்ஷ்ஷ்ஷ் ... தீப்தி ... சரியாய் தான் பெயர் வெச்சு இருக்காங்க ... தீ மாதிரி பேசுறிங்க " என்றான் அவனும் தான் யார் என்று காட்டி கொள்ளாமல் .. தீப்திக்கு எரிச்சலாய் இருந்தது ..அதே நேரம் கொஞ்சமும் சந்தேகமும் எழுந்தது .. ஒருவேளை அனுவின் வேலையாய் இருக்குமோ ? கவீனுக்கு தெரிந்தவனோ ?" என்றெல்லாம் சிந்திக்க தொடங்கினாள் ..
" ஹே யார் நீ ? என்னை மிரட்டணும் , அல்லது திட்டணும்னு சொல்லி அனுப்பினாங்களா ? அதானே உன் எண்ணம் ?"
" ஹே ஆர் யு ஆல்ரைட் ? நான் எதுக்கு உன்னை மிரட்ட போறேன் ?" என்று கனிவாய் கேட்டான் அவன் ..
" முதல்ல நீ யாருன்னு சொல்லு ..என் நம்பர் உனக்கு எப்படி தெரியும் ?"
" நீதான் அம்மாகிட்ட உன் நம்பர் கொடுத்த ...அதுவும் இன்னைக்குதான்..சரி முதலில் கை காயம் எப்படி இருக்கு ? வலிக்கிறதா ? நாளைக்கு சண்டே தானே ? நல்லா ரெஸ்ட் எடு " என்றான் அவன் கனிவாய் .. அவனை திட்டும் ஆவலில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தவள் , இப்படி அனுசரணையான கேள்விகளில் தன்னையும் மீறி பொத்தென தரையில் அமர்ந்தாள் .. அவள் மனமோ , இதமாய் உணர , மூளையோ பட்டென அவன் சொன்னதை வைத்து அவனை கண்டுபிடிக்க தீவிரமாய் செயல்பட்டது ... அதிலும் வெற்றியும் கண்டவளாய்
" நீங்க , அந்த கார் டிரைவர் தானே ?" என்று கேட்டு வைத்தாள் .. இதழ்கள் துடிக்க மௌனமாய் சிரித்தான் பிரசாந்த் என்கிற தீரஜ்பிரசாந்த் ..
“ம்ம்ம் ஆமா நான் ட்ரைவர் தான்…”
“ ம்ம்ம்ம் …என் நம்பரை ஆண்டிகிட்ட இருந்து எப்படி எடுத்த…அவங்களா தந்து இருக்க மாட்டாங்களே..”
“ அம்மாவை உனக்கு முன்னாடியே தெரியுமா ?”
“ அம்மா வா?...ஒஹொ முதலாளி அம்மாவா ?”
“ ம்ம்ம் ஆமா ஆமா..”மீண்டும் சிரித்து கொண்டான் தீரஜ்..
“ இன்னைக்கு தான் முதல் தடவை பார்க்குறேன் …ஆனா பார்த்ததுமே தெரிஞ்சது அவங்க ரொம்ப நல்லவங்கன்னு “
தீரஜின் இதழில் புன்னகை தவழ்ந்தது…எந்த மகனுக்கு தான்,தனது தாயார் புகழப்படுவதை ரசிக்காமல் இருக்க முடியும் ? அதுவும் ஏனோ,தீப்தியை அவனுக்கு பார்த்ததுமேபிடித்து போனது…
“ம்ம்ம்ம் கை இன்னும் வலிக்கிறதா?”
“ம்ம்ம்ம் இல்லை இல்ல…”