(Reading time: 14 - 28 minutes)

உயிரில் கலந்த உறவே – வளர்மதி

This is entry #21 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

ம்மியமான காலை பொழுது கதிரவன் மிதமான வெப்பத்தில் அழகாய் விடிந்தது. சிட்டுக்குருவிகள் தங்களின் கூண்டுகளில் இருந்து வெளிவந்து அழகாய் கீச்சிட்டு தங்களின் உணவைத்தேட தொடங்கியது. விடியலையும் சிட்டு குருவின் சத்தத்தையும் பார்த்து ரசிக்க அங்கு இருப்பவர்களுக்குத் தோன்றவில்லை.

மத்திய சிறைச்சாலை... அங்கே இருக்கும் ஒவ்வொரு செல்களும் பல கதைகளை பார்த்தும் கேட்டும் இருக்கின்றன. அங்கு இருக்கும் சுவர்கள் பலரின் கதைகளைக்கேட்டு ஊமையாய் கண்ணீர் வடித்து உள்ளன.

ஒரு நிமிட கோவம்.... பலரின் சந்தோஷத்தையைப் புதை குழியில் தள்ளி, அவர்களை காலம் முழுக்க குற்றவாளி என்ற பெயரில் அவர்களைக் கொல்லாமல் கொல்லும். பலர் இறுதி வரை தங்களின் அன்புக்குரியவர்களைக் காண முடியாமல் தவித்து இருக்கின்றனர்.

uyiril kalantha uyire

இன்று அங்கு இருக்கு ஒரு கைதிக்கு விடுதலை. ஆனால் அவளின் முகத்தில் துளிக் கூட மகிழ்ச்சி இல்லை. கலைந்த தலைமுடியுடன் இரவு முழுவதும் உறங்காமல் அழுது சிவந்த கண்கள், வீங்கிய முகம்... சுவற்றில் தலை சாய்த்து இன்னமும் அமைதியாக அழுதுக் கொண்டிருந்தாள் சௌமியா. 

இன்ஸ்பெக்டர் சந்திரன் ஒவ்வொரு செல்லையும் பார்த்தார்... அதில் உள்ளே இருப்பவர்களைப் பார்த்துக் கொண்டே வரும் பொழுது, அந்த மாடி இறுதியில் திறந்துயிருந்த செல்லைப் பார்த்து  “ஏன்ப்பா, அந்த செல் மட்டும் திறந்து இருக்கு?” என்று கேட்டார்.

“அந்த செல்லில் இருக்கும் பெண்ணிக்கு இன்று விடுதலை சார்...”

“ம்ம்ம் சரி்....” அந்த செல்லை நோக்கி நடந்தவர் அங்கே இன்னும் சிறைச்சாலை உடையில் அமர்ந்து இருந்த பெண்ணைப் பார்த்து “ஏன்ம்மா இன்னும் இங்கேயே இருக்க.... உனக்கு இன்னைக்கு விடுதலை தானே... சீக்கிரம் குளித்து உன் உடைகளை மாற்றி ஆபீஸ்க்கு போம்மா... உன்னை அழைத்து செல்ல வந்தவங்க உனக்காக காத்திருப்பாங்க...”

சந்திரனின் கடைசி வரிக்கு அப்பெண்ணின் உதடுகளில் ஒரு விரக்தி புன்னகை உதிர்ந்தது.

அதை கவனித்தவர் பக்கத்தில் இருந்த காவலாளிடம் “என்ன குற்றத்திற்காக இந்த பொண்ணு உள்ளே வந்து இருக்கா”?

“விபச்சாரம் கேஸ் சார்”

அப்பெண்ணை உற்று பார்த்தவர் அமைதியாக அவரின் அறையில் சென்று அமர்ந்தார். வெளியே இருந்த காவலாளியை அழைத்து

அப்பெண்ணின் கோப்பையைக் கேட்டார்.

இன்ஸ்பெக்டர் சந்திரன் அவ்விடத்தை விட்டு சென்றதும், சௌமியா அவளின் முகத்தை அழுத்தி துடைத்து தன் விதியை எண்ணி நொந்தப்படி குளிக்க சென்றாள்.

