(Reading time: 2 - 3 minutes)

வீட்டுக் குறிப்புகள் - 36 - சசிரேகா 

மோர் அதிகமாக புளிக்காமல் இருக்க அதில் ஒரு காய்ந்த மிளகாயை போட்டு வையுங்கள்

புளியை சிறிது வெதுவெதுப்பான நீரில் போட்டு அரை மணி நேரம் கழித்து பிசைந்தால் புளி முழுவதும் கரைக்க சுலபமாக இருக்கும்


வீட்டில் இருக்கும் எமர்ஜன்சி லைட் பயன்படாமல் இருந்தால் ஏதாவது ஒரு அறையில் இருக்கும் சாதாரண லைட்டுக்கு பதிலாக எமர்ஜன்சி லைட்டை மட்டும் எறிய விடுங்கள் மற்ற நேரங்களில் அதற்கு ரீசார்ஜ் செய்து தயார் நிலையில் வைத்தால் நீண்ட நாட்கள் உழைக்கும்

செல்ஃபோன் சார்ஜ் செய்யும் போது புத்தகம் அல்லது அட்டையை அதன் கீழ் வைக்கவும் அதாவது இன்சுலேட்டிங் மெட்டீரியில் மீது வைக்க வேண்டும் அப்போதுதான் செல்போன் பாதுகாப்பாக சார்ஜ் ஆகும்.

கேரம்போர்டுக்கு போடும் போரிக் பவுடர் வாங்கி கிச்சன் மூலைகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் வரும் இடங்களில் தூவி வைத்தால் கரப்பான் பூச்சி வராது.

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.