(Reading time: 12 - 23 minutes)

வளை முறைத்து கொண்டே treat கொடுத்து சிறிது நேரம் பேசி முடித்து அனைவரும் திரும்பினர் ....

ரேணு மீராவை அழைத்து

பாருடி எவ்ளோ பணம் இருந்தாலும் ஒரு எதிர் பார்ப்பு இல்லாம தருவதற்கு ஒரு நல்ல மனசு வேண்டும்... அந்த சுரேஷ் அப்டி தான் ஓகே....

மீரா முறைத்தாள் ...

நான் உன்ன அவன் கூட சேத்து வெச்சு பேசலடா .. நான் என்ன சொல்ல வரேன்ன ..கடவுளுக்கு உன்ன ரொம்ப புடிக்கும் , உனக்கு ஒரு கஷ்டம் வந்ததும் நல்ல மனசு உள்ள ஒருத்தர அனுப்பி உன்ன பார்த்துப்பார் என்று நீ நம்பனும் ....ஓகே வ ?? அதுக்கு ஒரு பாடம் தான் இது என்றாள் .....

மீரா தலை அசைத்தாள்... பூரணி சிரித்து கொண்டே அவளிடம்,

சந்தோஷமா இரு உனக்கு நல்லது தான் வரும் .... சும்மா அழுகாம வாழ்கைய நம்பிக்கை விடாம பாரு .. அதுவும் உன்ன விடாம புடிச்சிக்கும் .. என்று கூறி சிரிக்க செய்து விடை பெற்றனர் ......

சிரித்த முகத்தோடு வீட்டிற்கு வந்தாள் மீரா .... இரண்டு நாள் முடிவில் பெங்களூர் வந்து சேர்ந்தாள் .... காலையில் பிரஷ் ஆகி ஆபீஸ் சென்று சுரேஷ்'கு மின்னஞ்சல் அனுப்பி வைத்தாள்...

பதில் மின்னஞ்சல் கிடைத்ததும் திகைத்தாள் .. "அவன் நலம் விசாரித்து விட்டு பணம் இருக்கும் போது தா ... காலேஜ் வொர்க் முடிந்ததா ? .... " அதற்கான பதில் மின்னஞ்சல் அனுப்பிவிட்டு தன்னிடம் பணம் உண்டு தருகிறேன் என்றாள் .. அவன் தனது தாயாரின் தொலை பேசி நம்பர் கொடுத்து அதை சார்ஜ் செய்தால் போதும் என்றான்... அடுத்த நொடி அதை செய்து முடித்தாள்.....

மறு நாள் காலையில் அவன் ஒரு நன்றி அனுப்பியிருந்தான் ... காரணம் கேட்ட போது " உன்னால என்னோட அம்மா ஒரே குஷி .. போன் புல் காசு என்று சொல்லி குடும்பத்தில் இருக்கும் எல்லாரோடும் பேசறாங்க ஹ அஹ ஹ "

அவள் மீண்டும் மனமார்ந்த நன்றியை கூறி விடை பெற்றாள் ..... அதற்கு அவன் உனக்கு வேற ஏதேனும் கேட்க வேண்டுமா என்றான் ??

அவள் திகைத்து போயி " நீங்கள் எப்படி ஒன்றும் யோசிக்காமல் உதவினீர்கள் ??"

சுரேஷ் தனக்கும் ஒரு தங்கை இருப்பதாகவும் , உன் மன நிலை புரிந்து கொள்ள முடியும் என்று கூறி விடை பெற்றான் ......

அந்த நாளை எண்ணி பார்த்த திகைப்பும் சந்தோஷமும் தீராமல் தன் டைரி எடுத்து குறித்து கொண்டாள் இவ்வரிகளை ...

"God is here only some wer with us.....we wont be able to realize him.....we whave to see him through small small things.....

Suresh u will be ther in ma prayers always .... once again thank uuuu"

after one year .....

At bangalore

மீரா - என்னம்மா கூப்டீங்கள ...

அம்மா - உனக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கு , போட்டோ பார்த்துக்கோ .....

மீரா - ப்ளீஸ் மா , எனக்கு வேண்டாமே.... நான் காலம் பூர உங்கள பாத்து உங்க கூடவே இருக்கிரேனே .....

அம்மா - சும்மா டைம் வேஸ்ட் பண்ணாத மீரா .. பார்த்து சொல்லு ....

மீரா - சரி மா , புடிக்கல ....

அம்மா - ஏன் ?

மீரா - ப்ளீஸ்........

அம்மா - மீரா அந்த பையன் இன்னைக்கு உன்ன கூப்பிடுவான் பேசு ...

மீரா - ப்ளீஸ் ...

அம்மா - நான் முடிவு பண்ணிட்டேன் மீரா , ரெண்டு நாளைக்கு வந்திட்டு போ... ஒன்னு உன்னோட engagement அப்புறம் உன்னோட கல்யாணம் .. ஓகே... அவன் கூப்பிட்டா ஒழுங்கா பேசு என்ன .. பாய்...

ட்ரிங் ட்ரிங் ட்ரிங்

மீரா - ஹலோ..

yaah மீரா here .. may i know who is this...

பிறகு அவள் செவிகளில் ஒன்றும் பதியவில்லை ....

பெண் பார்க்கும் படலம் .......

ஒரு தாய் வந்து தன் கை பற்றி,

என் மகனை நீ நல்லா பார்க்கணும் சரியா என்றதும் உணர்வு வந்து அந்த தாயை பார்த்தாள்... அவர் விடை பெற்று மகன் வந்தான் ..... ஏதோ சந்தையில் தாமே ஒரு விற்பனை பொருள் ஆவதை போல் உணர்ந்தாள்......

