(Reading time: 2 - 3 minutes)

பூதம்  - கவிதாசன்

panchapootham

பஞ்சபூதம் என்று ஐந்துண்டு 

கற்றும், வானம், நெருப்பு, நிலம், நீர்.

அனைத்திற்கும் ஒரு குணமுண்டு;

 

காற்று: 

எரிவாயு, உயிர் வாழ சுவாச வாயு.

மெதுவாய் வந்தால் தென்றல் 

ஓடி வந்தால் புயல் 

சுழன்று வந்தால் சூறாவளி..

தென்றலிலே தேனிசை தோன்றும்;

கடும் கோபத்தில் காற்று வந்தால் 

புழுதி பறக்க, மரம் வேர் நறுக்க,  

கூறை மட்டுமே பிட்சி பறக்கும்..

 

வானம்

தலை தூக்கி பார்த்தால் 

வெள்ளை மேகம்.

புயல் காற்றோடு பார்த்தால் 

நீ கார்மேகம்..

நீல நிறம் மட்டும் உனக்கு போதுமா??

கொடுத்துவிட்டோம் பல 

oxides கலவை. இன்று 

தரம் குறைந்தாய் என்கிறது புள்ளிவிவரம்..

    

நெருப்பு: 

பசியின் உச்சத்தில் வயிர் எரிந்தது, புகையில்லாமல்.

வாயு வெளிவர உணர்ந்தேன் வெப்பம்.

சளிபிடித்து படுத்தேன் உடல் பெருஞ்சூடு;

திருமணத்திலே நீதான் முதல் சாட்சியே.  

உனக்கும் ஏனோ concrete  பிடிக்கவில்லை 

பிடித்தால் தானே எரிக்கிறாய் சிருகூரையை..

உன்னை சொல்லி குற்றம் இல்லை 

தவறாக பயன் படுத்த சரியாக கற்றுகொண்டோம்..

 

நிலம்:

வயிர் எரிய தணிக்க உண்டேன் நில சோற்றை 

வறண்ட நவை நனைக்க பருகினேன் மழைநீரை..

உண்ணும் உணவில் ரசாயனம் 

நீர்வரத்தை நிரப்பி செல்லும் வளர்ச்சி வீக்கம்..

பூகம்பம் உன் சினமோ???

உன்னை விட்டால் செவ்வாய் அவர்க்கு..

மண்புழுவாகிய நான் எங்கே செல்வேன்.. 

 

நீர்:

பூதமென்று சொன்னதால் உன் வேகம் கண்டால் 

அனலையும் தாங்கும் மனிதன் பறந்தோடுகிரன் 

பொறுமையாக நீ இருந்தால் உன் மெது வாழ்கிறோம்.

தண்ணீரிலே நீ என்னை கூட்டி சென்றிருந்தால் 

இன்று கண்ணீரில் வழ்ந்திருகமாட்டேன், உடைமை இழந்து..

நிலத்திற்கு பசுமை சேர்த்தாய்  

வானிற்கு நிறம் சேர்த்தாய் 

வரும் தலைமுறைக்கு உன்னை சேர்க்கும் நிலை இன்று...

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.