(Reading time: 1 minute)

ஈர் உலகின் நீர் உலகில் – இளையரசி

Reef

நீர் பிழிந்து காற்றெடுத்து ..

காற்றெடுத்து கடல் குடித்து..

கடல் குடித்து நீருள் பறந்து ..

நீருள் பறந்து பாசி உண்டு ..

பாசி உண்டு கடலுள்  பரவி திரியும்

சிறு பிறப்பே ....

உறங்காமல் உயிர் வாழும் உன் இமைகள் ..

நீருக்குள் காற்றை வடிக்கும் உந்தன் செவுள்கள் ...

குட்டிக்கு கூடு குடுக்கும் உந்தன் தொண்டை ...

கடலுக்குள் உலகமைத்த உந்தன் வாழ்க்கை ...

கற்று தருகிறதா ..

ரசிப்பை  தருகிறதா தெரியவில்லை ...

சிறகு முளைத்து உன்னுடன்

கடல் உலகில் ஓர் நாள் வாழ ஆசை ..

இப்படிக்கு மனித பிறவி ...

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.