Chillzee 2016 Blockbuster Countdown - # 27
இந்த கதை ஒரு chillzee கிளாசிக் கதை என்று சொல்லலாம்.
இருபத்தி ஏழாம் இடத்தில் இருக்கும் வத்சலாவின் 'மனதிலே ஒரு பாட்டு' கதை 2014 ஜூன் மாதம் நிறைவு பெற்றது.
இது வத்சலாவின் முதல் கதை என்பது குறிப்பிடத்தக்கது.
மனதை மெல்லிய மயிலிறகாய் வருடும் இந்த கதையின் கதாநாயகன் வசந்த் உண்மையிலேயே ஒரு கதாநாயகன். தன் மனம் கவர்ந்தவளுக்காக காத்திருப்பதாகட்டும், தன் மீது வெறுப்பை காட்டும் அவளின் அப்பாவை அனுசரிக்க முயலுவதிலாகட்டும், அவனின் ஒவ்வொரு செயலிலும் மிளிரும் நிஜ 'ஹீரோயிசத்தினால்' நம் மனதில் பளிச்சென்று நிற்கிறான்.
அர்ச்சனா வத்சலாவின் தனிப்பட்ட முத்திரை இருக்கும் அருமையான கதாநாயகி.
அப்பா கதாபாத்திரத்தை கூட நம்மால் வெறுக்க முடியாது. வசந்த்தை போல அவரை இயல்பாக ஏற்றுக் கொள்ள தான் முடியும்.
மனதிலே ஒரு பாட்டு... மனதில் எப்போதும் ரீங்காரமிடும்...
இதுவரை கதையை படிக்காதவர்கள் கட்டாயம் 'மனதிலே ஒரு பாட்டு' பக்கம் சென்று படியுங்கள்.
* - Based on the stats collected from 15th January 2014 to 31st August 2016
{kunena_discuss:788}