(Reading time: 8 - 16 minutes)

மீனா:தாங்க்ஸ் கீர்த்தி.இனி நானும் முயற்சி பண்றேன் என் வழியில்

எனக் கூறி அவள் இடத்தை அடைந்து அவளுடைய ஆராய்ச்சியை தொடர்ந்தாள்.

அவளின் சக ஊழியர்கள் மேற்கொண்ட முயற்சி பெரிதும் உதவி செய்ய, ஊன் ,உறக்கம், நீர் அனைத்தையும் துறந்து வேலை செய்தாள்.கீர்த்தியும் அவளால் முடிந்தவரை மீனா நேரா நேரத்திர்க்கு உண்பதை பார்த்துக் கொண்டாள்.

தன் முயற்சியில் சற்றும் மன தளராத விக்கிரமாதித்தனாக முயற்சிகளை மேற்கொண்டாள் மீனா.

72 மணி நேர அவளின் கடும் உழைப்புக்கு பலனாக எயட்ஸ்க்கான மருந்தை மீனா கண்டு பிடித்தாள்.

அவளின் நிறுவனமே அவளை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியது.

அவளின் நிறுவன தலைவர் அவளிடம் கேட்டார்.

தலைவர்:மீனா கன்ங்க்ராட்ஸ்.உன்னுடைய முயற்சியால் நமக்கு மிக பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது.உனக்கு என்ன வேண்டும் என சொல்.

மீனா:என் உழைப்பை மக்கள் இலவசமாக பயன்படுத்த வேண்டும்.

தலைவர்:என்ன?மறுபடியும் சொல்.

மீனா:இந்த மருந்து என் கண்டுபிடிப்பு ஏழை மக்களையும் போய் சேர வேண்டும்.அனைவரும் பயன் பெரும் வகையில் இலவசமாக கிடைக்க வேண்டும்.

தலைவர்:நீ என்ன பேசறேன்னு புரிஞ்சு தான் பேசறியா?இதனால் இந்த நிறுவனத்துக்கு எவ்வளவு பொருள் இழப்பு ஏற்படும்னு உனக்கு தெரியுமா?நான் எவ்ளோ இதுக்காக இன்வெஸ்ட் பண்ணிருக்கேன்.அதை எப்படி எடுக்க?

மீனா:....

தலைவர்:என்னால் அப்படி கொடுக்க இயலாது.உலகமே இந்த மருந்தை எதிர் பார்த்து காத்திருக்கிறது.நான் இதை வைத்து பல பில்லியன்கள் சம்பாதிக்க இருக்கிறேன்.

மீனா அவரின் பதிலுக்கு எந்த மறுப்பும் தெரிவிக்காமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து வந்து விடுகிறாள்.

மீனாவைப்போல் தான் நாமும் நம் அறிவை மற்றவர்களிடம் (வெளிநாட்டு நிறுவனங்களிடம்) விற்றுவிட்டு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

சில மாதங்களுக்கு பிறகு

பலரின் கனவு மேடை இந்த பரிசு மேடை.

நிகழ்ச்சி தொகுப்பாளர்: நோபல் பரிசு 2015 விழவிற்க்கு வருகை தந்துள்ள உங்கள் அனைவரையும் வரவேற்பதில் பெருமை அடைகிறோம். இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்றவர்களை ஒவ்வோருத்தாரக பரிசு வாங்க அழைக்கிறோம்.

ஒவ்வொருவரும் பரிசைப் பெற்ற பிறகு அவர்கள் அந்த இலட்சியத்தை அடைய மேற்கொண்ட முயற்சிகளை கூறி மற்றவர்களை இலட்சியத்தை அடைய ஊக்கப்படுத்தி பேசினர்.

நிகழ்ச்சி தொகுப்பாளர்: "last but not least" மருத்துவத்திற்க்கான பரிசை பெறுவது செல்வி.மீனா அவர்கள். அவர்களை மேடைக்கு அழைக்கிறேன்.இச்சிறு வயதில் நோபல் பரிசை வாங்கும் முதல் நபர் என்ற பெருமை மீனாவையே சேரும்.இதற்க்குமுன் 1915-ஆம் ஆண்டில் சர் வில்லியம் லாரென்ஸ் பராக் என்பவர் 25 வயதில் வாங்கி உள்ளார்.ஆனால் 21 வயதில் இதை வாங்கி முந்தைய உலக சாதனயைை மீனா முறியடைத்துள்ளார்.

பரிசைப் பெற்று கொண்ட மீனாவை பேச நிகழ்ச்சி தொகுப்பாளர் அழைத்தார்.

மீனா:அவையோருக்கு வணக்கம். இந்த பரிசு பலரின் இலட்சியம்.எனக்கும் கூட.அது இன்று இப்பொழுது நிறைவேறி விட்டது.ஆனால் என்னுடைய இந்த வெற்றிக்கு முதல் முக்கிய காரணம் என் தோழி கீர்த்தி.என் பிறந்தநாளை மட்டுமில்லாமல் இந்த பரிசுக்கான பெருமையையும் அவளுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அடுத்து என் வாழ்க்கையை  பாதித்த சில சம்பவங்கள் தான் என்னுடைய இந்த கண்டுபிடிப்புக்கு காரணம். அதை இங்கு பகிர எனக்கு  விருப்பமில்லை.என்னுடைய இந்த பரிசுத் தொகையை எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோருக்கான நல உதவி சங்கத்திற்க்கு நன்கொடையாக அளிக்கிறேன்.

அவளின் அறிவிப்பை கேட்டு அரங்கமே எழுந்து நின்று கை தட்டியது.

பின்குறிப்பு: இன்று என் தோழி மீனாவிற்கு பிறந்தநாள்.அவர்களுக்கு இந்த கதையை சமர்ப்பிக்க விரும்புகிறேன்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Recent Updates

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.