(Reading time: 10 - 20 minutes)

அடேங்கப்பா...தோசை,சாம்பார் . ஹும் ..இதெல்லாம் பிறகு ஒரு காலத்துல 5ஸ்டார் ஹோட்டல்ல ,அதுவும் மாதத்திற்கு ஒரு முறை தான் ஒருவருக்கு சாப்பிட முடியும்னு சட்டம் வரும்னு எவனாவது நினைச்சு இருப்பானா.

பின்னால் ரேடியோ ஓடிக்கொண்டு இருந்தது 'காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே', வீட்டின் முன்னே நாய்கள் குறைக்கின்றன,சூரிய ஒளி என் முகத்தை சுட ,நான் சாப்பிட்டு விட்டு கை கழுவினேன் . புத்தகங்கள் , புதிய புத்தகங்களின் வாடை, முகன்று பார்த்துவிட்டு பெரு மூச்சு விட்டேன்.புத்தகங்களை அள்ளி பையில் போட்டுவிட்டு, பையை தோளில் மாட்டிக்கொண்டேன் வாழ்வில் முதன் முதலாக.எல்லாமே வீட்டிற்குள் வந்துவிடும், கல்வி,எழுத்து,புத்தகம்  சிறிய டேப்லட் இற்குள் சுருங்கிவிடும்.புத்தகம் அழிந்து விடும்,இணையம் தான் நூலகம் , கல்வியும் வியாபாரம் ஆகிவிடும் .இதெல்லாம் சொன்னால் எவன் நம்புவான் ?... அம்மாவுடன் ஸ்கூல் போக வீட்டை விட்டு வெளியேறினேன்.

பிரதான பாதைக்கு சிறிது தூரம் நடக்க வேண்டும், "க்கீரை கிக்கீரை" தள்ளு வண்டியில் கூவிக்கொண்டு ஒருவன் போனான் ...காகம் தான் கஷ்டப்பட்டு தேடிய உணவை உறவுகளுக்கு பகிர்ந்தளிக்க கரைந்துக்கொண்டிருந்தது.பெட்டிக்கடையில் அண்ணா யாருடனோ குரல் உயர்த்தி சண்டையிட்டுக்கொண்ண்டிருந்தார், ஹோட்டலின்  வாசனையை மரத்தின் இலைகள் அசைந்து என் பக்கம் அனுப்பி வைத்தன.ட்ரெட்மில் இல்லாது அவசரமாக நடக்கும் மனிதர்கள், வெள்ளை நிறத்தில் கூட்டமாக மாணவர்கள் ... என்னை மறந்த நிலையில் பாதையை வந்து அடைந்தோம். 101 இலக்கம் பேருந்து வந்தது, அம்மா என்னை இழுத்துக்கொண்டு ஏறி ஒருவாறு கஷ்டப்பட்டு இருவரும் அம்ர்க்கையில் அமர்ந்துக்கொண்டோம்.

30 நிமிடம் ஆகும் ஸ்கூல் சென்றடைய. என் நினைவுகள் பேரூந்தின் ஜன்னல் வழியே எங்கோ ..அப்பப்பா எத்தனை சம்பவங்கள் ,எவ்வளவு உயிரோட்டம் அந்த  சிறு நடையில். பேரூந்தில் அந்த 30 நிமிடங்களும் நடந்தவற்றையும் , மேலும் கற்பனையில் பலதையும்  அசைப்போட்டுக்கொண்டே சென்றேன். ஒரு சிறுவனின் மூளைக்கு எவ்வளவு சுவாரஸ்யம், பேரூந்தில் சுயமாக சிந்திக்க எவ்வளவு நேரம் கிடைக்கிறது, நவீன காலத்தில் இதற்கெல்லாம் எங்கே நேரம், ஒரு சிறுவன் சுயமாக சிந்திக்கிறானா? ஹும் எங்கே அதற்கெல்லாம் நேரம் இருக்கிறது ,எல்லாரும் கையடக்க தொலைபேசியிலும், ஐ டேப் ..அதாவது கண்களால் பாவிக்கக்கூடிய தொலைபேசியிலும் மூழ்கி , அதிலேயே நீச்சல் போடுகின்றனர். வேறு எதையாவது சிந்திக்க நேரம் எங்கே ? அவ்வாறு சிந்திக்கவும் சம்பவங்கள் எங்கே ? இப்படி இருந்தால் எப்படி ஆக்கபூர்வமாக  அவனது மூளை சிந்திக்கும் .. ஹும் . ஒரு நாளியிலேயே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.