(Reading time: 10 - 19 minutes)

தைரியத்தை வளர்த்துக் கொண்டு..கண்ணனை நினத்துக் கொண்டு பிரசவ அறைக்குள் சென்றார்.இன்னும் பிறந்த குழந்தை கண்கள் திறக்கவில்லை.குழந்தையின் முகத்திற்கருகில் தன் முகத்தை வைத்துக்கொண்டு குழந்தாய்..ஒரு ஜீவன் இவ்வுலகில் பிறந்தவுடன் யார் முகத்தை முதலில் பார்த்தால் சகல சௌபாக்கியத்தையும் அடையலாம் சொல்வாயாக என்றார்.அப்படிக் கேட்டு விட்டு சட்டென பயத்தில் கண்களை மூடிக்கொண்டார்.இன்னேரம் குழந்தை கண்களைத் திறந்து என் முகத்தைப் பார்த்திருக்கும்.பார்த்த நொடி பிறந்த குழந்தை இறந்திருக்கும் என்ற பயம் அவரின் உடலை நடுங்கவைத்தது.மன்னன் தன்னை என்ன செய்வானோ என்ற பயம் பற்றியது.சிலையென நின்றிருந்தார் நாரதர்.

கலகலவெ சிரிப்பொலி கேட்டது நாரதருக்கு.குழந்தை சிரிப்பது போன்ற ஒலி.அதைத் தொடர்து.....நாரத முனிவரே..கண்களைத் திறவும்..பயம் வேண்டாம்..நான் உயிரோடுதான் இருக்கிறேன் என்ற குழந்தையின் குரல் கேட்டது.

மெள்ள மெள்ளக் கண்களைத் திறந்தார் நாரதர்.அவரின் கண்களை அவரால் நம்ப முடியவில்லை.அடடே..

அடடே குழந்தை உயிரோடுதான் இருக்கிறது.இது எப்படி சாத்தியம்.?.என் முகத்தைப் பார்த்தவுடன் குழந்தை இறந்தல்லவா போயிருக்கும்?ஆனால் இக்குழந்தை உயிரோடல்லவா இருக்கிறது?..

மீண்டும் நாரதரைப் பார்த்து பேசியது குழந்தை..முனி புங்கவரே..தேவ முனியே.உம்மை வணங்குகிறேன்..நான் எப்படி இன்னும் உயிரோடிருக்கிறேன் என்ற சந்தேகமும் வியப்பும் உமக்குத் தோன்றியிருக்கும்.முனி புங்கவ..உமது கேள்விக்கான பதிலைச் சொல்கிறேன் கேளும். உம்மைப் போன்ற சாதுக்கள்,சதா இறைவனின் நாமங்களையே சொல்லும் தன்னலமற்ற முனிவர்கள்..அன்றாடம் ஆன்மிக  வழி முறைகளைக் கடை பிடிப்போர்,தர்மங்களைக் கட்டிக் காப்பவர்கள்,ஆத்ம சுத்தியோடு வாழ்பவர்கள் இவர்களில் யார் ஒருவரின் முகத்தை இவ்வுலகில் ஜனித்த ஒரு ஜீவன் முதலில் காண்கிறதோ அச்ஜீவனே அனைத்து சௌபாக்கியங்களையும் அடைகிறது.இதற்கு காசி மன்னனுக்கு மகனாய்ப் பிறந்திருக்கும் நானே சான்று.ஆம்..பிரம்மனின் புத்திரரே..த்ரிலோக சஞ்சாரியே,நாரத முனியே..நான் முதலில் புழுவின் குஞ்சாக பிறவியெடுத்தேன்..அப்போது தங்கள்  முகத்தில் விழித்தேன்..அதன் பலனாக அப்பிறவிக்கும் கொஞ்சம் மேலான பிறவியான பறவைக்குக் குஞ்சாகப் பிறந்தேன்..அப்பிறவியிலும் தங்கள் முகத்தில் விழித்தேன்..அதன் பலனாக பறைவைக்கும் மேலான பிறவியான மிருகப்(பசு)பிறவி எடுத்தேன்.பசுவின் கன்றாய்ப் பிறந்த நான் தங்கள் முகத்தில் விழித்தேன்..அதன் காரணமாய் இப்பிறவியில் ஆறறிவு படைத்த மனிதப் பிறவியாக  மாமன்னனுக்கு மகனாய்ப் பிறந்துள்ளேன்.உமைப் போன்ற சாதுவின் முகத்தை பிறந்தவுடன் கண் திறந்து பார்ததாலேயே எனக்குக் கிடைத்தற்கரிய இப்பிறவி கிதைத்தது.எனவே நல்லவர்களின் முகத்தை எந்த ஜீவன் பிறந்தவுடன் முதன் முதலில் பார்க்கிறதோ அச்ஜீவன் வாழ்வில் சகல சௌபாக்கியத்தையும் அடையலாம்.இது திண்ணம் என்றது காசி மன்னனின் குழந்தை.

நாரதர் தன் சந்தேகம் தீர்ந்தவராக..குழந்தைக்கு ஆசி கூறி விட்டு கண்ணனுக்கு மானசீகமாக நன்றி சொல்லிவிட்டு வானில் பறக்க ஆரம்பித்தார்.நாராயண..நாராயண....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.