(Reading time: 6 - 12 minutes)

ரேகாவின் கைகளை குலுக்கினர். கட்டைவிரலை உயர்த்தி, வெற்றியை பாராட்டினர்!

 இந்தக் காட்சியை சமையலறையிலிருந்து பார்த்த, மாணிக்கம், தான் பெற்ற செல்வங்களிடம் கையெடுத்து கும்பிட்டு, மௌனமாக இருக்கச் சொல்லி வேண்டினாள்.

 அவள் வேண்டுகோளுக்கு மரியாதை தந்து, மூவரும் நகர்ந்தனர்.

 பேராசிரியர் வயிறு நிறைய திருப்தியாக உண்டுவிட்டு, எழுந்தார்.

 வாசல் கதவு தட்டப்பட்டது! புது சிலிண்டர் வந்துவிட்டது!

 கொண்டுவந்த டெலிவரி சிப்பந்தி, பணத்துக்காக காத்திருந்தபோது, பேராசிரியர் அவனிடம் பேச்சுக் கொடுத்தார்.

 " ஏம்ப்பா! திடீர்னு ஏன் ஸ்டிரைக் பண்ணினீங்க?"

 " சம்பள உயர்வு கேட்டோம், முதலாளியம்மா ஒரு மாசம் டயம் கேட்டாங்க! வெளிநாடு போயிருக்கிற அவங்க புருஷன் திரும்பிவந்தபிறகுதான், கோரிக்கையை பரிசீலிக்க முடியும்னு!

 எங்களிலே சிலபேர், என்ன நினைச்சாங்க, முதலாளியம்மாவுக்கு நெருக்கடி கொடுத்தால், பயந்துபோய் சம்பளத்தை உயர்த்திடுவாங்கன்னு....."

 "இந்தா பணம்! கிளம்பு, சீக்கிரம்! மற்ற வீடுகளிலும் உனக்காக காத்திருப்பாங்க!" என்றாள், மாணிக்கம்.

 " இருப்பா! சொல்லவந்ததை முடி! அப்புறம் ஏன் வேலைக்கு வந்தீங்க?"

 " நாங்க நினைச்சது வேறே, நடந்தது வேறே! முதலாளியம்மா எங்களுக்குப் பதிலா வேற ஆளுங்களை வேலையிலே அமர்த்த, சீரியஸா இறங்கிட்டாங்க!

 அதைப் பார்த்ததும், எங்க ஆளுங்க மிரண்டுட்டாங்க! ஏன் தெரியுங்களா? நாங்க யாரும், சம்பளத்தை நம்பி வேலை செய்யலே, வீட்டுக்கு வீடு, சிலிண்டருக்கு பத்து ரூபாய் இனாம் தருவாங்க! ஒரு நாளைக்கு அந்த வகையிலே குறைந்தது, ஆயிரம் ரூபாய் கிடைக்கும், அதனாலே, அலறிண்டு வேலைக்கு சேர்ந்துட்டோம்!

பொம்பளைங்கதானேன்னு தப்பா எடை போட்டோம்...சரி, நான் வரேங்க!"

 அவன் நகர்ந்ததும், ரேகா, குமார், சியாமளா மூவரும் கைதட்டி 'பெண்கள் தினம் வாழ்க'ன்னு குரல் கொடுத்தனர்!

 பேராசிரியர் சிரித்துக் கொண்டார்.

 அவருக்குப் புரிந்தது, இளைய தலைமுறைப் பெண்கள் விழித்துக் கொண்டுவிட்டனர்!

 'அச்சம் தவிர்'க்க, அவர்கள் தயாராகிவிட்டனர்.

 பெண் இனத்தின் மூத்தவர்கள்தான் இன்னமும் தங்கள் அடிமைத் தளைகளிலிருந்து விடுபடாமல், இன்னமும் பயப்படுகிறார்கள்!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.