(Reading time: 6 - 12 minutes)

14. கிருஷ்ண சகி - மீரா ராம்

ம்மா… என்னாச்சு… இங்க பாருங்க…” என்றபடி பவித்ரா காவேரியை உலுக்க,

காவேரியோ தனக்குள் போராடிக்கொண்டிருந்தார்….

“எங்கயாவது பக்கத்துல போயிருப்பாங்கம்மா… நீங்க பயப்படாதீங்க… ப்ளீஸ்… எனக்கு பயமா இருக்கு…” என பவித்ரா கலங்கவும் தான், காவேரி தனது நிலையிலிருந்து வெளிவந்து அவளை கவனித்தார்…

krishna saki

“பவித்ரா…” என்றபடி அவர் அவளை அணைத்துக்கொள்ள,

“நதிகா… எங்கடா இருக்குற?... சாப்பிட வேண்டாமா?... நதி…. நதி… அப்பா கூப்பிடுறேன் பாரு…” என்ற மகத்தின் குரல் அறைக்கு வெளியே கேட்க,

இருவரும் அவசரம் அவசரமாக வாசலுக்கு விரைந்தனர்…

காவேரியை பார்த்த மகத், “மதர்… இங்க தான் இருக்குறீங்களா?... நதி எங்க?... பார்த்தீங்களா?...” எனக் கேட்க,

அவர் எதுவும் சொல்லாமல் நின்றிருந்தார்…

“பவித்ரா… நீ பார்த்தீயா?... துருவ் கூட தான் விளையாடிட்டிருந்தா…”

“இல்ல… நான்…” என அவள் இழுத்துக்கொண்டிருக்கும் வேளை,

“பவித்ரா… ஒரு நிமிஷம்…” என்று சொல்லிவிட்டு ருணதி பவித்ராவின் அருகினில் வந்தாள்…

வந்தவள், பவித்ராவைப் பார்த்து சிரித்துக்கொண்டே “துருவனைப் பார்த்தீங்களா?..” எனக் கேட்க,

பவித்ராவிற்கு திக் என்று இருந்தது…

“என்ன பவித்ரா… என்னாச்சு?... ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?...” என்றவள் காவேரியையும், மகத்தினையும் பார்க்க, அவளுக்கு என்ன நடந்தது என்று ஊகிக்க முடியவில்லை…

“பவித்ரா…” என்றபடி அவள் தோளின் மேல் ருணதி கைவைக்க, அதிர்ந்து விழித்தாள் பவித்ரா…

You might also like - Kanaamoochi re re... A romantic comedy...

“என்னாச்சு… ஏன் எல்லாரும் ஒரு மாதிரி இருக்கீங்க?... என்ன நடந்துச்சு?... மேடம் நீங்க துருவனைப் பார்த்தீங்களா?... அவனை ரொம்ப நேரமா ஆளையேக் காணோம்…” என்று அவள் காவேரியிடம் கேட்க, அவரோ மௌனம் மட்டுமே பதிலாய் கொடுத்தார்…

“உங்க பொண்ணு நதிகா எங்க?... அவளும் துருவனும் தான ஒன்னா விளையாடிட்டிருந்தாங்க… அவகிட்ட கேட்டா தெரியும் தான?... நதிகா எங்க?... இந்த ரூமில் இருக்குறாளா?...” என அருகே இருந்த அறையைக் கைகாட்டி ருணதி கேட்க, மகத்திற்கு எதுவுமே புரியவில்லை ஒரு வினாடி…

அவனை தன்னிலைக்குக்கொண்டு வருவதற்காவே அந்நேரம் மணியோசை கேட்டது, ருணதியின் செல்போனிலிருந்து…

யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே

கண்ணனோடு தான் ஆட…”  என்ற பாடலாய்…

புது எண்ணாக இருக்கிறதே என்று அவள் தயங்கியவாறு அழைப்பை ஏற்க,

“நான் சொல்லுறதை கவனமா கேளு… உன் பையன் எங்ககிட்ட தான் இருக்குறான்… ஒழுங்கா நாங்க சொல்லுற பணத்தை கொடுத்துட்டு அவனைக் கூட்டிட்டு போ…”

