(Reading time: 8 - 16 minutes)

12. பைராகி - சகி

bhairagi

ந்தி சாயும் அழகிய சந்தியா நேரத்தில் நதியின் கரையில் அமர்ந்தப்படி இயற்கையின் அழகினை பருகி கொண்டிருந்தாள் யாத்ரா.

இறைவன் படைப்பின் உச்சம் இயற்கை என்றே கூறலாம்!!சான்றோர்களின் மொழி ஒன்று உள்ளது.அதாவது,இகழ்பவரிடத்திலும் இயற்கையாக இரு!!கண்கள் கடந்த இயற்கைக்கு யாதும் ஒன்றே!!அதற்கு யாரிடமும் எவ்வித பேதமும் கிடையாது!!அனைவருக்கும் வளங்களை வாரி சேர்த்த தூய்மை மனம் இயற்கையிடமே உண்டு!!அதே போல்,இறைவனின் படைப்பில் சுயநலமில்லா ஒரே தனித்துவம் அன்பான இந்த இயற்கை அல்லவா!!

தனக்கு தெரிந்த பாடலை முணுமுணுத்தப்படி அமர்ந்திருந்தாள்.மிக இனிமையான ராகத்தில் ஒலித்து மனதினை லயிக்க வைத்தது அப்பாடல்!!அவளது பாடலுக்கு பைராகி நதியும் தனது வேகத்தை குறைத்து பொறுமையாய் சென்றது.

இன்னும் சில காலங்கள் தான்...

காலங்கள் வேகமாக கடக்க,3 மாத கெடு ஒரு மாதமாக சுருங்கியதன் ஆனந்தம் அவளுக்கு!!இந்த ஒரு மாதம் இறையருள் துணையோடு சீராக நகருமானால்,தன் மனம் கவர்ந்தவனின் நலத்திற்கு எவ்வித குறையும் இல்லை என்பதே அவளது மகிழ்ச்சிகான முக்கிய காரணம்!!

அதுவே அவளை அழகாய் புன்னகைக்க வைத்தது.

"போ!நீ பண்றது நியாயமே இல்லை!"-ஆதித்யாவின் புலம்பல் செவிகள் விழ தனது முகத்தை இயல்பாக்கினாள்.அவன் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு அவளருகே வந்தமர்ந்தான்.

கையில் கிடைத்த கூழாங்கற்களை ஒவ்வொன்றாக நதியில் வீச ஆரம்பித்தான்.நடப்பதை எல்லாம் விசித்ரமாய் பார்த்தாள் யாத்ரா.

"என்னாச்சு?"

"அம்மா செய்யுறது சரியே இல்லை!"

"ஏன்?"

"அவங்க என்ன சொல்றாங்க தெரியுமா?"

"விடு..அவங்க ரொம்ப மாறிட்டாங்க!"-என்று நதியை வெறிக்க ஆரம்பித்தான் அவன்.சிறிது மௌனம் காத்தவள்,

"என்னங்க ஆச்சு?"என்றாள்.

"நாம லவ் பண்ண ஆரம்பிச்சு எத்தனை வருஷமாச்சு?"

"2...'"

"ம்..2 வருஷமா காத்திருக்கேன்!அம்மா நம்ம கல்யாணத்தை தை மாசம் வரைக்கும் தள்ளி போட போறாங்களாம்!"-அவன் கூறியதற்கு எவ்வித பாவனையை காட்டுவது என்றே அவளுக்கு புரியவில்லை.

"முதல்ல எல்லாம் அவங்க தானே நம்ம கல்யாணத்தைப் பற்றி அடிக்கடி பேசுவாங்க!இப்போ பாரு.."

"ஐயோ!!ஏங்க நீங்க இப்படி இருக்கீங்க?நான் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்!"

"என்ன நீ சாதாரணமா சொல்ற?அடுத்த வருஷம் ஜனவரி வரை காத்திருக்கணும்!"-அவன் கூறவும்  அவள் முகத்தில் என்றுமில்லா அளவு நாணம்!!

இதற்காக தானே வந்தேன் என்பது போல் இருந்தது அவனது பார்வை!!

"எல்லாம் காத்திருக்கலாம்!"

"நீ இருப்ப!நான் மாட்டேன்!"-அவனது பேச்சு தன்னுள் வெகுவான மாற்றத்தை நிகழ்த்துவதை உணர்ந்தவள்,அங்கிருந்து ஓட பார்த்தாள்.

"எங்கே ஓடுற நீ?"-என்று அவளை தனக்காக பிடித்து இழுத்தான் ஆதித்யா.

"விடுங்க!"-தலைகுனிந்தப்படி மெதுவாக வேண்டினாள்.

பதில் ஏதும் பேசாமல் சில நொடிகள் மௌனம் காத்தவன்,மெல்ல அவளிடம் நெருங்கினான்.

"ஆதி!!"-என்ற ஜானகியின் குரலில் அவசரமாக விலகினர் இருவரும்!!

"வந்துட்டேன் அம்மூ!"-என்று ஏக்கமாக யாத்ராவை ஒரு பார்வை பார்த்தான்.அவள் தலைக்குனிந்தப்படி அவசரமாக,கோட்டையை நோக்கி நடக்கலானாள்.

அவள் சென்றப்பின் சிறிது நேரம் ஏதும் புரியாமல் நின்றவனின் மனம் தனது கடந்தக் காலத்தை எண்ணியது.

அமைதியாக நதிக்கரையில் அமர்ந்தான்.

யாத்ரீகை மற்றும் ஆதித்யரின் பந்தத்தை பலமாக பிணைத்த பந்தம் இந்த நதியின் பந்தமே..!!

அன்று..

"சகி!என்ன செய்து கொண்டிருக்கிறாய்?ராஜகுமாரரின் கண்களில் நீ ஆற்றும் பணி தென்பட்டால்.."

"நான் அதற்குள் வந்துவிடுவேன்!நீ செல்..!"

"சகி..நான் கூறுவதை கேள்!"

"நீ செல் பிருந்தா..!!நாம் ஆலயத்தில் சந்திக்கலாம்..!"-துணையாக நின்றவளை அவசரமாக துரத்திவிட்டாள் யாத்ரீகா.

எதற்காக??அவளது கரத்திற்கு சற்று தொலைவில் அழகாய் புன்னகைத்து கொண்டிருந்த தாமரை மலருக்காக..!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.