(Reading time: 7 - 13 minutes)

ல்லோருக்கும் அவர்களுக்கே உரித்தான குண நலங்கள், பழக்க வழக்கங்கள் எல்லாம் இருக்கின்றதே. அதையெல்லாம் விட்டு விட்டு நீ ஆங்கிலம் மட்டும் படித்தால் போதும். உன்னுடைய தனிப்பட்ட அடையாளங்களை இழந்து விடு  என்றுச் சொல்வது சரி வருமா?

அந்த நண்பன் கூறியதைப் போலதான் நம்ம நாட்டில பல பேருடைய எண்ணங்களும் இருக்கின்றது , அவர்கள் மிகவும் ப்ராக்டிகலாக யோசிக்கிறார்கள், ஆங்கிலத்திற்கு மட்டும் வாழ்வில் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அப்படிப் பார்க்கும் போது, முதலில் நாம் ஒரு மொழியை எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கின்றோம் என்று கவனித்தால் பின்வரும் உண்மைகள் புலனாகின்றன.

லாபநோக்கு: முதலில் மொழியானது அதன் பயன்பாட்டைக் குறித்தே முக்கியத்துவம் பெறுகின்றது. அந்த மொழி கற்றால் நமக்கு என்ன லாபம்? என்று சிந்திக்கின்ற நிலை தான் உள்ளது. மொழியை எப்போது நாம் நம்முடைய உடைமையாக, உணர்வாக கொள்ளாமல் லாபத்தைக் கொண்டு நாம் கணக்கிடுகின்றோமோ? அப்போதே நாம் நம் மொழியின் அழிவிற்கு வித்திடுகின்றோம் என்பது தானே அர்த்தம்.

பெருமை: தமிழில் பேசுதல் சிறுமை ஆங்கிலத்தில் பேசுவது பெருமை என்கிற நிலையும் உள்ளது. அதற்கு ஒரு உதாரணத்தை குறிப்பிட விரும்புகின்றேன். இங்கு மும்பையில் ஒரு தேவாலயத்தில் வழிபாடுகள் தமிழிலும் , ஆங்கிலத்திலும் நடைப் பெற்று வருகின்றது. பெரும்பாலான தமிழர்கள் தமிழ் வழிபாடுகளில் கலந்துக் கொள்வதை சிறுமையாக நினைப்பதால் ஆங்கில வழிபாடுகளில் மட்டுமே கலந்துக் கொள்வார்களாம். வெகு குறைவான நபர்கள் கலந்துக் கொள்வதால் வரும் காலத்தில் தமிழ் வழிபாடுகள் நின்று விடக் கூட வாய்ப்புள்ளதே.

நாம் நம்முடைய மொழியை பெருமைப் படுத்திப் பேசுவதால் அது மற்ற மொழிகளை சிறுமைப் படுத்துவதாகாது. ஒவ்வொரு மொழிக்கும், கலாச்சாரத்திற்க்கும் அதனதன் அழகும், தொன்மையும், தனித்துவமும் இருக்கின்றது. என்னுடைய மொழிதான் பெரியது, உன்னுடையது அப்படிப் பட்டதன்று என்று நாம் மற்றவர்களைக் கீழ்மைப் படுத்துவது எப்படிப் பட்டதொன்று என்றால், என்னுடைய அன்னைதான் அன்பானவள் உன்னுடைய அன்னை அப்படியல்ல என்பது போன்றதாகும்.இது எத்தகைய மடமையான சிந்தனை இல்லையா?

அவரவருக்கு அவரவர் மொழி பெரிது, ஒவ்வொருவரும் தத்தம் மொழிகளில், கலாச்சாரத்தில் சிறப்புற விளங்குவோம். நம்முடைய வணிகப் பயன்பாட்டிற்கு தேவையான ஆங்கிலத்தில் நன்றாக தேர்ச்சிப் பெறுவோம். சிறப்பாக பணி புரிந்து வெற்றிகளை ஈட்டுவோம். ஆனால், வீட்டிற்கு வந்த பின்னர் ஆங்கிலேயனாக மாற நாம் முயல வேண்டாம். நாம் நாமாகவே இருப்போம். ஏனென்றால் நாம் நாமாக இருப்பது தானே நமக்கு அடையாளம்.

மீண்டும் வருவேன் :)

 

 

Arinthathum ariyaathathum 02

{kunena_discuss:1091}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.