“எ…ன்…ன…. யாரு நீங்க?... என் பையன் எங்க?... துருவ்… துருவ்…” என அவள் பதற, பக்கத்திலிருந்த மகத் சற்றே சுதாரித்தான்…

அவளிடமிருந்து அவன் போனை வாங்கி தன் காதுகளில் செல்போனை வைத்த போது, “ஏய்… இங்க பாரு… பணத்தைக்கொடுத்துட்டா, நாங்க உன் பையனை பத்திரமா உங்கிட்டயே ஒப்படைச்சிடுவோம்… இல்லன்னா உன் பையன் உனக்கு உயிரோட கிடைக்க மாட்டான்… எங்க எப்ப பணம் கொடுக்கணும்னு இன்னும் கொஞ்ச நேரத்துல போன் பண்ணி சொல்லுவோம்…” என அழைப்பு துண்டிக்கப்பட,

“என்னங்க… என்ன சொன்னாங்க… என் துருவ் எங்க?... என் துருவ் எப்படி இருக்குறான்?... நான் அவனைப் பார்க்கணும்…” என அவள் அழ,

“ஒன்னுமில்லை ருணதி… ப்ளீஸ்… அழாத… துருவனுக்கு ஒன்னும் இல்ல…” என அவன் அவளுக்கு ஆதரவாக பேசிக்கொண்டிருந்த போது,

“என்னாச்சு ராஜா?... யாரு போனில்… ருணதி ஏன் பதறுறா?... என்ன நடந்துச்சு?...” – காவேரி..

“மதர்… அது வந்து…”

“சொல்லுங்க சார்… என்னாச்சு?... ருணதி அழறதை பார்த்தா பயமா இருக்கு… சொல்லுங்க…“ – பவித்ரா…

மாற்றி மாற்றி அவனிடம் கேள்வி கேட்க, அவன் எப்படி சொல்ல என்று யோசித்தான்…

பின், “துருவனை கடத்தியிருக்காங்க… பணம் குடுத்தா தான் விடுவேன்னு சொல்லுறாங்க…” என அவன் சொல்லமுடியாது சொல்லி முடித்தபோது,

“என்ன….” என்றவாறு காவேரி தள்ளாடி போனார்…

“கடவுளே…” என்றபடி பவித்ரா ருணதியின் அருகில் போய் நின்று அவளை தேற்றினாள்…

“துருவ்….” என்றபடி ருணதி கைகளில் முகத்தினை புதைத்து அழ,

“எதுக்கு இப்படி அழற?... அழாம, அடுத்து என்ன செய்யணும்னு யோசிக்கிற வழியைப் பாரு….” என்றபடி வந்தாள் கன்யா…

அவளை அங்கு பார்த்ததும், அனைவரின் முகத்திலும் வெறுப்பு அப்பட்டமாக தெரிய, மகத் மட்டும் உணர்ச்சிகளற்று நின்றிருந்தான்…

“கடத்தினவங்களுக்கும் அறிவே இல்லை…. உங்கிட்ட பணம் இருக்கும்னு நினைச்சு கடத்தியிருக்கான் பாரு… கொடுமை… சரி… இப்போ என்ன செய்யப்போற?... பணத்துக்கு ஏற்பாடு செஞ்சு உன் பையனை மீட்குற வழியைப் பாரு…” என அவள் ருணதியின் நிலையை சுட்டிக்காட்டி சொல்ல,

அவள் மகத்தினை பார்த்தாள் கண்ணீர் முகத்தோடு…

“அவனை ஏன் பார்க்குற?... இவன் ஹெல்ப் பண்ணுவான்னா?... இவனே ஒரு மாச சம்பளம் வாங்குறவன்…. இவன் கிட்ட ஏது நிறைய பணம்… எப்படியும் கடத்தினவங்க லட்ச கணக்குல பணம் கேட்பாங்க… அதை கொடுக்குற அளவுக்கு இவனுக்கு வசதியும் கிடையாது… உன் பையனை மீட்குற அளவுக்கு இவன் வொர்த்தும் கிடையாது….” என துட்சமாக அவள் வார்த்தைகளை சிதறவிட,