பையன் வந்தாச்சு என்று கூறி அனைவரும் வெளியேறினர் ......

திடீர் என்று உணர்வு வந்தவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.. அவன் ஒரு புன்னகையுடன் haiii என்றான்.... எற்றுது போல் தலை அசைத்து... அழ ஆரம்பித்தாள்...

" எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை .... ப்ளீஸ் உங்க வாழ்கையை நாசம் செய்யதீர்கள் என்று கண்களில் நீருடன் வேண்டினாள்...

ஒரு புன்னகையுடன் ..உனக்கு boy friend யாரவது ??

மீரா- சீ ....சி

அவன் ஒரு பெருமூச்சுடன் அது எப்படி என்னை எப்பொழுது பார்த்தாலும் அழுது கொண்டு இருக்க என்றான் ???

மீரா - waaaaat ??

I am Suresh.. I am glad to meet u அகின்.. என்றான் ஒரு வசீகர புன்னகையுடன்....

வேறு ஒன்றும் அவன் பேசவும் இல்லை .. திருமணத்திற்கு சம்மதம் என்று கூறி விடை பெற்றான் .... அந்த அதிர்ச்சியில் இருந்து வெளி வரும் முன் engagement day வந்தது ..... நாட்கள் இறக்கை கட்டி பறந்தது ..... நாளை திருமணம் என்ற நிலையில் நிலவை வெறித்து பார்த்து இருந்தாள் மீரா ....

ட்ரிங் ட்ரிங் ட்ரிங்

மீரா - ஹ்ம்ம்

சுரேஷ் - என்னமா வெறும் ஹ்ம்ம் தான் வருது .....

மீரா - பயமா இருக்கு ...

சுரேஷ் - ஹ்ம்ம்..... ஆமா நான் உன்னை கடிச்சு தின்னுருவேன் ... என்னடி பண்ணுவ ..

மீரா - ஏம்பா...இப்டி ..ஹ்ம்ம்

சுரேஷ் - ரெண்டு மாசத்ல வேற என்ன சொன்ன சொல்லு ... பயமா இருக்குங்க , எனக்கு யாருமில்ல ..........etc

மீரா - ..................

சுரேஷ் - என்னம்மா .... ஓகே..... ஓகே.. jokes apart ... உனக்கு நான் இருப்பேன் எப்பவுமே ..... ஓகே வா.. உன்ன இனி மேல் அழ விட மாட்டேன் ..ஹ்ம்ம் ... உன்ன பஸ்'ல கூட தனியா விட மாட்டேன்ன பார்த்துக்கோ .. நான் சூப்பர் இல்ல .....

மீரா - ஒரு சந்தேகம் ??

சுரேஷ் - ..............

மீரா - அ..து வ..ந்து... அன்னைக்கு எதுக்கு எனக்கு ஹெல்ப் பண்ணேங்க ...???

சுரேஷ் - ஐயோ என்னால முடியல மா ... எத்தன தடவடி கேட்ப ....ஹ்ம்ம் சொல்லு .... இதுல நீ century கிராஸ் பண்ணியாச்சு தெரியுமா ??

மீரா - நீங்க பதில் சொல்லல ??

சுரேஷ் - ஹ்ம்ம் .. இனி கேட்க மாட்டேன் சொன்னா சொல்றேன் ....

மீரா - ஓகே..ஓகே

சுரேஷ் - ஒரு சின்ன குழந்தை பலூன் காணவில்லை என்று அழுத மாதிரி இருந்துச்சு ... அப்புறம் பார்த்தா அம்மாவையும் அப்பாவையும் கானமமே .. அவ்ளோ தான் ... சமாதான படுத்த நான் பட்ட பாடு இருக்கே .....ஹ ஹ ஹ... அப்புறம் அன்னைக்கு பஸ்'ல மழை வர ஆரம்பிச்சப்போ உன் தலை மேல தண்ணி சொட்டு சொட்டா விழ ஆரம்பிச்சது அத பார்த்து எனக்கே ஒரே கவலையா போச்சு ..... ஹ்ம்ம் .. அன்னைக்கு ஒரு நிமிஷம் உன் தலை மேல கை வெச்சு அது தடுக்கனும்...... ஹ ஹ .... எனக்கு அன்னைக்கு அந்த உணர்வு ரொம்ப சில்லியா பீல் பண்ணேன் .........

மீரா -சிரித்த முகத்தோடு....உண்மையாவா ??

சுரேஷ் - ஹ்ம்ம் உண்மையாட

மீரா - சத்யமவா ??

சுரேஷ் - சத்தியம்

மீரா - ப்ராமிஸ் ??

சுரேஷ் - ப்ராமிஸ்

மீரா - thank you sooo much

சுரேஷ் - அதை நீயே வெச்சுக்கோ .. ஒரு i love you சொல்லு .....

மீரா - நாளைக்கு ராத்திரி சொல்றேன் ..பாய் ..

சுரேஷ் - டெய்லி இதே எஸ்கேப் தான் ... நாளைக்கு உன்ன பேச விட மாட்டேன் அதனால இப்போ சொல்லு ....

மீரா - என்ன .....

சுரேஷ் - என்ன ... புரியலையா........

மீரா -- அம்மா கூப்பிடுறாங்க ...பாய் என்று துண்டித்தாள்...

சுரேஷ் - ராக்சஷி.......ஹ ஹ ஹ

என்றவன் அவளுக்கு ஒரு messg அனுப்பினான் ..

"பயம் போயிடிச்சா madam "

மீரா - ஹ்ம்ம்....

"do u trust me now ... ???"

மீரா - completely ...... unconditionallly ........

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.