அந்தக் காலம் & இந்தக் காலம் - ஜான்சி
சோறு கண்ட இடம் சொர்க்கம் அது அந்தக் காலம்.
வைஃபை (Wi Fi) கண்ட இடம் சொர்க்கம் இது இந்தக் காலம்.
விருந்தினருக்கு நீர் மோர் தருவது அந்தக் காலம்.
ஸ்மார்ட் போன்க்கு சார்ஜர் தந்து உதவுவது இந்த காலம்.
காதலியை காணாத பொழுது தவித்தது அந்தக் காலம் .
மொபைல் கையில் இல்லாவிட்டால் தவிப்பது இந்தக் காலம்.
வீடு கட்டிப் பார் அது அந்தக் காலம்.
க்ரெடிட் கார்ட் பில் கட்டிப் பார் இது இந்தக் காலம்.
வேலைக்கு காலை போய் மாலை வந்தது அந்தக் காலம்.
காலைப் போனாலும் வருவது மாலையோ இரவோ தெரியாது இது இந்தக் காலம்.
முதுமையை அமைதியில் கழித்தது அந்தக் காலம்.
நோய்கள் , மாத்திரைகளோடு கழிப்பது இந்தக் காலம்.