(Reading time: 2 - 3 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - ஈஸி கேரட் ரைஸ்

தேவையான பொருட்கள்

1 கப் அரிசி

1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய்

1 சிறிய பிரிஞ்சி இலை

½ டீஸ்பூன் சீரகம்

2 ஏலக்காய்

1 அங்குல பட்டை

1 வெங்காயம்

1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது அல்லது 2 நறுக்கிய பூண்டு, ½ அங்குல நறுக்கிய இஞ்சி

1 கப் துருவிய கேரட்

2 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி இலைகள் அல்லது புதினா இலைகள் நறுக்கப்பட்டது

¾ டீஸ்பூன் கரம் மசாலா

¼ முதல் டீஸ்பூன் மிளகாய் தூள்

12 முந்திரி அல்லது வறுத்த வேர்க்கடலை

தேவைக்கு உப்பு

1 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு

 

செய்முறை

ரிசியை சாதமாக வடித்து தனியே வைக்கவும். (மீதி வந்த பழைய சாதத்தையும் பயன்படுத்தலாம்)

 

ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி சீரகம், ஏலக்காய், பட்டை, பிரிஞ்சி இலை சேர்க்கவும்.

 

சீரகம் வெடித்தப் பிறகு, ​​நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

 

பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

 

துருவிய கேரட் சேர்த்து ஒன்று முதல் இரண்டு நிமிடங்கள் வதக்கவும். சிறிது உப்பு தூவி கேரட் மென்மையாகும் வரை வேக விடவும்.

 

மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் புதினா / கொத்தமல்லி இலைகள் சேர்க்கவும். பச்சை வாசனை போகும் வரை நன்றாக கிளறி வதக்கவும்.

 

பின், மூடி வைத்து 1 முதல் 2 நிமிடங்கள் சிம்மில் வைத்து சமைக்கவும்.

 

இப்போது கேரட்டுடன் சாதம், சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

 

விரும்பினால் எலுமிச்சை சாரும் சேர்க்கலாம். உப்பு சரிப்பார்த்து தேவையென்றால் இன்னும் உப்பு சேர்க்கவும்.

 

வறுத்த முந்திரி / வேர்கடலை தூவி, ரைத்தாவுடன் பரிமாறவும்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.