தனிமை - ஜான்சி
தனிமை என் தோழன்.
என்றும் இணை பிரியாது இருப்பதால்.......
தனிமை என் ஆலோசகன்.
பற்பல விஷயங்களை கருத்தில் பதிப்பதால்.......
தனிமை என் எதிரி.
உள்ளத்தை குத்திக் கிழிப்பதால்....
தனிமை என் உற்ற உறவினன்.
பலர் கை விட்ட போதும் துணை நின்றதால்...
தனிமை என் பலம்.
பிறர் இடையூறு இல்லா நிலை கிடைப்பதால்.
தனிமை என் பலகீனம்,
சோர்வும், பயமும் தருவதால்.
தனிமை என் நிரந்தர உறவு
இதுவே இறுதி வரை என்றறிந்ததால்....
{kunena_discuss:779}