(Reading time: 1 minute)

உண்மையின் புலம்பல் - பூரணி ரமேஷ்

உயிருக்குள் மறைந்திடும்

உடம்புக்குள் ஒளிந்திடும்

உயிரில்லா உடம்போடு

உண்ணதமாய் வாழ்ந்திடும்

இந்த உண்மைகள் !

 

அந்தி சாயும்வரை

அருமையாக வெளிப்படும்

அடுத்தடுத்து தொடர்ந்திடும்

இந்த பொய்கள் !

 

மௌனத்தின் மறைவினில்

மானுடத்தின் வாழ்வினில்

ஊமைகளாய் வாழ்கிறது

இந்த உண்மைகள் !

 

மனிதர்களே என்னை மௌனியாக்கிவிட்டு

பொய்களை உங்கள்

நாவினில் உஞ்சலாட்டிவிடுகிறீர்களே !

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.