(Reading time: 5 - 9 minutes)

நேர்முகத் தேர்வு - சத்தியசீலன் கண்ணன்

நான் இறுதியாண்டு முதுநிலைப் பொறியியல் மாணவன். கல்லூரியில் நேர்முகத் தேர்வு நேரம் நெருங்கியதும், ஒரு வார விடுப்பு எடுத்து தேர்வுக்கு தயாராக முடிவு செய்தேன். முதுநிலைப் படிப்பு சேர்வதற்கான முக்கிய காரணமே இளநிலையில் கிடைக்காத வேலையை வாங்கியே ஆகவேண்டும் என்றுதான்.

நேர்முகத் தேர்விற்கான நேரமும் நெருங்கியது, நாளை தேர்வு.

சரி, நாளை தேர்விற்கு தேவையான சான்றிதழ்களை நகல் எடுக்கலாம் என நினைத்து மோட்டார் சைக்கிளில் 5 நிமிட பயணத்துக்குப் பின் நகலகம் அடைந்தேன்.

Mike

"தம்பி ! இன்று மின்வெட்டு சாயங்காலம் 5 மணிக்குத்தான் வரும் !", என்றார் (தடங்கல் #1) என்னடா இது ! முதல்ல வந்த வேலையே இப்படி ஆயுடிச்சேன்னு, மாலையே நகல் எடுக்கலாம் என்று அறைக்கு திரும்பிக் கொண்டு இருந்தேன். (கொஞ்சம் ராசியான கடை அதனால் வேறு இடத்துக்குச் செல்லவில்லை)

வேறு ஏதோ யோசித்தப்படி வண்டி ஓட்டிய எனக்கு திடீர் என்று சாலையில் கிடந்த மழை நீர் என்மேல் அடித்தது, என்னவென்று திரும்பினேன், சாலையின் மறுபுறம் சென்ற கனரக வாகனம் ஒன்று தேங்கிக் கிடந்த மழைநீர் மேல் ஏறியதில் இப்போது அந்த மழைநீர் என்னை ஆக்கிரமித்து கொண்டது, (தடங்கல் #2) சகுணமே சரியில்லையே ! என மனது சொல்ல அப்போதுதான் ஒரு திரைப்பட வசனம் ஞாபகத்திற்கு வந்தது " சேத்துலயும் அடி வங்கியாச்சு ! சோத்துலயும் அடி வங்கியாச்சு !!!" என்னை அறியாமல் சிரிப்பு வந்தது, அறைக்கு திரும்பிவிட்டேன்.

மாலை 7 மணிக்கு திரும்ப புறப்பட இப்ப வந்த தடங்கல் #3 போக்குவரத்து காவலாளி மூலமாக, (கடவுளே இதுக்கு ஒரு முடிவே கிடையாதா !) நல்ல வேலையாக கையில் வைத்திருந்த சான்றிதழ்களை அவரிடம் காண்பித்து நாளைக்கு நேர்முகத் தேர்விற்கு போகவேண்டும் என்று ஒரு 15 நிமிட கெஞ்சலுக்கு பின்,  "இனி வண்டி ஆவணங்களோட தான் வெளிலயே வரணும்" என்றார். நானும் சரி சரி என முடிந்த வரை தலையை ஆட்டிவிட்டு அந்த இடம் விட்டு நகர்ந்தேன்....

அடுத்த நாள் காலை,

 (காலை நடந்த தடங்கல் #4, தடங்கல் #5 எல்லாம் சொன்னா கண்டிப்பாக் கடுப்பா ஆயிடுவிங்க !!!)

அப்பா அம்மா விடம் கைபேசியில் வாழ்த்துகளை பெற்று நேர்முகத்தேர்விற்கு சென்றேன்.

தேர்வு ஆறு நாட்கள் மூன்று நிறுவனம் என அட்டவணையிடப்பட்டது.

முதல் நிறுவனம்,

முதல் நாள்-இணையத்தேர்வு, இரண்டாம் நாள்- நேர்முகத்தேர்வு.

முதல் நாள் தேர்வு கணினியில் கொடுத்துவிட்டு அறைக்கு திரும்பிவிட்டேன்.

"மாலை குறுந்தகவலாக வந்தது அந்த மகிழ்ச்சித்தகவல்" அடுத்த கட்டத்திற்கு முன்னேறிவிட்டேன் என்று....

இரண்டாம் நாளும் ஒருவழியாக முடிந்தது.

