(Reading time: 8 - 16 minutes)

ல்லவற்றையும் பார்த்துக்கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்த விசாலம் மாமிக்கு வார்த்தைகளை அமிலமாகவும் தீயாகவும் கக்கும் கணவரின் மீது கொதிக்கும் பாலை அப்படியே ஊற்ற வேண்டும் போல் இருந்தது.

துவண்டு போய் எழுந்த சேதுராமன் தள்ளாடிய படியே நடந்து வெளியே சென்றார்.

வந்துட்டான்.....இவென்லாம் பூணப்போடலன்னு யார் அழுதா..விசாலம் காபி கொண்டா..பேசிப் பேசி

வாய வலிக்கறது..

மிகுந்த எரிச்சலோடு காபியைக்கொண்டுவந்து நக்கென்று வைத்தார் மாமி.பொங்கும் அவர் மனம் 

போலவே டம்ளரிலிருந்து காபி தளும்பி டபராவில் கொட்டியது.

காபியை நுரைக்க நுரைக்க ஆற்றி ஆற்றி குடித்தார் சாஸ்த்ரிகள்.இன்னும் கொஞ்சம் மீதம் இருக்கை

யில் செல்போன் ஓசை எழுப்பி அழைத்தது.

விசாலம் என்னடி புள்ளையாண்டனோட மியூசிக் மாறியிருக்கு....இப்ப என்ன ..நேரங்க்கெட்ட

நேரத்துல அமெரிக்காலேந்து பண்ரான்?கொஞ்சம் செல்ல எடு.

ஒங்க செல்லுக்குதானே பண்ரான்..நீங்களே எடுத்து பேசுங்கோ...

செல்லைக் கையிலெடுத்து ஸ்பீக்கரை ஆன் செய்து விட்டு...ஹலோ..சந்தோஷ்..என்னப்பா இப்ப

போன் பண்ர..கேட்டார் சாஸ்த்ரிகள்..

ஐயோ.. என்னடா சொல்ர நெஞ்சில நெருப்பவாரி கொட்டிட்டியேடா..நான் என்னடா செய்வேன்..

எல்லார் மூஞ்சிலயும் எப்பிடிடா முழிப்பேன்..அடப்பாவி..இப்பிடி பண்ணிட்டயேடா..நம்ம ஜாதில

பொண்ணடா கெடைக்காது...இப்பிடி அமெரிக்காக்காரிய கல்யாணம் பண்ணிண்டுட்டேன்னு சொல்றியேடா பாவி...கொஞ்சமாவது எங்கள நெனெச்சுப் பாத்தியாடா.ஐயோ..விசாலம் கேட்டியாடி..

நம்ம சீமந்த புத்ரன் செஞ்சிருக்கிர அசிங்கத்த அப்பிடின்னு சொல்லிண்டே சுவற்றில் சரிந்து அமர்ந்துகொண்டு அழுதார் பஞ்சாபகேச சாஸ்திரிகள்.

எல்லவற்றையும் கேட்டபடி நின்றுகொண்டிருந்த விசாலம் மாமிக்கு நெஞ்சை அடைத்தது.

ஐயோ என்று கத்தியபடி சாமிஅறைக்குள் ஒடி கீழெவிழுந்து அழுதார்.பார்த்துப் பார்த்து வளர்த்த பிள்ளை..குடும்பத்து நல்லது கெட்டது அனைத்தையும் பஞ்சக்கச்ச வேட்டியோடும் பக்கத்தில் மடிசார் புடவை கட்டி மனைவி நிற்க செய்து முடிக்க வேண்டியவன்..இந்து மத தர்மத்திற்கும் சாஸ்த்திர சம்ப்ரதாயங்களுக்கும் துளியும் சம்பந்தமில்லாத ஒரு பெண்ணை பெற்றவர்களின் சம்மதமின்றி அவர்களின் ஆசிகளுமின்றி தாந்தோன்றித் தனமாய் திருமணம் செய்து கொண்டு பெற்றவர்களை தலைகுனிய வைத்து.... நினைக்க நினைக்க நெஞ்சே பிளந்து விடும் போலிருந்தது விசாலம் மாமிக்கு.மெல்லத் திரும்பிப் பார்த்தபோது கணவர் உடம்பை சுருட்டிக்கொண்டு படுத்திருப்பதும் உடம்பு குலுங்குவதும் தெரிந்தது.

சட்டென அழுகை நின்றது மாமிக்கு.வேணும் வேணும் இவருக்கு..எல்லாரையும் எப்பிடிஎடுத்

தெரிந்து பேசியிருப்பார்.தெரிஞ்சவங்க, உறவுக்காரங்க வீட்டுல இதுபோல நிகழ்வுகள் நடந்தால்

அவங்கள எப்பிடில்லாம் கேவலமா விமர்சனம் பண்ணுவார்.இதோ இப்பகூட வந்துட்டுப் போனாரே

அவரோட பொண்ணு வேத்து ஜாதிப் பையன கல்யாணம் பண்ணிண்டதா சொன்னப்ப எப்பிடி 

கேவலமா பேசினார்.எம் பொண்ணா யிருந்து இப்பிடி ஒரு காரியத்த பண்ணிருந்தா அவள வெட்டிப்

போட்டுட்டு ஜெயிலுக்குப் போயிருப்பேன்னு சொன்னாறே இப்ப புள்ளைய வெட்டிப்போட வேண்டிது

தானே..எற்கனவே ரணப்பட்டு நொந்து துவண்டு போயிருக்கும் அந்தமாதிரி பாதிக்கப் பட்டவங்கள

நாக்குலநரம்பில்லாம பேசும், பேசிய இவருக்கு இந்த அவமானம் நன்னா வேணும்.தலைவலியும்

காய்ச்சலும் தனக்கு வந்தால்தான தெரியும்.கொதித்தது மாமியின் மனது.தனக்கும் இது பெரிய

பாதிப்பு என்று தெரிந்தும் கணவருக்கு கிடைத்த இந்த அடி மாமிக்குக் கொஞ்சம் குரூர திருப்தியைக் கொடுத்தது என்றே சொல்லவேண்டும்.

பூமராங்  எனும் ஆயுதம் எதிரியைத் தாக்கிவிட்டு எய்தவனிடமே திரும்பவரும்..பூமராங் மட்டுமல்ல

 பிறரை என்ன காரணம் கொண்டு  அவமானப்படுத்துகிறோமோ அந்த அவமானம் அவமானப்

படுத்தியவரைத் தேடி வரும்..இது கலியுகம்..முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும்

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.