(Reading time: 6 - 11 minutes)

17. கரை ஒதுங்கும் மீன்கள் - அருணா சுரேஷ் 

 Karai othungum meengal

ந்தப் பயணமும் போல் இல்லாமல் இந்தப் பயணத்தில் எதிர்பார்ப்புகள் இல்லாமல் கடனே என்று உட்கார்ந்திருந்தான் தயா.இனி என்ன....? 

என்ற கேள்வி மலைபோல் முன்னால் நின்றது. பாவி....கடங்காரி.....இப்படிப் போட்டுப் படுத்தியெடுக்கிறாளே....ஊருக்குப் போய் 

அம்மாவிடம் என்ன சொல்வது?....தாடி மாமா...'அந்தப் புள்ளை மேலத் தப்பு சொல்லாதே என்று அனத்தும் அனத்தலை எப்படித் 

தாங்குவது....அந்த ஊருக்குள் ரெண்டு நாள் சேர்ந்தாப்புலே நடந்து போனா....'என்னா தம்பி வேலைய உட்டுட்டியா....' என்றே கேட்டுக் 

கொல்லும்  கலா அத்தையை எப்படிச் சமாளிப்பது? இப்படிப் பலமாதிரியாக யோசித்துக் கொண்டே உறங்கிப் போனான்.... 
பேருந்து குலுக்கிய குலுக்கலில் பாதி மனக்குழப்பங்களின் அலைக்கழிப்பில் பாதியாகச் சரியாகத் தூங்க முடியாமல் போனது.

ஃபோனையெடுத்து ஃபோட்டோக்களின் பகுதியைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொன்றாகப் பார்த்தான்.

ஷைனி கூந்தலைப் பிரித்துப் போட்டுக் கொண்டு முகம் முழுக்கப் பல்லாகச் சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படம் பார்க்கவும் அது நிகழ்ந்த தருணத்தை மீண்டும் மீண்டும் பிரதியெடுப்பது போல் நினைவு படுத்திக் கொண்டான்.

ன்று ஷைனி கொண்டை போட்டுக் கொண்டு வந்திருந்தாள்....அவசரத்தில் வேறு இருந்தாள்.வரும் போதே கிளம்பு...கிளம்பு 

தயா....எனக்கு அவசரமா அவென்யூ ரோட்  போகணும்....ஒரு கான்ஃபெரென்ஸ் இருக்கு....உன்னைப் பார்த்துட்டு அப்பிடியெ ரெண்டு பேருமாப் போகலாம்னுதான் வந்தேன்"

அவ்சரம் புரியாமல்"என்னா ஷைன் இன்னிக்குக் கொண்டைலே.....பெரிய மனுஷி போல...."

"நல்லால்லையா?"

 "நல்லாதான் இருக்கு....ஆனா....என்னவோ ...."

"பட் னு சொல்ல வேண்டியதுதானே.....நல்லாயில்லைன்னு...."

"ஐயே .....நீ என்னிக்காவது நல்லாயில்லாமல் இருப்பியா.....உன்னை எப்படிப் பார்த்தாலும் எனக்குப் பிடிக்கும் ஷைன்.....ஆனா நீ தலை விரித்துப் போட்டு வந்தால்.....ஹம்மா....என் கண்ணே பட்டுரும்......அப்பிடிப் பிடிக்கும் அது எனக்கு...."


"ஓ.....இது எனக்குத் தெரியாதே....."

"உனக்கு என்னைப் பற்றி எதுவுமே தெரியாது ஷைன்..."

"இப்போ என்ன உனக்கு...கொண்டையை அவிழ்க்கணுமா...."

"சரி வேண்டாம்....உனக்கு வேற அவசரம்.....விடு" என்றவாறு திரும்பியவன் சந்தோஷத்தில் சிரித்தான்.

க்ளிப்பை ஒரு உதறலில் விடுவித்துக் கூந்தலை விரித்து விட்டுப் "போதுமா....?" என்று சிரித்துக் கொண்டிருந்தாள் ஷைனி.

உடனே கிளிக்கிய போட்டோ அது.

தையே பார்த்துக் கொண்டிருந்தவன் சுய பரிதாபத்தில்....'எங்கே...என்ன தப்பு நடந்தது...ஏன் எனக்கு இப்பிடி நடக்குது....இப்போ 

நான் ஏன் யாருமில்லாதவன் மாதிரி அலைந்து கொண்டிருக்கிறேன் என்று கலங்கினான். அப்பப்போ பார்த்துக் கொண்டிருக்கும் போது கிடைக்கும் 

ஆனந்தம் கூடவேயிருக்கும் போது எங்கே போய் ஓடி ஒளிந்து கொள்கிறது...ஷைனியை தினமும் ஒருமுறைதான் பார்க்கக் கிடைத்த போது அவளுக்காகக் கொந்தளித்துக் கொண்டிருந்த அன்பு அவள் கூடவேயிருக்கும் போது எங்கே காணாமல் போய் ஓடி ஒளிந்து கொண்டது?

