Chillzee சமையல் குறிப்புகள் - கடலைப் பருப்பு சாதம்
குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் வீட்டிலேயே இருக்கும் இந்த நாட்களில், தினம் தினம் அனைவருக்கும் பிடித்ததுப் போல உணவு தயார் செய்வது நம் முன்னே இருக்கும் பெரிய சவால்.
இந்த சவாலை எதிர்க்கொள்ள சில வித்தியாசமான சமையல் குறிப்புகளை இன்று தொடங்கி அடுத்து வரும் நாட்களில் பதிவு செய்கிறோம். நீங்களும் உங்களுக்கு பிடித்த உணவை தயார் செய்து அசத்துங்கள்!
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி
கடலை பருப்பு
நெய்
சீரகம்
பெருங்காயம்
இஞ்சி
மிளகுத்தூள்
உப்பு
இது ஒரு வித்தியாசமான சாதம். கடலைப் பருப்பின் முறுமுறுப்பான சுவையுடன் வரும் சாதம்
செய்முறை
அரிசியை நன்கு கழுவி, தனியாக ஊற வைக்கவும்.
கடலைப் பருப்பையும் சில நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும்.
ஒரு பிரஷர் குக்கரில் நெய்யை ஊற்றி சூடாக்கவும்.
சீரகம், ஒரு சிட்டிகை பெருங்காயம் மற்றும் நறுக்கிய இஞ்சி சேர்க்கவும்.
மீடியம் தீயில் ஒரு நிமிடம் வதக்கவும்.
இப்போது, கடலைப் பருப்பைச் சேர்த்து சுமார் 2-3 நிமிடங்கள் வறுக்கவும்.
உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும்.
அரிசி மற்றும் தண்ணீர் சேர்க்கவும். (1 கப் அரிசிக்கு 1 ½ கப் தண்ணீர் என்ற அளவில் எடுத்துக் கொள்ளுங்கள்.)
குக்கரை மூடி, 2 விசில் வைத்து ஸ்டவ்வை அணைத்து விடுங்கள்.