(Reading time: 12 - 24 minutes)

இனிதான வரம் வேண்டும் - வத்ஸலா

This is entry #19 of the current on-going short story contest! Please visit the contest page to know more about the contest.

லர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த மணமேடையில் அமர்ந்திருந்தான் மாதவன். மனம் எதிலுமே செல்ல மறுத்தது. அப்பாவின் கட்டாயத்திற்காக எல்லாம் நடந்துக்கொண்டிருக்கிறது. மனம் இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

இது எதுவுமே சரியாக வராது என்றே தோன்றிக்கொண்டிருந்தது அவனுக்கு. எது அவளை இந்த திருமணதிற்கு ஒப்புக்கொள்ள வைத்தது என்றே புரியவில்லை.

அவன் அருகில் வந்து அமர்ந்தாள் சுப்ரஜா. தலை முதல் பாதம் வரை எல்லாவற்றையும் இறைவன் பார்த்து பார்த்து செதுக்கிய சிலை அவள். அவளது இடையை தாண்டி நீண்ட கூந்தலும், கவி பாட தூண்டும் கண்களும், திரும்பி பார்க்க வைக்கும் நிறமுமாய், அவள்.

Inithana varam vendum

அவள் பக்கம் திரும்பக்கூடவில்லை மாதவன். அவனது அப்பாவின் நண்பரின் மகள் அவள். திடீரென்று வந்தது இந்த சம்மந்தம். பெண் பார்த்துவிட்டு வந்து பதினனைந்தே நாட்களுக்குள் இந்த திருமணம். அவள் வீட்டில் வசதிக்கும் ஒன்றும் குறைவில்லை. அப்படி இருந்தும் என்னை ஏன் தேடி வரவேண்டும் அவள்?.

அவளை பெண் பார்க்க சென்ற தினமே இந்த திருமணம் வேண்டாமென்றும், அதற்கான காரணத்தையும்  வெளிப்படையாய் சுப்ரஜாவிடம் சொல்லியே  விட்டிருந்தான் அவன். அதற்கு பிறகும் எப்படி இந்த திருமணதிற்கு சம்மதித்தாள் இவள்.? யாருடைய கட்டாயத்தில் இங்கே வந்து அமர்ந்திருக்கிறாள்? அவனுக்கு புரியவேயில்லை.

வந்தது அந்த நொடி. தனது கையில் தாலியை எடுத்து அவள் கழுத்தில் அவன் கட்டிய அந்த நொடியில், அவள் கண்களை அருகாமையில் அவன் சந்திக்க, அதில் நிறைந்திருந்த மகிழ்ச்சியுடன் அவனைப்பார்த்து புன்னகைத்தாள் சுப்ரஜா. ஆனால் எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் திரும்பிக்கொண்டான் அவன்.

அக்னியை வலம் வர அவள் கையை அவன் பற்றிக்கொண்ட போது அப்படி ஒரு சிலிர்ப்பு எழுந்தது அவளுக்குள்ளே. மெல்ல மெல்ல கண்களை நிமிர்த்தி அவன் முகத்தை பார்த்தாள் சுப்ரஜா. எந்த உணர்வும் இல்லாத பாவம் அவன் முகத்தில். மெல்ல கண்களை தாழ்த்திக்கொண்டாள் அவள்.

அவனது மனநிலை அவளுக்கு புரியாமல் இல்லைதான். ஆனால் மனதின் ஓரத்தில் சின்னதாய் ஒரு நம்பிக்கை அவளுக்கு. என் மனதில் இருப்பதை என்றாவது ஒரு நாள் அவன் புரிந்துக்கொண்டு விட மாட்டானா என்ன?

சில நாட்கள் கடந்திருந்தன. திருமணமான புதிதில் மணமக்களுக்கு நடைபெறும் விருந்து உபசாரங்கள் எல்லாம் நடந்து முடிந்திருந்தன. மற்றவர்களுக்காக பெயருக்கு சிரித்து, வெட்கப்பட்டு, நன்றாகவே நடித்து முடித்து விட்டு அவன் ஊரான சென்னைக்கு  கிளம்பி விட்டிருந்தனர் இருவரும். இந்த சில நாட்களில் இருவரும் பரிமாறிக்கொண்டது மொத்தமாய் இருபதிலிருந்து, முப்பது வார்த்தைகள் மட்டுமே.

குடும்பத்தில் எல்லாரும் வந்து வழி அனுப்ப ரயில் ஏறி விட்டிருந்தனர் இருவரும். அவளுக்கு எதிர் பர்த்தில் படுத்து உறங்கிவிட்டிருந்தான் அவன். அவளுக்குதான் உறக்கம் வரவில்லை.

மாதவனின் தங்கை ராதா இவளுக்கு தோழி. திருமணதிற்கு முன்னாலேயே அவள் சொன்னாள் இவளிடம்.

'எங்க அண்ணனை விட்டா உனக்கு வேறே மாப்பிள்ளையே கிடைக்கலையா? ஒரு கார் கூட ஓட்ட கூட கத்துக்கலை அவன். ஏதோ கவர்ன்மென்ட் வேலை அப்படிங்கறதுனாலே குப்பை  கொட்டிட்டு இருக்கான். என் வீட்டுக்காரருக்கு எங்க அண்ணனை கண்டாலே படிக்காது. நானே சொல்றேன் அவன் கூட முழுசா ஒரு மாசம் குடும்பம் நடத்துறது கூட ரொம்ப கஷ்டம். சரியான சிடுமூஞ்சி சுப்ரி அவன். எல்லாத்துக்கும் எரிஞ்சு எரிஞ்சு விழுவான். அவனுக்கு லவ்ன்னா என்னன்னே தெரியாது.'

