(Reading time: 2 - 3 minutes)
Egg Gravy
Egg Gravy

Chillzee சமையல் குறிப்புகள் - மொறு மொறு அரிசி உருண்டை

குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் வீட்டிலேயே இருக்கும் இந்த நாட்களில், தினம் தினம் அனைவருக்கும் பிடித்ததுப் போல உணவு தயார் செய்வது நம் முன்னே இருக்கும் பெரிய சவால்.

இந்த சவாலை எதிர்க்கொள்ள சில வித்தியாசமான சமையல் குறிப்புகளை இன்று தொடங்கி அடுத்து வரும் நாட்களில் பதிவு செய்கிறோம். நீங்களும் உங்களுக்கு பிடித்த உணவை தயார் செய்து அசத்துங்கள்!

தேவையான பொருட்கள்

வெங்காயம்

இஞ்சி

பூண்டு

பச்சை மிளகாய்

சாதம்

உப்பு

மிளகாய் தூள்

கரம் மசாலா

கொத்தமல்லி தூள்

கடலை மாவு

அரிசி மாவு (விருப்பம் இருந்தால் சேர்க்கலாம்)

எண்ணெய்

 

செய்முறை

ஒரு பாத்திரத்தில், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் அனைத்தையும் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் சாதத்தை சேர்க்கவும்.

 

இப்போது, உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் கொத்தமல்லி தூள் சேர்க்கவும். அனைத்து பொருட்களையும் நன்றாக கலக்கவும்.

 

அடுத்து கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து நன்றாக கலக்கவும். தேவை என்றால் நீங்கள் 1-2 டீஸ்பூன் தண்ணீர் சேர்க்கவும்.

 

இப்போது, சிறிய உருண்டைகளாக உருட்டி, சூடான எண்ணெயில் இட்டு பொரித்து எடுக்கவும். உருண்டைகள் மொறு மொறு என்று தங்க நிறமாகும் வரை பொரிக்கவும்.

 

பிடிக்குமென்றால் ஒவ்வொரு உருண்டையிலும் கொஞ்சம் சீஸ் சேர்த்துக் கொள்ளலாம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.