(Reading time: 12 - 24 minutes)

ஹே..ராமா....நான் பாட்டுக்குத் தெருவோடு பொய்க்கொண்டிருந்தேன்..யாருக்கும் ஒரு தீங்கும் செய்யவில்லை..இதோ நிற்கிராரே இவருக்கும் நான் ஒரு தீங்கும் செய்யவில்லை..இவரைப் பார்த்து குரைக்கவில்லை,இவரைக் கடிக்கவில்லை,இவரைத் துரத்தவும் இல்லை..அப்படியிருக்க இவரென்னைக் கடுமையாகத் தாக்கி அடித்தார்.நான் வலியால் கத்தினேன்,அழுதேன்,துடித்தேன்

அப்படியும் ஈவு இரக்கமின்றி ஒரு காரணமுமின்றி என்னை நையப் புடைத்துவிட்டார்.இவர் ஏன் என்னை இப்படி அடிக்க வேண்டும்?.ஸ்ரீ ராமா என்னால் அடியால் ஏற்பட்ட வலியையும் துன்பத்தையும் தாங்க முடியவில்லை.என் உடல் எந்த அளவு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை

எனைப் பார்க்கும் உம்மால் அறிந்துகொள்ள முடியும்.என்னால் பேசக் கூட முடியவில்லை.உயிர் வாதையாய் இருக்கிறது.என்னை இந்த நிலைக்கு ஆட்படுத்தியவருக்கு நீரே தக்க தண்டணை அளிக்கவேண்டும்..ஸ்ரீராமா என்றது நாய்.

அடடா..அடடா..ஐயோ பாவம்..ஐயோ பாவம்..என்று நாயைப் பார்த்து பரிதாப பட்டான் லட்சுமணன்.

அவன் கை இடுப்பில் இருக்கும் வாளிடம் சென்றது.ஒரே போடாய் துறவியைப் போட்டுத் தள்ள வேண்டும் எனத் தோன்றியது.

லட்சுமணனைப் பார்த்து சிரித்தார் ராமர்.அண்ணன் தன்னைப்பார்த்து சிரிக்க என்ன காரணம் லட்சுமண்ணுக்குப் புரியவில்லை.

சகல மரியாதைக்கும் உரிய துறவியாரே ..நாயின் குற்றச் சாட்டுக்கு உங்கள் பதில் என்ன? சொல்வீர்..என்று துறவியை வினவினார் ராமர்.

ரகு நந்தா..சீதா ராமா...என் மீது.நாய் சொன்ன குற்றச் சாற்றுக்கள் அனைத்தயும் ஒப்புக்கொள்கிறேன். என் பசியால் ஏற்பட்ட கோபத்தால் எக் குற்றமும் செய்யாத இந்த நாயை நான் அடித்தேன்.என் தவற்றை நான் ஒப்புக்கொள்கிறேன்.எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏற்றுக் கொள்கிறேன் ராமா..என்றார் துறவி.

சட்டென வாளை உருவிக்கொண்டு துறவி மீது பாயப் போனான் லட்சுமணன்.

லட்சுமணா..நில்..இப்படி ஆத்திரப் பட்டு சூர்ப்பனகையின் மூக்கை அறுத்ததால் தானே அதன் விளைவாய் அனர்த்தங்கள் விளைந்தன.கொஞ்சம் அமைதியாய் இரு.என்றார் ராமர்.

சட்டென அடங்கி அமைதியானான் லட்சுமணன்.

நாயே..இவரே தன் தவற்றை ஒப்புக்கொண்டார்..இவருக்குத் தண்டனை அளிக்க வேண்டியது மிக அவசியம்..ஆனால்..

ஸ்ரீ ராமா..ஸ்ரீ ராமச்சந்திரா,சக்ரவர்த்தியே..ஏன் ஆனால் என்று சொல்கிறீர்கள்?இவருக்கு தண்டனை அளிக்கப் போவதில்லையா?அவசரமாகக் கேட்டது நாய்.

லட்சுமணனும் அண்ணன் ராமனை கலக்கமாய்ப் பார்த்தான்.

அப்படியில்லை நாயே..இவரால் அடிக்கப்பட்டு இவ்வளவு துன்பத்தை அனுபவிக்கும் நீயே இவருக்கான தண்டணையை தீர்ப்பாகக் கொடுப்பதுதான் சாலச் சிறந்தது.நான் இவருக்கான தீர்ப்பை சொல்வதைவிட நீயே சொல்வதையே நான் நல்லதென நினைக்கிறேன்.நான் சொல்வது சரிதானே? லட்சுமணா என்று கேட்டார் லட்சுமணனைப் பார்த்து.

