(Reading time: 8 - 16 minutes)

குழந்தைகள் சிறப்பு சிறுகதை - குதிக்கும் இருப்புச் சட்டி - நாரா நாச்சியப்பன்

பொன்னி நாடு என்று ஒரு நாடு இருந்தது. அந்த நாட்டைப் பூவேந்தன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். பூவேந்தனுடைய பட்டத்து அரசியின் பெயர் மலர்க்கொடி.

  

பூவேந்தன் நாட்டை நன்றாக அரசாண்டு வந்தான். நாடு முழுவதும் நல்ல வளம் நிரம்பியதாக இருந்தது. இயற்கை வளமும் நல்ல அரசாட்சியும் இருந்ததால் அந்த நாட்டு மக்கள் எந்தக் குறையும் இல்லாமல் இருந்தார்கள்.

  

நாடு நன்றாக இருந்ததால் அரசனுக்கு வேலை யும் குறைவாகவே இருந்தது. திருட்டு என்றும், அடிதடி என்றும், மோசடி என்றும் வரும் வழக்குகள் மிகக் குறைவாகவே இருந்தன.

  

அரசன் அரண்மனையில் நிறைய ஆட்களை வேலைக்கு வைத்திருந்தான். அரசி மலர்க்கொடி ஒவ்வொரு புது ஆளைச் சேர்க்கும் போதும், தேவை யில்லாதபோது எதற்காக ஆள் சேர்க்க வேண்டும் என்று கேட்பாள்.

  

"வேலைக்கு ஆட்கள் நிறைய இருந்தால் நமக்கு வசதி தானே என்று கூறுவான் அரசன்.

  

"அரசே! அது தவறு. தேவைக்கு அதிகமாக ஆட்கள் இருந்தால், வேலை சரியாக நடக்காது'' என்று கூறுவாள் அரசி மலர்க்கொடி.

  

"இந்த ஆள் நமது அமைச்சரின் உறவுக்காரன். இருந்துவிட்டுப் போகட்டுமே'' என்று வேலைக்குச் சேர்த்துக் கொள்வான்.

  

இப்படி யார் வந்து வேலை கேட்டாலும், தகுதி பார்க்காமலும். திறமையை நோக்காமலும் பலரை வேலைக்குச் சேர்த்துக் கொண்டான். இதனால்

  

அரண்மனையில் வேலைகள் சரிவர நடக்கவில்லை.

  

ஒருநாள், அரண்மனைப் பெட்டகத்தில் இருந்த பொன் நாணயங்கள் காணாமல் போய்விட்டன.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.