தீ சுடும் வரை
எட்டி உதைத்ததில்
வலித்தது எனக்கு
அவன் கால் நோகுமே என்று !
நோகுதலில் நகுதலும்
சுமப்பதில் சுகமும்
என்னவென்று புரியாமலிருந்தேன்
நான் தாயாகும் வரை!
தாயான ஒவ்வொரு பெண்ணும்
கோவில் தான்
அசைவுள்ள கடவுளை
கருவறையில் சுமக்கிறாளே!
கோவில் என்பதால்
அவளுக்கு சூடம் காட்டி
தீபம் ஏற்ற வேண்டாம்!
அவளை தீ சுடும் வரை
உன் நா சுடாமல்
இருந்தாலே போதும்!