மழைவரும் அறிகுறி - ஷரோன்
சில்லென்ற காற்று உடல் உரச
மழை தொடங்கும் முதல் நொடியில்
மனம் முழுதும் நனைந்து
மெல்ல உன் இடக்கையை எனதாக்கி
உன்னை தவிர உலகம் மறந்து
எனக்கான உன் காதலை ரசித்துணர்ந்து
நடக்கிறேன் நான்..
மிதக்கிறேன் என்றால் மேலும் பொருந்துமோ!!
{kunena_discuss:779}