ஆஹா..ஆஹா..என்றனர் அவையில் இருந்தோர்.லட்சுமணனும் கூட.

நாய்க்கு பெரும் மகிழ்ச்சி.

நாயே நீயே யோசித்துச் சொல் இவருக்கான தண்டனையை..ராமர் நாயிடம் சொல்ல.. நாய் சிறிது நேரம் யோசித்தது.அங்கிருந்த அனைவரும் நாய் என்ன தீர்ப்பு சொல்லப் போகிறதோ என அதன் முகத்தையே பார்த்தவாறு இருந்தனர்.

ஸ்ரீ ராமா..கோசலை ராமா..ஜானகி ராமா..ஆரம்பித்தது நாய்..

சரி சரி போது தீர்ப்பைச் சொல்லுவாய்..

ஸ்ரீராமா..இதோ நிற்கிறாரே இவரை..இந்தத் துறவியை மிக மிக மிகப் பெரிய செல்வந்தராக்கி விடுங்கள்.இவர் மா பெரும் செலவச் சீமானாய் ஆகிவிட வேண்டும்.குபேரசம்பத்துக்கு ஈடான செல்வம் படைத்தவராக இவர் மாறி விடவேண்டும்..இதுவே இவருக்கு நான் தரும் தண்டனை. என்றது நாய்.

ஆஹா..ஆஹா...எப்பேர்ப்பட்ட நாய் எப்பேர்ப்பட்ட குணம்...எவ்வளவு உன்னதமான எண்ணம்.. இதுபோல் உலகில் யார் உண்டு?தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் நன்மையே செய்யும் குணம் வேறு எவர்க்கு வரும்?..அற்புதம் அற்புதம்..கைகளைத்தட்டி கத்தியபடி ஆரவாரம் செய்தான் லட்சுமணன்.அவையோரும் அவனை ஆமோதித்தனர்.

கடகடவென லட்சுமணனைப் பார்த்து சிரித்தார் ராமர்.

ட்சுமணனுக்கு ஒன்றும் புரியவில்லை.அண்ணா ஏன் சிரிக்கிறார்?குழம்பிப் போனான்.

அதை கேட்டேவிட்டான் ராமரிடம்.ஏன் அண்ணா சிரிக்கிறீர்கள்?இந்த ..நாய்க்கு இருக்கும் குணம் போல் நல்ல குணம் வேறு யாருக்கண்ணா வரும்?

லட்சுமணா... நீ இந்த நாயைப் பற்றி அறியாமல் பேசுகிறாய்...இது உருவத்தில் நாய்..புத்தியில் நரி. மிகவும் தந்திரமானது.எண்ணத்தில் மிக மோசமானது...இது இத் துறவியை உண்மையில் நல்ல எண்ணத்தோடு பணக்காரனாக்க நினைக்கவில்லை....

என்ன அண்ணா சொல்கிறீர்கள்.?.

ஆம் லட்சுமணா... இந்த நாய் முன் பிறவியில் மனிதனாகப் பிறந்து குபேரனுக்கு ஈடான மிகப் பெரும்செல்வம் படைத்தவனாக இருந்தான்.அனால் பணம் படைத்தவனின் கடமைகள் ஒன்றைக்கூடச் செய்யாதவன்.தர்மம் செய்வது,கோயில் திருப்பணி செய்வது,குளம் வெட்டுவது,பாடசாலைகள் நிறுவுவது,பிறருக்கு உதவுவது,ஏழைகளிடம் கருணை காட்டுவது என்ற எந்த நல்ல பண்புகளும் இல்லாமல் பிடிக்காதவரைக் கொலை செய்வது,பிறர் பொருளைக் கவர்ந்து கொள்வது, சூதாடுவது,பெண்களுக்குத் தொல்லை தருவது,பிறரை ஏமாற்றுவது,ஏழைகளக் கண்டால் எள்ளி நகையாடுவது,பரதையர் வீடுகளில் பழியாய்க் கிடப்பது,மனைவிக்கு துரோகம் செய்வது,குரு நிந்தை செய்வது என்று கூடாத அனைத்துக் கெட்ட குணங்களோடும் வாழ்திருந்தான். அதிலும் கொடுமையிலும் கொடுமையாய் தனக்கு புத்தி சொன்ன பெற்ற தாயை அடித்தும், காலால் எட்டி உதைத்துமான மிகப் பெரிய மன்னிப்பே இல்லாத பாவத்தைச் செய்துள்ளான். இவன் மனிதனாய் இருந்த போது செய்த பாவங்களினால் இப்பிறவியில் நாயாய் பிறந்துள்ளான். நாயாய்ப் பிறந்ததால் அலைந்து திரிந்தும்,கழிவுகளைத் தின்றும்,மனிதர்களால் விரட்டப் பட்டும் கல்லடி பட்டும்,நாய் படும் பாடு என்று சொல்வார்களே அத்தனை பாடும் பட்டு இப்போதும் உடல் முழுதும் அடி பட்டு நம் முன் நாயாய் நிற்கிறான்.