சிறிது நேரத்தில் அவளின் கோப்பு சந்திரன் கையில் இருக்க, அப்பெண் செய்ய குற்றத்தையும் அவளின் தண்டனை காலத்தையும் பற்றி படித்தவர் யோசனையில் ஆழ்ந்தார்.

ழு ஆண்டுகளுக்கு முன்னால் இதே போல் ஒரு காலை பொழுதில் சௌமியாவின் பெற்றோர்கள் இறைவனடி சேர்ந்தனர். அவர்கள் உயிருடன் இருந்த வரைக்கும் சௌமியாவிற்கு கவலை என்றால்  என்னவென்று தெரியாது. அவர்களின் இறப்புக்குப் பின்னர் வெளி உலக வாழ்க்கை அவளுக்கு சிறு பயத்தகைக் கொடுத்தது. 

அவளின் அண்ணனின் உதவியுடன் கல்லூரி படிப்பை தொடந்தாள். கல்லூரி படிப்பின் இறுதி ஆண்டில் அவளின் அண்ணனிற்கு வேலையின் காரணமாக வெளிநாடு செல்ல நேர்ந்தது. ஆறு மாதத்தில்  வந்து விடுவேன் என சொல்லிச் சென்றவன் அதன் பிறகு அவன் தாய்நாட்டிற்கு வரவேயில்லை. அந்த நாட்டுப் பெண்ணை காதலித்துத் திருமணம் செய்து கொண்டான்.

சௌமியா அவளின் உறவினர்கள் துணை இன்றி பகுதி நேரமாய் வேலை செய்து அவளின் கல்லூரி படிப்பைப் தொடந்தாள்.

சார்...” காவலாளி குரலில் நிகழ் உலகிற்கு வந்தவர். எதிரே இருந்த பெண்ணை பார்த்தார். “சௌம்யா இதில் இருக்கும் உன் பொருட்களை எல்லாம் சரி பார்த்துக் கொள்!” என்றவர் அவளின் முகத்தில் தெரியும் மாற்றத்தையே பார்த்துக் கொண்டு இருந்தார்.

மேஜை மேல் இருந்த அவளின் உடைமைகளை பார்வை இட்டாள்,  அதில் இருந்த தாலிக்கொடியைப் பார்த்தவளின் பார்வை அதிலே நிலைத்து நின்றது.

கண்கள் கலங்கி, கை விரல்கள் நடுங்க அதை எடுத்தவளின் முகத்தில் சொல்ல முடியாத வேதனையும் வலியும் தெரிந்தது. ஆழ்ந்த மூச்சை விடுத்து அவளின் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி இன்ஸ்பெக்டர்  சந்திரனைப் பார்த்தாள்.

“இந்தாம்மா இனி இந்த தொழிலுக்கு போகாதே! வெளியே போய் நல்ல வழியில் வாழ்க்கையை தொடரு...” என்று சொன்னவர் ஒரு பெரிய புத்தகத்தை எடுத்து அதில் அவளின் கையெழுத்தை வாங்கினார்.

சிறைச்சாலை விட்டு வெளியே வந்தவளுக்கு எங்கே போவது என தெரியவில்லை. அவளை அழைத்து செல்ல யாரும் வர மாட்டார்கள் என்று தெரிந்ததால் அங்கே இருக்கும் யாரையும் பார்க்காமல் குனிந்த தலையுடன் நடந்தாள்.

சற்று தூரம் நடந்தவள் எங்கே செல்லுவது என தெரியாமல் வந்த பாதையில் திரும்ப நடந்தாள். உச்சி வெயில் மண்டையைப் பிளக்க சிறைச்சாலைக்கு வெளியே உள்ள மரத்தின் கீழ் உள்ள நாற்காலியில் சென்று அமர்ந்தாள். மடியில் கையை ஊன்றி, நெற்றியை நீவிய படி அடுத்து என்ன செய்வது, எங்கே செல்லுவது என யோசித்தவளுக்கு சாவை தவிர வேற எதும் தெரியவில்லை.

கண்களை மூடி திறந்தவளுக்கு அவளின் அருகே தெரிந்த கால்களைப் பார்த்தாள்... நிமிர்ந்து பார்க்கவில்லை. அந்த கால்கள் அங்கு இருந்து நகரமால் இருக்க, கோபத்துடன் அங்கே இருந்தவனை பார்த்து அதிர்ந்தாள்.

முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாமல் “வா” என்ற ஒற்றை வரியில் திரும்பி நடந்தான் அவன். சிறிது தூரம் சென்றவன் அவனின் பின்னால் சௌமியா வரவில்லை என்று உணர்ந்தவன் திரும்ப அவள் அருகே சென்று

“என்னை தெரியுதா? நான் உன் கணவன் கதிர்...  ஞாபகம் இருக்கா....?”

அவனின் குரலில் என்ன இருந்தது என்று அவளுக்குப் தெரியவில்லை, ஆனால் அவளுக்குக் கன்னத்தில் அறை வாங்கியது போல் இருந்தது. உட்கார்ந்த இடத்தை விட்டு அசைய மறுத்த கால்களைக் நகர்த்தி கஷ்டப் பட்டு  அவன் பின்னால் நடந்தாள்... அங்கே நின்று கொண்டிருந்த காரில் ஏறினாள்.

கார் நகர்ந்த சில நேரத்தில் சௌமியாவின் மனம் சோர்ந்தது. “என்னிடம் பேச அவனுக்குப் பிடிக்க வில்லையா? நான் நிமர்ந்து பார்க்கும் வரை அவன் என்னிடம் பேசவில்லையே....” என நினைத்தவள் அவன் முகத்தைப் பார்த்தாள் இந்த ஐந்து ஆண்டுகளில் அவனின் தோற்றத்தில் நிறைய மாற்றம் தெரிந்தது. அவளின் பார்வையை உணர்ந்தவன், காரில் உள்ள வானொலியை தட்டி விட அதில்,

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்?
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்
உறவெல்லாம் முள்ளாகும் உயிரெல்லாம் கல்லாகும்
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்?

அந்த பாடல் வரிகள் கேட்டு அவள் கண்கள் கலங்கின. ஏனோ அவன் முன் அழ அவளுக்கு விருப்பமில்லை. கண்களை இருக்க மூடி சீட்டில் தலை சாய்த்துக் கொண்டாள்.

திர் சௌமியாவின் வாழ்வில் எதிர்பாராமல் வந்தவன். சௌமியா கதிரின் அண்ணிக்கு தூரத்து உறவு. ஒரு திருமணத்தில் அவள் சௌமியாவை கதிருக்கு அறிமுகப் படுத்த, அவனின் பார்வையிலே சௌமியாவை பிடித்து இருப்பதை தெரிந்துக் கொண்டாள்.

அந்த திருமணத்தில் இருந்து வந்த ஒரு சில நாட்களில் தரகர் மூலம் கதிருக்கு ஒரு வரன் வந்திருக்க அதற்கு கதிரின் அம்மா சம்மதம் தெரிவித்தார்.

தரகர் சென்ற பிறகு கதிரின் அண்ணன் சௌமியாவை பற்றி சொல்ல, கதிரின் அம்மா மறுத்துவிட்டார். பல முறை பேசி பார்த்தும் அவர் காரணம் சொல்லவில்லை.

கதிரின் பிடிவாதத்தால் ஒரு கோவிலில் சௌமியாவை திருமணம் செய்துக் கொண்டான்.

திருமணம் ஆன அன்றே கதிரின் அம்மாவிற்கும் அவனது குடும்பத்தினர் அனைவருக்கும் அவளைப் பிடிக்கவில்லை என அவளுக்குப் புரிந்தது.

பிடிக்காத மருமகள் கை பட்டாலும் குத்தம், கால் பட்டாலும் குத்தம் போல் சௌமியா என்ன செய்தாலும் அதில் குறை கண்டு பிடித்து அவளிடம் சண்டை போட்டனர்.

ஒரு சில நேரங்களில் கதிரும் அவர்களுக்குத் துணை போனான். தினந்தோறும் நடக்கும் சண்டையில் இருவரும் ஒருவரை ஒருவரை பார்த்தலும் முகத்தை திருப்பிக் கொண்டனர். அவனே பேச முயச்சித்தலும் சௌமியா அதை கண்டுக்கொள்ள மாட்டாள். நாலடைவில் இவர்கள் இருவருக்கும் பேச்சி வார்த்தை நின்று போனது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.