Jokes - Anusha
அதான் லீவுன்னு சொல்லிட்டாங்களே, அப்புறம் ஏண்டா திரும்ப நியூஸ் பார்க்குற?
லீவு நவம்பர் இருபத்தி ரெண்டாம் தேதி வரைக்குமா இல்லை டிசம்பர் இருபத்தி ரெண்டாம் தேதியான்னு பார்க்கிறேன்!
!!!!
மழை - மனைவி இரண்டிற்கும் என்ன ஒற்றுமை???
ரெண்டுமே இல்லாதப்ப எப்ப வரும்னு ஏங்குவோம். வந்தா ஏண்டா வந்துதுனு புலம்புவோம்
ஆண்பாலாக பிறப்பதற்கு பதில் ஆவின் பாலக பிறந்திருந்தால் மனைவிக்கு முன் தைரியமாக பொங்கி இருக்கலாம்!
ஆட்டோகாரனுக்கு பக்கம் கூட தூரம்தான்; ரியல் எஸ்டேட் காரனுக்கு தூரம் கூட பக்கம்தான்!
நாய் நம்மளை இழுத்துக்கிட்டுப்போனா அது வாக்கிங், தொரத்திக்கிட்டு வந்தா ஆது ஜாக்கிங்!!!
பணத்தின் மதிப்பு தெரிய வேண்டுமென்றால் செலவு செய்யுங்க . உங்கள்ளின் மதிப்பு தெரியவேண்டுமானால் கடன் கேளுங்க