(Reading time: 8 - 15 minutes)

லமாரியினுள் அவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள். அவர்கள் கல்லூரி சுற்றுலாவின் போது எடுத்துக்கொண்டது, அவள் பிறந்தநாளை அவர்கள் இருவரும்  அமட்டுமே கொண்டாடிய போது எடுத்துக்கொண்டது என ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிகழ்வை நினைவுப்படுதிக்கொண்டிருந்தன அவனுக்கு.

ஆற்றங்கரை ஒரத்திலே யாருமற்ற நேரத்திலே விற்றிருந்த..

மணல் பரப்பு வேதனையை தூண்டுதடி

பூத்திருந்த மலர் எடுத்து பூங்குழலில் சூடி வைத்து

பார்த்திருந்த கோலம் எல்லாம் பழங்கதையானதடி

அந்த பாடலின் வரிகள் எங்கிருந்தோ கேட்டது அவனுக்கு. அழத்துவங்கினான் அவன். அழுகிறான் என்று புரிந்தது  அவளுக்கு. அய்யோ அழுகிறானே என்னவன்!!!

சில நிமிடங்கள் கழித்து அந்த அறையை விட்டு வெளியேறினான் அவன். கட்டிலுக்கு அடியில் இருந்து வெளியே வந்தாள் அவள்.

தனது வீட்டு தோட்டத்துக்கு வந்தான் அவன், அப்போதுதான் கண்ணில் பட்டது அந்த ரோஜா செடி. இதோ! மொட்டு விடாத இந்த ரோஜா செடி மொட்டு விட்டிருக்கிறதே! என்ன சொல்கிறதாம் அது? நாங்கள் இணைந்து விடுவோம் என்று சொல்கிறதா?

வந்து விடுவாளா அவள். என்னிடம் வந்து விடுவாளா? அவள் அறையில் அவள் வாசத்தை உணர்ந்தேனே!  இங்கேதான் இருக்கிறாளா அவள்???

மறுபடியும் அவள் வீட்டுக்குள் சென்று பார்க்கலாமா??? வீட்டுக்குள் சென்று  பார்த்து அங்கே அவள் இல்லை என்று உறுதியானால் என்னால் தாங்கிக்கொள்ள முடியுமா??? முடியாது! முடியவே முடியாது!  வேண்டாம்.!

ஆனால் எனக்கு தோன்றுகிறதே! அவள் இருக்கிறாள் என்று தோன்றுகிறதே ஏன் அப்படி?

துவண்டு போனவனாக ஏரிக்கரையை அடைந்தான் அவன். எத்தனை நாட்கள், எத்தனை நாட்கள் இதே ஏரிக்கரையில் விளையாடி இருக்கிறோம். இதோ இந்த ஏரிதானே. இந்த ஏரிதானே என்னவளை விழுங்கியது!!! அந்த ஏரியையே பார்த்திருந்தான் அவன். அதன் கரையிலேயே துவண்டு விழுந்தான்.

கொஞ்ச நேரத்தில் சூரியன் மறைய இருள் சூழ துவங்கியது. எத்தனை நேரம் அப்படியே கிடந்தானோ,  எங்கிருந்தோ அவளது வாசம் அவனை அடைய திடுக்கென எழுந்தான் அவன்.

இல்லை! அவள் என்னை விட்டு போகவில்லை. இதோ இருக்கிறாள்! இதோ என்னை தேடி வருகிறாள் அவள். அவனுக்குள்ளே ஏதோ ஒன்று கூக்குரலிட்டது.

'ர....ஞ்ச...னி' உரக்க கூவினான் அவன். ர'ஞ்சனி... நீ இங்கே தான் இருக்கே எனக்கு தெரியும். ப்ளீஸ் வந்திடு. என்கிட்டே வந்திடு....'

'சிவா....' அவள் குரல் அவனை அடைந்தது. 'சிவா... இதோ வந்திட்டேன் சிவா. வந்தாள் அவன் அருகில்.

'ரஞ்சனி... வந்துட்டியா... என்கிட்டே வந்துட்டியா .....' மகிழ்ச்சியின் உச்சத்தில்  அவளை நோக்கி கை நீட்டினான் சிவா.

சிவா.... புகைவடிவமான அவன் கைகளில் தஞ்சம் அடைந்தாள், அதே உருவத்தில் இருந்த ரஞ்சனி.

.பத்து  நாட்களுக்கு முன்னால், அவர்கள் இரண்டு குடும்பங்களும் திருமணதிற்கு சம்மதித்து விட்ட சந்தோஷத்தை கொண்டாட இந்த ஏரிக்கரைக்கு வந்தனர் சிவாவும், ரஞ்சனியும்.

மகிழ்ச்சியின் எல்லையில் படகு சவாரி. ஆட்டமும். பாட்டுமாக இருவரும். கவிழ்ந்தது படகு. மூழ்கினர் இருவரும். அந்த நிலையிலும் கைகோர்த்தபடியே.

அதன் பிறகு திடீரென்று எங்கோ பிரிந்து போனாள் ரஞ்சனி. அவனால் அவளை பார்க்க முடியவில்லை. இதோ வந்துவிட்டாள் மறுபடியும் தன்னவனின் அருகிலேயே வந்துவிட்டாள் அவள்.

'நீ இல்லாம தவிச்சிட்டேன் ரஞ்சனி.' அவளிடம் சொன்னான் அவன். இனிமே என்னை விட்டு எங்கேயும் போக மாட்டே தானே??

'போக மாட்டேன் சிவா. மரணம் கூட நம்ம பிரிக்க முடியாது சிவா. உன் கூடவே தான் இருப்பேன். உன் கையிலே தான் இருப்பேன்.'  என்றாள் ரஞ்சனி.

இருவரும் ஒருவருக்குள் ஒருவர் உருகி, கரைந்து, கலந்து மகிழ்ந்துக்கொண்டிருந்தனர்!!!!!

Manathai Thotta ragangal - 06 - Vaana mazhai pole

{kunena_discuss:748}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.