அதன் பின் இரண்டு மற்றும் மூன்றாவது நிறுவனக் கணினி தேர்வையே என்னால் தாண்ட முடியவில்லை, கடைசியில் அந்த முதல் நிறுவனம் மட்டும் ஒரே நம்பிக்கை என இருந்தது. ஒரு வாரம் பிறகு தான் தேர்வு முடிவு என்றார்கள்..........

ஆஆஆம்ம்ம்ம்!!!! இன்று முடிவு !!! மதியம் 2 மணிக்கு, காலையிலேயே கல்லூரி சென்று காத்திருந்தேன், அது என்னமோ தெரியவில்லை என்றும் இல்லாத கடவுள் நம்பிக்கை அன்று மதியம் வரை அடிமனதில் இருந்து பொங்கி எழ்ந்தது......

மதியம் 2 மணியளவில் முடிவுகள் ஒட்டப்பட்ட செய்தி மட்டும் காற்றில் ஒலி அலையாய் தவழ்ந்து வந்தது, நான் உட்கார்ந்த இடம் விட்டு எழவே இல்லை யாராவது வந்து உனக்கு வேலை கிடைத்து விட்டது என்று சொல்ல மாட்டார்களா என ஏங்கிய தருணம், முடிவுபார்த்த நண்பன் ஒருவன் "கங்ராட்ஸ் யூ ஆர் செலக்டட்..........." என்று கை குலுக்கினான். என் கண்கள் கலங்கியது.

அத்தனை தடங்கலும் இதற்காக தானோ என நினைத்தேன்....நடுவில் பாட்ஷா பட வசனம் வேறு நினைவுக்கு வந்தது...........

அதன் பிறகு வகுப்புகளைப் புறக்கணித்து,

 அறைக்குச் செல்ல பேருந்தில் ஏறினேன். கொஞ்சம் வியப்பு கொடுத்து அப்பா அம்மா விடம் சொல்லாம் என நினைத்தேன் ஆனால் அத்தருணமே,

 அப்பாவிடம் இருந்து அழைப்பு கைபேசியில், (முடிவு தெரிய தான் அழைக்கிறார்)

ஹலோ !

சொல்லுங்கப்பா!

எங்க இருக்க?

கல்யாணத்துக்கு பொண்ணு நிங்க பாக்குறிங்களா இல்ல நானே பாக்கட்டுமா ???

என்னடா சொல்லுற !

எனக்கு வேலை கிடைச்சுடுச்சுப்பா ! 

"ரொம்ப சந்தோஷம் வாழ்த்துகள்" என்றார் அப்பா, அன்று அவர் குரலில் சந்தோஷம் கலந்த அழுகை தெரிந்தது.

(நல்ல வேலை அந்த பொண்ண பத்தி பேசினது புரியலன்னு நினக்கிறேன்)

அம்மாவிற்கு நானே அழைத்தேன்,

அதே கல்யாண பொண்ணு கேள்வி ?!

"அடி செருப்பால உனக்கு ரொம்ப திமுருதான்",  என்று சொன்னாங்க......

அம்மா வேலை கிடைச்சுடுச்சும்மா !!!

"அதை சொல்லு முதல்ல இதுக்கு தான் இவ்வளோ நேரம் வேண்டிகிட்டு இருந்தேன்"

பின் பேசி முடித்து கைபேசி இணைப்பை துண்டித்தேன். 

என்னடா ஒரு வேலை கிடைச்சதை இவ்வளவு மிகைப்புடன் சொல்லுறேன்னு படிக்குற எல்லாரும் கேக்குறது புரியுது, கிராமத்திலிருந்து வந்து இளநிலை படிக்க ஆரம்பித்தகாலம், கிராமத்தானா எனக்கு உண்மையா அன்பு செலுத்த மட்டும் தான் தெரிந்தது வருடங்கள் செல்லச் செல்ல தான், நகர மற்றும் கல்லூரி வாழ்க்கையிலும் நட்பிலும் புரிதல் ஏற்ப்பட்டது. அப்ப இதே நேர்முகத் தேர்வில் ஓரு வார்த்தை கூட பேசமுடியாம எழுந்து வந்திருக்கேன். இந்த ஆறு வருடம் என்னுள் பல மாற்றம் நடந்திருக்கு, தன்னம்பிக்கையும் உழைப்பும் இருந்தால் காலம் கண்டிப்பா ஒரு நாள் பதில் சொல்லும்....(கொஞ்சம் அதிகமா இருக்கோ) 

சரி ரொம்ப நேரமா பேருந்திலயே பயணம் செய்தாச்சு நான் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது,கதாபாத்திரதில் இருந்தும் கூட......................................

மீண்டும் ஒரு நல்ல களத்தில் சந்திக்கிறேன்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.