(Reading time: 10 - 20 minutes)

ங்களுக்கு கடமைகள் ஜாஸ்தியா இருக்குன்னா , அதற்கு காரணம் உங்க மேல இருக்குற நம்பிக்கை ஒண்ணுதான் காரணம் !

அப்போ அந்த நம்பிக்கை வைக்கிறவங்களை  ஏன் நீங்க திட்டனும் ?

உங்களுக்கு டென்ஷன் தர்ரவங்களை நேசிச்சு பாருங்களேன்

உங்களுக்கு பிடிக்காத செயலை காதலித்து பாருங்கள் !

உங்களுக்கு கோபம் மூட்டுற விஷயத்தை ரசிக்க கற்றுக்கொள்ளுங்கள்

என்றைக்கு, நம்மகிட்ட இருக்கிறதை நாம ரசிக்கிறோமோ , அன்னைக்கே நம்ம உலகம் அழகாய் மாறிடும் .. !

இப்படிக்கு,

உங்கள் நண்பன் !

அதே கடிதம் தான் மற்ற புத்தகங்களிலும் இருந்தது .. அவள் முகத்தில் புன்னகையின் சாயல் .. யாரிவன் ? என்ற கேள்வியுடன் அவன் பின்னே சென்றாள்  விஷ்வரூபினி..

" ஹே விஷ்வா " என்று யாரோ அழைக்க நிமிர்ந்து பார்த்தாள்  அவள் .. யாரிவன் ? தன்னை நோக்கி சிரிக்கிறான் ? அதுவும் "விஷ்வா " என்று யாருமே தன்னை அழைத்ததில்லை .. ! என்று அவள் யோசிக்கும்போது அந்த புதியவன் , தான் பின்தொடர்ந்து வந்த இவனை கட்டிகொண்டான் ..

" இவன் பெயர்தான் விஷ்வாவா ?"

இருவரும் பேசி முடிக்கும்வரை அங்கேயே நின்று கொண்டிருந்தாள் ரூபினி .. அந்த புதியவனை அனுப்பி வைத்துவிட்டு கண்களில் மின்னலுடன் ரூபினியை நோக்கி வந்தான் அவன் ..

" மணி 8 ஆக போகுது டா , வீட்டுக்கு போக வேணாமா ? உன் பெரியம்மா தேடுவாங்களே ! " என்றான் அவன் புன்னகையுடன் . வேலையின் காரணமாய் தனது  தாயை பிரிந்து பெரியம்மாவின் வீட்டில் இருக்கிறாள் ரூபினி .. இதெல்லாம் இவனுக்கு எப்படி தெரியும் .. ? அதை வாய்விட்டே கேட்டாள் ..

" உ .... உங்களுக்கு எப்படி தெரியும் ?"

" எனக்கு தெரியும் .. என்னை சுற்றி என்ன நடக்குதுன்னு நான் எப்பவும் கவனிச்சுகிட்டே இருப்பேன் .. எனிவே , ஐ எம் விஷ்வா " என்று வாசீகரமாய் புன்னகைத்து கை நீட்டினான் விஷ்வா ..

" நான் விஷ்வரூபினி " என்று கை குலுக்கியவளின்  முகத்தில் ஆச்சர்ய ரேகைகள் .

" நல்ல இருக்கு ரூபி !"

" என்ன ? "

" நீ இப்படி டென்ஷன் இல்லாமல் இருக்கும்போது நீ பார்க்க , இன்னும் அழகாய் இருக்கிறாய் "

" ஓ  தேங்க்ஸ்  " என்றவள் இன்னமும் அமைதியாய் அவனை பார்த்தாள் .. அவளுக்குள் நிறைய கேள்விகள் இருந்தாலும் கேட்காமல் அமைதியாய் இருந்தாள்  அவள் .

" எனக்கு உன்னை எப்படி தெரியும்னு தெரிஞ்சுக்கணும் .. அவ்வளவுதானே ?" என்று தானே அவளது சந்தேகத்தை தீர்க்க முன்வந்தான் ..

" ம்ம்ம் ஆமா ! "

" உன் ஆபிஸ் எதிரில் இருக்கிற சாய்ராம் என்டர்ப்ரைஸ்  தான் என்னுடைய நிறுவனம் .. உன்னை நான் தினமும் பார்த்திருக்கேன் .. ஆனா நீ என்னை பார்த்ததே இல்லை! "

" இந்த லெட்டரை நான் லைப்ரரில பார்த்தேன் "

" ஒ, இது என்னுடைய ஹாபி ! சந்தோஷத்தை அளிக்கிற வார்த்தைகளை  நான் பூக்ஸ்ல வைக்கிறது வழக்கம் .. அதை படிக்கிறவங்க எப்படி பட்ட மனநிலையில் இருந்தாலும் கொஞ்சமாவது சந்தோஷமா பீல் பண்ணுவாங்க , இப்போ உன்னை மாதிரி " என்றான் விஷ்வா ..

