(Reading time: 2 - 4 minutes)

கவிதை - ஜல்..ஜல்..ஜில்..ஜில்..ஜல்லிக்கட்டு.... - தங்கமணி சுவாமினாதன்

Jallikattu

பாருங்கடா..பாருங்கடா..

தமிழ்நாட்ட பாருங்கடா..

நாங்களெல்லாம் தமிழங்கடா..

நாகரீக மனுஷங்கடா..

தாய்-- பாலோடு வீரத்தையும்..

சேர்த்தேதான் தந்தாளடா..

தமிழோடு பண்பாடும்..

எம்மோடு வளருதடா..

பார் போற்றும் பாரதத்தில்..

எம் 'தமிழ் நாடோர்' அங்கமடா..

செந்தமிழுக்கிணையாக..

வேறெம்மொழியும் இல்லையடா..

பொன் விளையும் பூமியிது..

வீரம் செறிந்த மண்ணுமிது..

பல்லாயிரம் ஆண்டு முன்பு..

ஆண்டு சென்ற மன்னர்களும்..

பாடிச் சென்ற புலவர்களும்..

வரலாற்றை எழுதிவைத்து..

மறைந்துவிட்ட அறிஞர்களும்.

விட்டுச் சென்ற சுவடிகளும்..

செதுக்கி வைத்த சிற்பங்களும்..

பதித்துச் சென்ற கல்வெட்டும்..

நம் பண்பாடு,நாகரீகம்,கலச்சார--

விஷயங்களை..

ஐயத்திரிபுயின்றி அகிலத்திற்குச்..

சொல்லுதடா..

குழலூதிய கண்ணன் கூட..

'ஜல்லிக்கட்டு'ஆடியதாய்..

மதுராவின் வரலாறு..

மதுரமாய்ச் சொல்லுதடா..

நம் வரலாறு சொல்லுமிந்த..

விளையாட்டைத் தடை செய்ய..

பாரினிலே யாருக்கு அளப்பரிய..

சக்தியுண்டு?அடாவடி உரிமையுண்டு?

'PETA' வோடு சில பேடி(கள்)கூட்டாக

சேர்ந்து கொண்டு..

ஜல்லிக்கட்டைத் தடை செய்ய..

மல்லுக்கட்டிப் பார்த்திட்டால்..

சும்மா இருப்பானா?தமிழன்..

சுண்டைக்காய் விற்பானா?..

வஞ்சத்தை மனதில் வைத்து..

எங்கள் (வீர) விளையாட்டோடு..

விளையாடிப் பார்த்திட்டால்..

விரல் சூப்புவானா?தமிழன்..

வீணாய் இருப்பானா?..

பாருங்கடா..பாருங்கடா..

மெரினானாவில்-- தமிழன்..

கூட்டத்தைப் பாருங்கடா..

சேர்த்த கூட்டமில்லை இது..

தானாய்ச் சேர்ந்த கூட்டமிது..

ஜாதியில்லை,மதமுமில்லை..

இங்கே அரசியலுக்கு இடமுமில்லை..

இளைஞர்கள் கூட்டமிது..எழுச்சிமிகு

கூட்டமிது.ஜெயிக்கும் கூட்டமிது..

வெற்றிக்கனியைப் பெற்றக் கூட்டமிது..

நடக்குது பார்..நடக்குது பார்..

(ஜல்லிக்கட்டு) ஜாம்ஜாம்ன்னு நடக்குது பார்..

ஊரூராய் நடக்குது பார்..அலங்கானல்லூரில்..

அமர்க்களமாய் நடக்குது பார்..

வாடிவாசல் வழியே சீறிப்பாயுது காளை..

சீறும் காளையை அடக்க பாயும் புலியென..

தாவும் வீரர்கள் கூட்டம்..தாயின் பால்..

தந்திடும் வீர உயிரோட்டம்..இனி..

என்றும் ஆடிடுவோம் வெற்றிக் களியாட்டம்..

அனைவருக்கும் வணக்கம்.சிறிது கால இடைவெளிக்குப் பிறகு உங்களை சந்திக்கிறேன்.மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சியாய் உள்ளது.  இறைவனுக்கு நன்றி.உங்கள் அனைவருக்கு என் அன்பு+நன்றி

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.