(Reading time: 2 - 3 minutes)

வேலைக்கு போக வேட்கை!!! - கஜலக்ஷ்மி

fast life

 

காலை முழுவதும் அடுப்படியில்

கால்கடுக்க வேலை! முடிந்ததும்

அவசர அவசரமாக அலுவலகத்திற்கு

கிளம்பி இருக்கையில் அமர்ந்து முடிப்பதற்குள்,

கையிலிருக்கும் அலைபேசி அலற

இருக்கைக்கு முன் உள்ள தொலைபேசி தொல்லை

கொடுக்க, அலைபேசியை அடுத்து எடுக்கலாம் என

விடுத்து, தொலைபேசியை தொட மேலாளர் அழைப்பு !!

வேலை மீது வேலை ! வேலை மீது வேலை ! என

கோப்புகளாக அடுக்கி இன்றே முடிக்கவும் என உத்தரவு

போட ! முக்கியத்துவங்களை முதலில் எடுத்து நான்

முடிக்க, அலைபேசி அழைப்பை அமர்த்திவிட, முற்பகல்

முடிந்து மதிய உனவுக்கான காலம் கனிய !

ருசித்து புசிக்காமல் பசிக்கு புசித்து முடித்து

பிற்பகலில் பின்தங்கி வேலைகளை

பாந்தமாக முடிக்க 1!! நேரத்தை நோக்குங்காள் ??

மாலை பொழுது சந்திரனை சந்தித்து நீண்ட நேரத்தை

கடக்க !  ’விரைவுப் பேருந்தில்’ விரைந்து ஏற நான்

விரைகின்றேன், நேரமும் விரயமாகின்றது !

போக்குவரத்து நெரிசலில் பேருந்து ஊர்ந்து ஊர்ந்து செல்ல!

இரவு உனவுக்கு இரவில் வாங்கவா முடியும்?

அனைத்தையும் பரபரவென முடித்து !

பத்தரைமனிக்கு படுக்கைக்கு சென்றேன் !!! ஆம் !

விடிந்ததும் வேலைக்குபோக வேட்கை……

காலை முதல் மாலை வரை தொல்லைகள்

நிரைத்திறந்தாளும் தேவைகள் நிறைவேற வேலைக்கு

போக கொள்கை ! அல்ல அல்ல வேட்கை !!!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.