(Reading time: 10 - 20 minutes)

ப்போதுதான் கவனித்தாள் வருணோடு இன்னொருவரும் இருந்ததை.

மகிமாவிற்கு மிதுனை பெரிய அளவில் நினைவு இல்லை.. ஆனால் பார்த்த நினைவு மட்டும் இருந்தது.

அவள் எங்கே பார்த்து இருக்கிறோம் என்று யோசிக்க, வருண் அவளின் சங்கடத்தை தீர்த்தான்.

‘ஹேய்.. மகிமா.. சார் யாரு தெரியுதா.. ? நம்ம சுராவை பார்க்க போன போது பார்த்தோமே.. சார் பேரு மிதுன் “ என சொல்லி விட்டு,

“மிதுன் சார்.. இவ மகிமா.. உங்களுக்கு நினைவு இருக்கா?” என்று வினவினான்.

“ஒ.. நல்ல நியாபகம் இருக்கு வருண்.. இவங்க பேர் மகிமா... உங்க கூட டிகிரி முடிச்சுட்டு இப்போ அனிமேஷன் லே higher studies படிச்சுட்டு இருக்காங்க .. சரிதானே.. ?” என்று கேட்ட,

“ஹாய்..மகிமா.. “ என்று கை குலுக்க நீட்டினான்..

மகிமாவும் சிரித்தபடி “ஹலோ சார்.. உங்க பேர் எல்லாம் இப்போ தான் தெரியும்.. ஆனால் பார்த்த நியாபகம் இருக்கேன்னு யோசிச்சுட்டு இருந்தேன்..” என்றாள்

மிதுன் மனதிற்குள் இங்கே ஒருத்தன் படுத்தா தூக்கம் வராமல் உன்னை நினச்சுட்டு இருக்கான்.. இவளுக்கு பார்த்த நியாபகம் இருக்காம்.. ஏன் பாட்டு பாட வேண்டியது தானே.. பார்த்த நியாபகம் இல்லையோன்னு. டேய்.. மிதுன் .. உனக்கு இந்த நிலைமை தேவைதானடா.. என்று எண்ணினான்.

இப்படி எண்ணினாலும் அவனால் மகிமாவை விட முடியாது. என்னதான் சுறா, மகிமா , வருண் மூவரின் குறும்பும், கலகலப்பும் அவர்களை அந்த NCC காம்பில் கவனிக்க வைத்தாலும் அவர்கள் முழுதுமாக விழுந்தது இவர்களின் சமயோசிதமும் , மனிதாபிமானமும் கூடிய குணங்களும் தான் காரணம்..

இவர்கள் அந்த கிராமத்தில் தங்கி இருந்த போது, தீடிர் என்று ஒருநாள் புயலுடன் கூடிய மழை பெய்தது. அந்த சமயத்தில் அருகில் ஓடிக் கொண்டிருக்கும் காட்டாறு ஒன்று கரை உடைத்து ஊரில் வெள்ளம் ஏற்பட்டது.

அப்போது ஊரினுள் போன், கரண்ட், செல் எதுவும் வேலை செய்யவில்லை. ஊர் பெரியவர்களால் பக்கத்து ஊரில் உதவி கூட கேட்க முடியவில்லை.

இந்த நேரத்தில் அங்கே தங்கியிருந்த இவர்கள் குழுதான் எல்லா உதவியும் செய்தனர். எல்லா studentsum அவர்களால் முடிந்த வரை ஊர் மக்களை காப்பாற்றி கோவிலில் தங்க செய்தனர். ஆனால் இவர்கள் மட்டும் தான் கடைசி ஆள் வந்து சேரும் வரை தண்ணீரில் நடப்பதுவும், நீந்துவதுமாக சென்றனர். 

