(Reading time: 1 - 2 minutes)

பாறையில் வளர்ந்த செடி - மலர் மாணிக்கம்

Plant in rock

சொந்தமாக தொழில் தொடங்க வெளியூருக்கு சென்றான் சேவியர். சென்ற இரண்டு வாரத்திலேயே மீண்டும் வீட்டுக்கே திரும்பி வந்தான். இனிமேல் வேலைக்கு போக மாட்டேன்” என்று முடிவு செய்திருந்தான்.

இதையறிந்த தாத்தா, சேவியர் திரும்பி வந்ததற்கான காரணத்தைக் கேட்டார்.

‘தாத்தா தொழில் செய்கிற இடம், சூழ்நிலை எதுவுமே சரியல்ல, தொழில் பண்ண எனக்கும் திறமை போதாது தாத்தா” என்றான் சேவியர்.

தாத்தா அவனை கூட்டிக்கொண்டு தோட்டத்தில் இருந்த பாறையை காட்டினார். அந்த பாறையின் இடையில் ஆலமரச் செடி முளைத்திருந்தது.

அதைக் காட்டி, ‘ஒருமரம் வளர நல்ல மண், நீர், காற்று, வெப்பம் அவசியம். ஆனால் இந்த செடிக்கு தேவையான எதுவுமே கிடைக்கல…. இருந்தாலும், முளைத்தே தீருவேன்னு முயற்சி செய்து பாறையிலே வளர்ந்திருக்கு பார்த்தாயா!”.

நீயும் எதையும் தடை என்று காரணம், காட்டாதே முன்னேறுவேன் என்று முயற்சியோடு, உழைச்சாலே எதிலேயும் வெற்றி பெறலாம்” என்றார் தாத்தா.

நம்பிக்கையோடு தொழில் தொடங்க கிளம்பினான் சேவியர்.

{kunena_discuss:875}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.