(Reading time: 9 - 17 minutes)

26. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்

Maruva kathal konden

ன் முன்னால் வந்து நின்ற இஷானை பொருட்படுத்தாது, அவனைத்தாண்டி செல்ல இருந்தவனை தடுத்தான் இஷான்….

“நான் போகணும் இஷான்… தடுக்காத….”

கோபத்தோடு ஒலித்தது ஜெய்யின் குரல்…

“நானும் வரேன்… என்னையும் கூட்டிட்டு போ….”

இலகுவாக சொன்னான் இஷான்…

“நீ வர வேண்டாம்…”

“ஏன்?...”

“வர வேண்டாம்னா வரவேண்டாம்… அவ்வளவுதான்…”

அழுத்தமாக வந்தது ஜெய்யின் பதில்…

“ஏன் நான் வந்தா அவன் என்னை கொன்னுடுவானா?...”

“இஷான்…….”

கிட்டத்தட்ட கத்தினான் ஜெய்…

“எதுக்குடா கத்துற?... நியாயமா நான் தான் கத்தணும்… இவ்வளவு கோபமும் படணும்…. உன்னை அந்த நாயோட ஆள் கொல்ல வந்ததுக்கு…”

“புரியாம பேசாத இஷான்…”

“யாருக்கு எனக்குப் புரியலையா?... புரியப்போய்த்தாண்டா இப்படி திகைச்சுப்போய் நிக்குறேன்…”

இஷானின் பதிலில் புருவம் சுருக்கினான் ஜெய்…

“என்னடா பார்க்குற?... அவன் உன்னை கொல்ல வந்ததுக்குதான் நீ இப்போ இவ்வளவு ஆத்திரத்தோடு கிளம்புறீயா?...”

இஷான் கேள்வியில் சற்றே திகைத்தவன், அதை தன் முகத்தில் காட்டாதவாறு நின்றான்…

“இப்போ நீ அந்த திவாகரை பார்க்கத்தான போற?...”

“ஆமா….” என தலையசைத்தான் ஜெய்…

“அவன் கேஸ் தான் முடியுற ஸ்டேஜ் வந்துட்டே… அப்புறம் இன்னும் எதுக்காக வெயிட் பண்ணனும்… வந்த வேலையை முடிச்சிடலாம்…”

“அதுக்காகத்தான் போகப்போறேன்…”

“அதான் நானும் கூடவரேன்னு சொல்லுறேன்….”

அதற்குமேலும் இஷானோடு வாதிடாமல், அவனையும் உடன் அழைத்துச் சென்றான் ஜெய்…

அப்போது திவாகரின் இல்லத்தில்,

“சார்…. அவனை கொன்னுட்டேன் சார்…”

குதூகலத்துடன் சொன்னான் திவாகரின் அடியாள்…

“நீ சொல்லுறது நிஜமா?...”

“சத்தியம் சார்… அவன் எழும்பு கூட மிஞ்சாது…”

“ஆமாண்டா… அடிக்குற அடியில உன் எழும்புக்கும் அதே கதி தான்…”

கைகளை முறுக்கிக்கொண்டு அந்த ரவுடியின் முன் வந்து நின்றான் இஷான்….

அதிர்ச்சியில் உறைந்து போனவனாய் அவன் நிற்க, ஓங்கி அவன் முகத்தில் அறைந்தான் இஷான்…

“என்ன திமிர் இருந்தா என் ஜெய்யைக் கொல்லப்பார்ப்ப?...”

சொல்லியபடி அவனை அடித்துக்கொண்டே இருந்தான் இஷான்…

“என்ன தைரியம் இருந்தா என் இடத்துக்கு வந்து என் ஆள் மேலயே கை வைப்ப?....”

சட்டென எழுந்து கொண்ட திவாகர், இஷானை அடிக்க கை ஒங்க,

திவாகரின் கரம் இஷானின் மீது படாதவாறு தடுத்தது ஜெய்யின் கரம்….

“போலீஸ்காரன் மேலயே கைவைக்கப் பார்க்குறீயா?...”

கேட்டபடி அவனின் கையை பிடித்து வளைத்து, “இப்போ வைடா பார்க்கலாம்…” என்றான் ஜெய்…

வலியில் திவாகர் துடிக்க, அவனை மிதித்து தள்ளினான் ஜெய்…

அவன் கீழே விழுந்ததும், அவனது அடியாட்கள் அனைவரும் இஷானையும் ஜெய்யையும் தாக்க முற்பட, ஜெய் தனது துப்பாக்கியை எடுத்து குறிவைத்தான் ஒருவனை…

“ஒழுங்கா சரண்டர் ஆகிட்டா உடம்புல உயிர் மிஞ்சும்… இல்ல சுட்டுத்தள்ளிட்டு போயிட்டே இருப்போம்… எப்படி வசதி?...”

இஷான் தன் துப்பாக்கியை எடுத்து ஒருவனின் நெற்றியில் வைத்து கேட்க,

“முடிஞ்சா செய்டா பார்க்கலாம்….” என்றான் திவாகர்…

“இவங்கிட்ட எல்லாம் அவன் மொழியில பேசுனாதாண்டா புரியும்….” என்ற இஷான் ஜெய்யின் கை கோர்க்க, ஜெய்யும் அவனின் கரத்தின் மீது கை வைத்தான்…

அங்கிருந்த திவாகரின் அடியாட்கள் ஐந்து பேரையும் அடித்து துவைத்துவிட்டு, திவாகரிடம் வந்தான் ஜெய்…

ஐந்து பேரின் கைகளிலும் விலங்கை இஷான் மாட்டிக்கொண்டிருக்க,

திவாகரின் கைகளை மடித்து பிடித்து அதில் விலங்கை மாட்ட முயன்ற போது அவன் ஜெய்யின் பிடியிலிருந்து தப்பித்து செல்ல முற்பட, ஜெய் அவனை பிடிக்க முற்படவில்லை…

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.