(Reading time: 10 - 20 minutes)

02. கோக்கு மாக்கு கோபாலு - ஜான்சி

Rice

ஹாய் குட்டீஸ்,

கோபாலுக் கதையைச் சொல்ல லேட்டா வந்ததுக்கு ரொம்ப ரொம்ப ஸாரி(sorry).

நீங்க எல்லோரும் கோபாலுவை அவங்க அப்பா கோபத்தில் ஆற்றில வீசினதுக்கு அப்புறம் அவனுக்கு என்ன ஆச்சோன்னு தெரியாம ரொம்ப டென்ஷனா இருக்கிறீங்கன்னு புரியுது. சரி சரி வாங்க நான் அவனுக்கு என்னாச்சுன்னு சீக்கிரமா சொல்றேன்.

ற்றுக்குள்ள "தொபுக்கடீர்"னு விழுந்த கோபாலுக்கு கொஞ்ச நேரம் ஒண்ணுமே புரியலை.ஆற்றுத் தண்ணி சர்ருன்னு தன்னோட வேகத்தோட வேகமா அவனை இழுத்துட்டு போயிட்டு இருக்கு. திரும்பி பார்த்தா அவங்க அம்மா இவனுக்காக பரிதவிச்சிட்டு இருக்கிறதையும், அப்பா அவங்களை வலுக்கட்டாயமா கூப்பிட்டுட்டு போறதையும் பார்க்க முடியுது. ஆனால் ஆற்றில தண்ணியோட வேகத்துல பயணிச்சுக்கிட்டு இருக்கிற இவன் கண்ணிலிருந்து சின்ன சின்ன உருவங்களா தெரிஞ்சிக் கிட்டு இருக்கிறவங்க கொஞ்ச நேரத்திலேயே சின்னப் புள்ளியா மறைஞ்சுப் போயிட்டாங்க…..

அந்த நேரத்திலயும் ரொம்ப ஆழமா யோசிக்கிறான் நம்ம கோபால், நாம அப்படி என்னத் தப்பு செஞ்சோம்? நம்ம பேத்தியா வீட்டுக்கு தானே அந்த கம்பை எல்லாம் அனுப்பி வைச்சோம்? அதுக்கு ஏன் அப்பாவுக்கு இவ்வளவு கோபம் வந்தது? மதியமும் இப்படித் தான் என்னைப் பார்த்து முறைச்சாரு. நான் அப்படி என்னச் செஞ்சிட்டேன்? அவங்க கேட்ட மாதிரி பாதிச் சோறை வைக்கல நானு……. இப்ப .இப்படிச் செஞ்சிட்டாரே!!!

சரி சரி நமக்கென்ன இப்ப? இப்படியே போயிட்டு இருந்தா நாம நம்ம பேத்தியா வீட்டு புழக்கடைக்கு தான போய் சேரப் போறோம். ஆனா, இப்போ ரொம்ப குளுருதே…. அதுக்கு நாம எதையாவது செஞ்சாகணுமே? சரி சரி நாம யாரு கிட்டயாவது உதவிக் கேட்போம் என லேட்டா யோசிச்சாலும் லேட்டஸ்டா யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்தான். உதவி கேட்டு கத்த ஆரம்பிச்சான். அப்போ தானே ஆற்றுப் பக்கம் யாராவது இருந்தா அவங்களுக்கு இவன் சத்தம் கேட்கும்.

“ஐயா காப்பாத்துங்க…………..அம்மா காப்பாத்துங்க”

“ஐயா காப்பாத்துங்க…………..அம்மா காப்பாத்துங்க”

“ஐயா காப்பாத்துங்க…………..அம்மா காப்பாத்துங்க”

“ஐயா காப்பாத்துங்க…………..அம்மா காப்பாத்துங்க”

கொஞ்ச நேரம் கத்தி பார்த்தான். யாருமே அவனைக் காப்பாத்த வழியில்லை. அதனால கத்துறதை கொஞ்சம் மாத்தி கத்திப் பார்த்தான்.