ராஜு, மணி, செந்தில் ,கணபதி, சைக்கிள் கடை சிவசுப்பு எல்லோரும் நின்று எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்று இருந்தது.இதையெடுப்பதற்கு எல்லோரையும் அப்படிக் கெஞ்ச வேண்டியிருந்தது. எல்லோருக்கும் நான்னா கொஞ்ச இளப்பம்தான். பசங்க எல்லாம் கலரை வைத்துக் கொண்டாடுவார்கள்....அல்லது அழகை வைத்துக் கொண்டாடுவார்கள்.....அல்லது அவன் வாங்குற மார்க்கை வைத்துக் கொண்டாடுவார்கள்.பசங்க எல்லாம் இப்படின்னா பொண்ணுங்க எல்லாம் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள்.....இதிலே எங்கே போய்ப் பேசுறது எல்லாம்.கூடப் படிப்பவர்கள் சாப்பிடும் போது கூடச் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள்....எப்பவுமே தனிதான்...சே....பணமாவது இருந்துச்சா....? நம்ம ஜெயச்சந்திரன் மாதிரி?......கருப்பா இருந்தாலும் இன்டெர்வெல் சமயத்துலே கூட்டமாப் போய் ஐஸ், கல்கோணா...தேன்மிட்டாய்னு வாங்கிக் கொடுத்தே கவுத்துருவான். பல்லு எடுப்பா இருக்குன்னு போட்ட க்ளிப்புக்கே அவங்கப்பா இவ்வ்ளோ செலவழிச்சார்....அவ்வ்ளோ செலவழிச்சார்னு சொல்ற கதையைக் கேட்க்வே பத்துப் பசங்க வெட்டியா கூடவே  சுத்துவானுங்க...பசங்கதான் இப்படின்னு பார்த்தால் வாத்தியாருங்க அதுக்கும் மேல............பசங்களுக்கும் மேல பட்டப் பேர் வைக்கிறதுலே.......நிறைய தடவை வாத்தியாருங்க கூப்பிடற பேரே  பசங்களும் கூப்பிட்டு அதுவே பேரா ஆன கதைகூட உண்டு.


ஐசக் சார் நினைவுக்கு வந்தார்..."நீயெல்லாம் ஏண்டா பள்ளிக்கூடத்துக்கு வரேடா....முன்னத்திம் பல்லைத் துருத்திக்கிட்டு 

முழிக்காதேடா..." என்னும் போது அப்படியே கன்னத்தில் ஓங்கிக் குத்தவேண்டும் போலிருக்கும்.

வாழ்நாள் முழுதும் இந்தப் பல்லை வைத்துக் கொண்டு இப்பிடிப் பட்டப் பேரைச் சுமந்து கொண்டு எப்படித்தான் வாழ்ப் போகிறொமோ என்று விடிய 

விடிய அழுதிருக்கிறான்.
 'ஏலேய் குச்சி ஐஸ் கையைக் காலை அப்பப்போ அசைச்சுக்கோடா.....அப்போதான் மூச்சு விடுறியா இல்லியான்னு தெரியும்'என்று  கத்திக் கலாய்க்கும் நமசிவாயம் வாத்தியாரைக் கையில் கிடைத்த குச்சியால் மனதுக்குள் தினம் தினம் அடித்து 

மகிழ்ந்திருக்கிறான்.

டேவிட் வாத்தியார் உள்ளங்கையைத் திருப்பிக் காட்டச் சொல்லி அடிக்கும் போது...."கருப்பா...அடிச்சே கொன்னுடுவேன் "என்னும் போது 

என்னால் இவர்களை என்ன செய்துவிட முடியும் என்னும்  ஆற்றாமையோடுதான் வாழ்வின் வினாடிகளைக் கடத்தியிருக்கிறான்.

எல்லோரும் கண்டாலே ஓடி ஒளிபவனுக்குப் பக்கத்தில் தீபக் மட்டும்தான்....அவனும் கூட அவ்வப்போது முகம் சுழிப்பதுண்டு.வீட்டுக்குப் போகும் போது ரெண்டு பேரும் சேர்ந்து போகும் வழக்கத்தில் கொஞ்சம் அதிகமாக ஒட்டுவதுண்டு. இப்படி வாழ்வின் எல்லாப் படிகளையுமே  ஒரு விதமான மன அழுத்தத்தோடுதான் கடந்திருக்கிறான்.


ஷைனி வந்த போதுதான் வாழ்வின் வசந்தம் வ்ந்தாற்போல இருந்தது. 

அதுவுமா அதற்குள்ளாகக் காய்ந்து போக வேண்டும்?.....என் மீதுதான் ஏதோ தப்பிருக்க வேண்டும்......என்னைப் போய் ஷைனிக்கு எப்படிப் பிடித்தது? எல்லோரும் வெறுத்து ஒதுக்கிய என்னை தன்னுடையவளாக்கியவளைப் பூவாகக்  கொண்டாடியிருக்க வேண்டாமா...? 

மனிதர்களுடைய பலவீனமே இதுதானே.....அது கிடைக்காதா என்று அலைய வேண்டியது.....கிடைத்தால் அதைக் குப்பைக் கூடையில் தூக்கியெறிவது.....இந்த இரண்டுக்கும் இடையில் இழுபட்டுக் கிடப்பதானே வாழ்வின் மையம்.கிடைத்த பிறகான வாழ்வின் இனிமையை அனுபவிக்கத் தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கும் தயாவின் இந்தப் பயணம் அவனை எங்கேயோ இழுத்துச் செல்கிறது. ஏதோ ஒரு புள்ளி எதையோ நோக்கி அவனை இழுத்துச் செல்கிறது. நதி மேல் இலை போலோ அல்லது நதியூடே உருளும் கூழாங்கல்லைப் போலவோ வாழ்க்கை அனுபவம் என்னும் பாடத்தைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டே அவனை நகர்த்துகிறது.வாழ்க்கை திருப்பம் மிகுந்தது.மேடு பள்ளம் நிறைந்தது.பூக்கள் நிறைந்த முட்களும் ஊடாடிக் கிடக்கும் பாதை. தயா பயணிக்கிறான். 

தொடரும்

Karai othungum meengal - 16

Karai othungum meengal - 18

{kunena_discuss:678}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.