சரியண்ணா..ஆனால் இது அந்தத் துறவியை ஏன் பெரும் செல்வந்தனாக்க விரும்புகிறது?

லட்சுமணா..உனக்கு இதன் கெட்ட எண்ணம் புரியவில்லையா?இந்தத் துறவி பெரும் தனவானாக ஆகிவிட்டால் அவரும் தான் பணக்காரனாக இருந்தபோது எந்த அளவுக்குத் தீய பழக்க வழக்கங்களோடு வாழ்ந்தோமோ அதேபோல் வாழ்வார் அதன் பயனாக அவரும் மறு பிறப்பில் தன்போலவே நாயாய்ப் பிறந்து தன்போலவே படாத பாடு படுவார் நாய் படும் பாட்டைப்போன்ற தண்டனை வேறு ஏதும் கிடையாது..அதுவே அவருக்குத் தான் அளிக்கும் கடும் தண்டனை என எண்ணியே அவரைப் பணக்காரனாக்க நினைக்கிறது என்று கூறினார்.

இப்போது நாயின் தந்திரம் லட்சுமணனுக்குப் புரிந்துபோயிற்று.

நாயே உனக்கு தீங்கு செய்த இவருக்கு நீ கொடுத்த தீர்ப்பு சரிதான் என்றாலும் நீ முன் ஜென்மத்தில் உன் தாயை அடித்ததாலும் காலால் உதைத்ததாலும் இந்தப் பிறவியில் இவரால் கடுமையாக அடிக்கப்பட்டாய்.அப்படி அடிக்கப் பட வேண்டும் என்பது உனது விதி.உன்னை அடிக்க வேண்டுமென்பது இவருக்கு விதிக்கப்பட்ட விதி.உனக்கு இன்று என்னால் மோட்சம் கொடுக்கப்பட வேண்டும்.இதோ உனக்கு மோட்சம் கொடுக்கிறேன் என்றபடி நாயின் முதுகில் தன் வலக் கையை  வைத்தார் ராமர்.

நாய் ஸ்ரீ ராமனை வணங்கியபடியே மோட்சம் சென்றது.

துறவியே நீர் நாயை அடித்த குற்றத்திற்காக தண்டனை அனுபவித்துதான் ஆகவேண்டும்.நீங்கள் தினந்தோறும் பதினோறு கசையடி படவேண்டும்.அடிபட்ட புண் உடனடியாக ஆறிவிட வேண்டும். மீண்டும் மறு நாள் கசையடி..புண் ஆறிப் போதல்..இது போல பதினெட்டு நாட்கள் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.இதுவே நாயின் சார்பாக நான் உங்களுக்கு அளிக்கும் தண்டனையின் தீர்ப்பு.

சக்ரவர்த்தி ஸ்ரீராமா..தவறு செய்த நான் தண்டனை அனுபவிக்கத்தான் வேண்டும்..உங்கள் தீர்ப்பை மனதார ஏற்கிறேன் என்று ராமரை வணங்கினார் துறவி. 

சில்சீயில் வெளிவரும் விலை மதிப்பில்லா வெண்னிற வைரக் கற்கள் போன்ற கதைகளுக்கு

 மத்தியில்  சிகப்புக் கல்லாய்  இக் கதை இருக்கட்டுமே என நினைத்து இதனையும் ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதியிருக்கிறேன்...பிடித்தால் நினைவில் வையுங்கள்..இல்லையெனில் மறந்து விடுங்கள்) நன்றி......

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.