வீட்டுக் குறிப்புகள் - 35 - சசிரேகா
நெயில் பாலிஷை ப்ரிட்ஜில் வைத்தால் நீண்ட நாள் காயாமல் இருக்கும் ஒரு வருடம் வரை இருக்கும்
வீட்டை துடைக்கும் தண்ணீரில் சிறிது ரோஸ்வாட்டர் கலந்து துடைத்தால் வீடே கமகமக்கும்
ஒரு சாக்பீசை வெள்ளி பொருட்கள் இருக்கும் பெட்டியில் போட்டு வைத்தால் ஈரப்பசையை சாக்பீஸ் இழுத்துக் கொள்ளும்
கதவுகள் ரொம்ப சத்தம் போட்டால் பென்சில் முனையால் கதவு திருகுகளில் தேய்த்தால் சத்தம் குறைந்துவிடும்
டீத்தூளை சிறிதுநேரம் வெயிலில் உலர வைத்து பிறகு டீ போட்டு குடித்துப் பாருங்கள் டீ மணமாகவும் ருசியுடனும் இருக்கும்