(Reading time: 4 - 8 minutes)

கவிதை சிறுகதை - காதல் என்பது யாதெனில்???? - நர்மதா சுப்ரமணியம்

Love

தறியது நெஞ்சம் அவனுக்கு

அவள் அங்கில்லை

என்று அறிந்தப் போது....

மனதில் கலக்கத்துடன்

நடையில் தளர்ச்சியுடன்

கிளம்பினான்

அவள் வீட்டிலிருந்து

அவளைத் தேடி....

 

பின்னோக்கி பயணித்தது

அவனின் எண்ணங்கள்.....

 

ன்று அவன் திருமணம்...

 

அவனுக்காய் தேர்வு செய்தப் பெண்

தன் காதலனோடு கைகோர்க்க...

விதி வசத்தால்

அவன் மனைவியானாள் அவள்...

 

 

பெருத்த இடை

கரிய நிறம் என

அவன் விருப்பத்திற்கு மாறான

அம்சம் அவள்....

 

எரிச்சலின் உச்சத்திலும்

கழிவிறக்கத்தின் விளிம்பிலும்

இருந்தான் அவன்....

 

சிதைந்தக் கனவுகளுடன்

காத்திருந்தான் அவளுக்காக

அவனறையில்....

 

"உங்களுக்கு

பொறுத்தமற்றவள் நான்..

கேலிப்பேச்சுக்கள் கேட்டு

தனிமைப் படுத்தப்பட்டு

பழகிப் போனவள் நான்...

வாழலாம் உங்கள் விருப்பம் போல்

தடை சொல்ல மாட்டேன் நான் "

என்றுக் கூறி

அவன் உறக்கத்தை விழுங்கி

நிம்மதியாய் உறங்கிவிட்டாள்

அவள் அன்றிரவு....

 

கோபமும் வெறுப்பும் மட்டுமே

அவனுக்கு

அவள் மேல் இருந்த உணர்வு..

துளியளவும் காதலும் இல்லை

ஆசையும் இல்லை அவள் மேல்...

 

மஞ்சள் கயிறு மகிமையோ

தன்னவன் என்கின்ற எண்ணமோ

ஏதோ ஒன்று

அவளின் மனதின் சிம்மாசனத்தில்

அவளின் உயிராய்

அவனை இருத்தியது

சிறிது நாட்களில்.....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.