கடைசி ஆள் வந்து சேர்ந்த பின்பும் இவர்களை இன்னும் காணவில்லையே என்று அர்ஜுனும், மிதுனும் தேடி செல்ல,

அப்போது இவர்கள் மூவரும் ஒரு நாய்க்குட்டியை எடுத்துக் கொண்டு ஏதோ பெரிய விவாதம் நடத்திக் கொண்டு இருந்தனர்.

அருகில் சென்றவுடன் புரிந்தது .. அந்த நாய் குட்டி .. எந்த வகை என்று.. இதில் மூவருக்கும் அடிதடி தகறாரு வேறு.. யார் வீட்டிற்கு அந்த நாயை எடுத்து செல்வது என்று.

அப்போது அவர்களை பார்த்து அர்ஜுன் “ஹலோ.. இன்னும் கொஞ்ச நேரம் இங்கியே நின்னுகிட்டு இருந்தா நாயோடு சேர்ந்து நீங்களும் மேலுலகம் போக வேண்டியது தான்.. “ என,

பின்னாடி திரும்பி பார்த்தவர்கள் அங்கே ஒரு பெரிய மரம் விழுந்து தண்ணீரோடு அடித்து வந்து கொண்டு இருந்தது.. பெரிய பிரச்சினை என்று இல்லாவிட்டாலும், கவனிக்காமல் விட்டு இருந்தால் தங்களையும் சேர்த்து தள்ளிக்கொண்டு எங்கே சென்று இருக்கும் தெரியாது.

மீண்டும் அவர்களை பார்த்து “பொறுப்பாக எல்லோரயும் காப்பாற்றி கொண்டு வந்து இருக்கீங்க என்று பார்த்தால், இப்படி நாய் குட்டிக்கு அடிச்சுக்கிட்டு இருக்கீங்க.. ? “ என்று வினவினான் அர்ஜுன்

தங்கள் தவறு உணந்து “சாரி அண்ணா.. மூணு பேரும் கொஞ்சம் tired ஆகிட்டோமா.. அதான் இந்த puppy பார்த்து excite ஆகிட்டோம் “ என்றனர்.

அவர்களின் அண்ணா அழைப்பு பிடிக்காததால் “ஹலோ.. அண்ணா எல்லாம் சொல்ல வேண்டாம்.. வாங்க அங்கே மாஸ்டர் தேடிட்கிட்டு இருக்கார்” என்றனர்.

அப்போது இவர்கள் ரெயின் கோட் போட்டு இருந்ததால் இவர்களின் முகம் அவர்களுக்கு தெரியவில்லை.

அன்று மட்டும் இல்லாமல், அங்கே இருந்த மற்ற நாட்களிலும் மிகவும் பயந்து இருந்த சின்ன பிள்ளைகளோடு சேர்ந்து ஆட்டம் ஆடி அவர்களை இயல்புக்கு கொண்டு வந்து இருந்தனர் சுறா & கோ.. இதை பார்த்த அர்ஜுன், மிதுன் மனதில் இவர்கள் இருவரும் அழுத்தமாக பதிந்து இருந்தனர்.

இதை எல்லாம் எண்ணி பார்த்துக் கொண்டு இருந்த மிதுன் , மகிமாவும், வருணும் பேசிக் கொண்டு இருக்கவும் நடப்பிற்கு வந்தான்.

“ஹேய்.. சோடாபுட்டி. சார் கூட என்னடா பண்ணிட்டு இருக்க?” என்று வினவினாள் மகி..

“சார் அட்வேர்டிசிங் கம்பெனி நடத்திட்டு இருக்கார் கீமா.. நான் என்னோட இன்டர்ன்ஷிப்க்காக அவரை பார்க்க போய் இருந்தேன்.. அப்போதான் அவர் பண்ற வேற சில விஷயம் எல்லாம் பார்த்து இம்ப்ரெஸ் ஆகி அவர் கூட என்னோட வீகென்ட் செலவழிச்சுட்டு இருக்கேன்..”

“என்னடா விஷயம்..?”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.