அவளை நேராக பார்த்து சொன்னாள்  'உனக்குத்தான் லவ்ன்னா என்னனு தெரியலை. உங்க அண்ணன் கிட்டே அது கொள்ளை கொள்ளையா இருக்கு. நீ கவலை படாதே நான் பார்த்துக்கறேன்'.

'எனக்கென்ன? என்றாள் ராதா. ஏதோ friendடாச்சேன்னு சொன்னேன். உன் தலையெழுத்து அதுதான்னா நான் என்ன பண்ண முடியும்? அனுபவி'. சென்றுவிட்டிருந்தாள் அவள்.

அவள் மட்டுமல்ல சுப்ரஜாவின் வீட்டிலும் யாருக்கும் இந்த திருமணத்தில் பெரிதாய் ஆர்வம் இல்லை. எல்லாரும் இதையேதான் கேட்டார்கள் 'வேறே மாப்பிள்ளையே கிடைக்காதா உனக்கு?

ஆனால் மாதவன்தான் வேண்டுமென போராடி சேர்ந்திருக்கிறாள் அவனை. சுப்ரஜாவின் அடி மனதில் அப்படி ஒரு நம்பிக்கை அவன் மீது. தனது வாழ்கையில் அவள் இதுவரை எதிர்பார்த்த அன்பும் பாசமும் அவனிடமிருந்து கிடைத்துவிடுமென்ற நம்பிக்கை.

வீட்டுக்கு வந்து சேர்ந்தாகி விட்டது. அவர்களை இருவரையும் தவிர அந்த வீட்டில் வேறு யாருமில்லை.

வீட்டுக்குள் நுழைந்தவுடனே தனது ஏ.டி.ம் கார்டை அவளிடம் நீட்டினான். உனக்கு வேலை கிடைக்கற வரைக்கும் இதை நீ யூஸ் பண்ணிக்கோ. உன் ரூம் மாடியிலே. நீ எதுக்கும் என்னை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

இல்லை என்கிட்டே பணம் இருக்கு... அவள் தயங்கி சொல்ல

இல்லை இதை உனக்கு கொடுக்க வேண்டியது என் கடமை சென்று விட்டிருந்தான் அவன்.

சின்ன பெருமூச்சுடன் அவன் சென்ற திசையை பார்த்தபடி சில நொடிகள் நின்றிருந்தாள் அவள்.

ஒரு மாதம் இப்படியே கழிந்திருந்தது. அவள் அவன் மனதில் இடம் பிடித்து விட செய்த முயற்சிகள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன.

அவள் என்ன செய்ய முயன்றாலும், அதற்கு அவனிடமிருந்து, கோபமே பதிலாய் கிடைத்தது.

அவனது அனல் வார்த்தைகள் அவளை என்னதான் காயப்படுத்தினாலும், மௌனத்தையே அதற்கு பதிலாக்கி, எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கையின் துணையுடன் அடுத்த நாளை நோக்கி காத்திருப்பதே அவளுக்கு வழக்கமானது.

அன்று மாலை அவன் வீடு திரும்பியபோது ஹாலில் டிவியில் மூழ்கிப்போய் அமர்ந்திருந்தவள், அவன் வந்ததை பார்த்து சட்டென எழ அவள் மடியில் இருந்த ரிமோட் கீழே விழுந்து சிதற, தனது மொபைலை சோபாவின் மீது எறிந்துவிட்டு காரணமே இல்லாமல் சட்டென எகிறினான் அவன்.

எம்மேலே கோபம் இருந்தா என்கிட்டே காட்டு ரிமோட்ட்டை தூக்கி போட்டு உடைக்கிற...

இல்லை தெரியாம.... பேசத்துவங்கியவளை பேச விடவே இல்லை அவன்.

அவன் நெருப்பு வார்த்தைகள் இந்த முறை மொத்தமாய் அவள் இதயத்தை சுட்டு விட அதன் தாக்கமாய் அவள் கண்கள் நிறைந்தன.

அதைப்பார்த்த மாத்திரத்தில் ஏனோ சட்டென அடங்கிப்போனவன் தனது அறைக்குள் கதவை சாத்திக்கொண்டான்.

தனது அறை கட்டிலில் சென்று அமர்ந்தவனால் தன்னையே மன்னிக்க முடியவில்லைதான். சில நிமிடங்கள் முகத்தை கைகளுக்குள் புதைத்துக்கொண்டு அமர்ந்திருந்தவன் மெல்ல எழுந்து கண்ணாடி முன் சென்று நின்று வாய்விட்டு சொன்னான்.

'என்னை போய் கல்யாணம் பண்ணிக்கிட்டியேடா. பார் எப்படி இருக்கேன் பார். இவ்வளவு  கருப்பா, குண்டா, முப்பத்தியொரு வயசிலேயே முன்தலையிலே முடியெல்லாம் கொட்டிப்போய்........ என்னை எந்த பொண்ணுக்கும் பிடிக்காது. எனக்கு தெரியும். எந்த கட்டாயத்திலே என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேடா? . நீ என்னை விட்டு போயிடணும்னு தான் நான் இவ்வளவு கோபப்படறேன். போயிடு. போய் வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இரு.'

அதே நேரத்தில் தனது அறைக்கட்டிலில் படுத்துக்கிடந்தாள் அவள். தன்னை பெண் பார்க்க வந்த போது அவனுடன் பேசிய நிமிடங்கள் மனதிலாடின.

'உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா? கேட்டாள் அவள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.