" வித்தியாசமான பொழுது போக்கு விஷ்வா "

" ம்ம்ம்ம் , வாழ்க்கையில் பொழுது போக்கு ரொம்ப அவசியம் ருபீ! அதுவும் இப்போது இருக்கிற இயந்திர தனமான வாழ்கையில் நமக்கு என்ன பிடிக்குமோ , அதை நாமே தேடி செய்வது மிகவும் அவசியம். நமக்கு பிடிச்ச விஷயங்கள் செய்றதுக்கு எப்பவும் தயங்கவே கூடாது ! அதே நேரம் நமக்கு பிடிக்காமல் இருக்குற விஷயங்களையும் வெருக்கனும்னு  அவசியம் இல்லை .. எல்லாத்தையும் ரசிக்க தொடங்கிட்டா , உன் பிரச்சனைகளின் அளவும் குறைஞ்சிடும் "

நேரம் போவதே தெரியாமல் அவனுடன் உரையாடினாள்  ரூபினி ! வாழ்க்கையை பற்றிய அவனது பார்வை வித்தியாசமாகவே தெரிந்தது அவளுக்கு ..அடுத்து வந்த நாட்கள் அவளுக்கு மகிழ்ச்சியாகவே சென்றது ..

அதே அலுவலகம் , அதே வேலை , அதே அலுவல்கள் எனினும் முகத்திலும் மனதிலும் நிரப்பி வைத்த சந்தோசம் அவளது வாழ்வை மாற்றியது ..

விஷ்வா சொன்னது போலவே , தன்னுடைய பொழுதுபோக்கிற்கு முக்கியத்துவம் தந்தாள் விஷ்வரூபினி. தனக்கு பிடித்த சங்கீத வகுப்பில் சேர்ந்தாள், நிறைய புத்தகங்களை படித்தாள், கிடைக்கும் நேரங்களில் அருகில் உள்ள பூங்காவில்  சிறுவர்களுடன் விளையாடினாள் . வேலை வேலை என்று உலகத்தை சுருக்கி கொள்ளாமல் அலட்சியமாகவும் இல்லாமல்  தனது உலகத்தை சரிசமமாய் பங்கிட்டு கொண்டாள்..  சரியாய் இரண்டு மாதங்களுக்கு பின்பு,

" ஹாய் விஷ்வா !"

" ஹாய்  ருபீ .. எப்படி இருக்க ?"

" உங்களுக்கு தெரியாததா ? அதான் தினமும் பார்த்துட்டு இருக்கிங்களே " என்று சிரித்தாள் அவள் ..

" உனக்கொரு சர்ப்ரைஸ் "

" என்ன விஷ்வா ?"

" உனக்கு  ஒரு ஸ்கூலில் வேலை கிடைச்சிருக்கு "

" எப்படி இது ?"

" யாமிருக்க பயமேன் ரூபி !"

" எனக்கிந்த வேலை வேணாமே விஷ்வா "

" ஏன் ?"

" எனக்கு இப்போ செய்யுற வேலையே பிடிச்சிருக்கு "

" நீதானே டென்ஷன் அதிகம்னு சொன்ன ?"

" எந்த வேலையில்  டென்ஷன் இல்லை ? எல்லாம் நம்ம பார்வையில்தான் இருக்குன்னு எனக்கு உணர்த்தியவரே  நீங்க தானே ? எந்த தொழிலையும் ரசிச்சு செய்தால் பிரச்சனையே இல்லைன்னு புரிஞ்சுகிட்டேன் .. "

" சூப்பர் .... உன்கிட்ட இருந்து இந்த வார்த்தையை கேட்க ரொம்ப சந்தோசம் ரூபி ! "

" எனக்குமே என் மாற்றம் சந்தோசம் தான் .. உங்களுக்கு தெரியுமா, நான் இந்த வேலையில்  இருந்து தப்பிக்கணும்னு கல்யாணம் பண்ணிட்டு வீட்டில் இருக்கலாம்னு கூட நினைச்சிருக்கேன் ..ஆனா இப்போ எல்லாம் மாறிடுச்சு .. எல்லாமே நம்ம பார்வையில் தான் இருக்குன்னு புரிஞ்சுகிட்டேன் "

" தேவுடா , அப்போ கல்யாணம் "

" ம்ம்ம்ம் பண்ணிதான் ஆகணுமா ?" என்று குறும்புடன் அவனை பார்த்தாள்  ரூபி !

" சேகர் செத்துடுவான் " என்று வடிவேலு போல சொல்லியவனை பார்த்து கலகலவென சிரித்தாள் ரூபினி .. இத்தனை நாட்களின் பழக்கத்தில் அவள் மனம் அவன் பக்கம் சாய்ந்து விட்டதை உணர்ந்துதான் இருந்தாள்  ரூபினி .. அதை உடனே தன் தாயிடம் பகிர்ந்துகொண்டவள், அடுத்த சில தினங்களில் விஷ்வா தனது காதலை சொல்லவும் மனதார ஏற்று கொண்டாள் ..

அதே ஆபீஸ், அதே கனவு இன்று நிஜத்தில் ! விஷ்வாவின் கரங்களை பிடித்து கொண்டு பாஸின்  அறைக்குள் சென்றவள் அந்த கடிதத்தை நீட்டினாள் ! ராஜினாமா கடிதம் அல்ல, திருமண அழைப்பிதழ் !

இப்போது அவள் திருமதி விஷ்வரூபினி விஷ்வாவாக, அதே அலுவலகத்தில் பணிபுரிகிறாள் !

நம்ம எல்லாருக்குமே பிடிச்ச வேலை கிடைக்கிறது இல்லை . ! வேலைப்பளு  அதிகமாய் இருப்பதற்கு  இந்த வெறுமையும் ஒரு காரணம் என்பதை உணர்கிறேன் . எனவே இனியாவது , பிடிக்காததையும்  ரசிக்க கற்றுக்கொள்வோமே ! இதே சூழ்நிலையோடு பணிபுரிந்து கொண்டிருக்கும் நண்பர்களுக்கு இந்த கதை சமர்ப்பணம் . நன்றி .

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.