“என்னைக் காப்பாத்துவோருக்கு நான் வேலை செஞ்சு தருவேன்.”

“என்னைக் காப்பாத்துவோருக்கு நான் வேலை செஞ்சு தருவேன்.”

“என்னைக் காப்பாத்துவோருக்கு நான் வேலை செஞ்சு தருவேன்.”

“என்னைக் காப்பாத்துவோருக்கு நான் வேலை செஞ்சு தருவேன்.”

என ஒன்னு வாங்கினா ஒன்னு ஃப்ரீன்னு நம்ம டிவில அட்வர்டைஸ்மெண்ட் பார்த்திருப்போம்ல அது போல கத்திட்டே இருந்தான். ஆற்றுத் தண்ணி அவனை, தன்னோட ஓட்டத்துக்கு ஏத்த படி வேகமா இழுத்துக் கொண்டு போயிட்டே இருந்தது .நம்ம சொல்லுறதைக் கேட்டாவது யாராவது நம்மைக் காப்பாத்த மாட்டாங்களான்னு சுத்தி சுத்தி கண்ணைச் சுழட்டிக் பார்த்துக் கிட்டே இருந்தான்.

யாராவது கண்ணுக்குத் தெரிஞ்சிட்டாப் போதும்

“ஏ அக்கா “என்னைக் காப்பாத்துவோருக்கு நான் வேலை செஞ்சு தருவேன்.”

ஓ அண்ணா “என்னைக் காப்பாத்துவோருக்கு நான் வேலை செஞ்சு தருவேன்.”

எனக் கத்திக் கொண்டே இருந்தான்.

தே நதியோரம் வேலு வேலு என்னும் ஒருவருடைய நிலம் இருந்தது. என்ன 2 வேலு எல்லாம் இல்லிங்க அவர் ஒரே ஒரு வேலுதான். அவருடைய நிலத்தில் முன் தினம் தான் அறுவடை நடந்திருந்தது.

அறுவடையா அப்படின்னா என்னன்னு கேட்கிறீங்களா? ஓ அப்போ அது எப்படின்னு உங்களுக்கு தெரியாதா குட்டீஸ்… ஹி ஹி நானும் கூட இதுவரைப் பார்த்ததில்லை. ஆனா, நான் என் பேரண்ட்ஸ் கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக் கிட்டதை சொல்றேன். ஓகேயா? கொஞ்ச நேரம் ஆற்றுத் தண்ணில போயிட்டு இருக்கிற கோபாலுக்கு பிரேக் விட்டுட்டு இது என்னன்னு பார்ப்போமா?

நாம தினமும் சோறு, இட்லி, தோசை, புட்டுன்னு வித விதமா சாப்பிடறோமே அந்த அரிசி எப்படி விளைவிக்கிறாங்கன்னு சொல்லுறேன். என்ன மாம்பழம் மாதிரி மரத்தில விளையுமா? இல்லை இல்லை தப்பு….. என்ன பாகற்காய், திராட்சை மாதிரி கொடியில விளையுமா? இல்ல இல்லை இந்த ஆன்ஸரும் தப்பு. நான் சொல்றேன் கேட்டுக்கோங்க சரியா? நான் சொன்னது சரியா தப்பான்னு அப்புறமா உங்க தாத்தா பாட்டிகிட்ட கேட்டுக்கோங்க ஓகே. எதையாவது நான் தப்பா சொல்லி வச்சா மறக்காம எனக்கும் சொல்லித் தாங்க குட்டீஸ்,

விவசாயிகள் கிட்ட விதை நெல்லுன்னு இருக்கும் அதான் விதைகள் (seeds) அதை அவங்க முதலில் “நாற்றங்கால்” என்கிற குறிப்பிட்ட இடத்தில் நெருக்கமா தூவிடுவாங்க. அங்கே தான் குட்டி குட்டியா நாத்துகள் ( குட்டி நெற்செடிகள்) வளரும். இது நாத்துச் செடியா வளர்றதுக்கு ஏறத்தாழ ஒரு மாசம் பிடிக்கும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.