மகத் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்…

“உன்னைப் பார்த்தாலும் பாவமா தான் இருக்கு… சரி… எதுக்கும் நான் வேணா பணம் தரேன்… வச்சிக்கோ… இந்தா…. பிளாங்க் செக்…. அவங்க கேட்குற பணத்தை ஃபில் பண்ணிக்கோ இதுல… இந்தா….” என்றபடி வெற்று செக்கில் அங்கேயே கையெழுத்து போட்டு அவளின் முன் நீட்டினாள் கன்யா…

“கன்யா… திஸ் இஸ் த லிமிட்…” என்றபடி மகத் உறும,

“யாருக்குடி வேணும் உன் செக்?... உன் பணத்திமிற வேற எங்கயாவது போய் காட்டு… எங்க குழந்தையை காப்பாத்திக்க எங்களுக்கு தெரியும்… உன்னை யாரும் உதவி செய்ய சொல்லி கெஞ்சலை… முதலில் வெளியே போ…” என்றார் காவேரி சத்தமாக…

ருணதி அவரை அதிர்ந்து பார்க்க, மகத்தோ, “மதர்… வேண்டாம்…” என எதுவோ சொல்ல ஆரம்பிக்க,

அவர் கை வைத்து தடுத்து, “வேண்டாம்… ராஜா… என் வார்த்தைக்காக தான நீ பொறுமையா போற… என் முன்னாடியே உன்னை கேவலமா பேசுறா… என்னால அதை பார்த்துட்டு சும்மா இருக்க முடியாது… இவளுக்கு திமிர் இருந்தா அத அவ அப்பாகிட்ட போய் காட்டட்டும்… இங்க எங்கிட்ட வந்து காட்டினா நான் மனுஷியா இருக்க மாட்டேன்…” என்றவர்,

“இன்னும் எதுக்குடி இங்க நிக்குற?... எங்க உயிரெல்லாம் எடுக்கவா?... மரியாதையா வெளியே போயிடு… இங்க அசிங்கமாகிடும்….”

“இங்க வந்து இங்க ஆசிரமத்துல குப்பை கொட்டுற உங்கிட்ட எல்லாம் பேச வேண்டி இருக்கு பார்த்தியா?... எனக்கு தான் அசிங்கமா இருக்கு… சே…”

“வெளியே போடின்னு சொன்னேன்… போடி…”

“என்னை வெளியே போன்னு சொல்லுறதுக்கு நீ யாரு… உனக்கு என்ன உரிமை இருக்கு?...”

“இது என் புருஷன் கட்டின இடம்.. இங்க நிக்குறதுக்கு கூட உனக்கு தகுதி இல்லை… வெளியே போடி…” என்றார்…

“ஏய்…” என்றபடி அவள் அவரருகே செல்ல, மகத் சென்று அவளை வழிமறித்தான்…

“நீ என்ன அவளுக்கு முன்னாடி தூண் மாதிரி நிக்குற?... விலகு… இன்னைக்கு எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகணும்… போனா போகுதேன்னு இதோ இங்க நிக்குறாளே இவளுக்கு உதவி பண்ணலாம்னு செக் குடுத்தா இந்த கிழவி என்னையே வெளியே போன்னு சொல்லுறா… இவளுக்கு எவ்வளவு தைரியம்?....” என்றபடி அவள் மகத்திடம் சண்டை போட்டு கொண்டிருக்க

“இங்க பாரு.. பெரியவங்களை மரியாதையா பேச பழகு… அகராதி தனமா பேசாத… அது உனக்கு நல்லது இல்ல…” என அவன் அவளை அதட்ட

“நீ சொல்லி நான் கேட்க வேண்டிய அவசியம் எனக்கில்லை புரிஞ்சதா அசிஸ்டெண்ட்…” என்றபடி அவனின் முன் விரல் நீட்டி அவள் பேச,

“உனக்கு அவ்வளவு திமிறாடி?... என் முன்னாடியே ராஜாவை எடுத்தெறிஞ்சு பேசுற?...” என்றபடி மகத்தினை விலக்கியவர், அவளை ஓங்கி கன்னத்தில் அறைய,

அவள் சுருண்டு தரையில் விழுந்தாள்…

தொடரும்

Episode # 13

Episode # 15

{kunena_discuss:907}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.