Chillzee சமையல் குறிப்புகள் - நண்டு மிளகு குழம்பு - கிருத்திகா
தேவையான பொருட்கள்
நடுத்தர அளவிலான நண்டுகள் - 6
வெங்காயம் (நறுக்கியது) - 1 & 1/2 கப்
தக்காளி -3/4 கப்
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 1 கட்டி
சிறிய பச்சை மிளகாய் - 2
½ தேக்கரண்டி மஞ்சள் தூள்
1 தேக்கரண்டி மிளகாய் தூள்
2 தேக்கரண்டி கொத்தமல்லி தூள்
தேங்காய் - 2 அல்லது 3 துண்டு
மிளகு - சிறிதளவு
கொத்தமல்லி - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தேக்கரண்டி எண்ணெய்
செய்முறை
கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்க்கவும் ... பின் இஞ்சி பூண்டு மிக்ஸ் சேர்க்கவும் இதனுடன் தக்காளி மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கவும் ..
பின் சுத்தம் செய்த நண்டை சேர்க்கவும் ...
நண்டு முக்கால் பதம் வெந்ததும் ... தேங்காயுடன் மிளகு சேர்த்து அரைத்து கலக்கவும் ..
பச்சை வாசம் போனவுடன் கொத்தமல்லி தூவி இறக்கவும் சுவையான நண்டு மிளகு குழம்பு ரெடி !!!!!