(Reading time: 5 - 9 minutes)

அந்த நாள்.. ஞாபகம்..  - ஷரோன்

" ம்மா ... நான் சொல்றத கொஞ்சம் கேளுங்களேன். எனக்கு இப்போ கல்யாணம் எல்லாம் வேணாம். இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே. என் செல்ல அம்மால..." என்று skype- இல் தன் தாய் பவித்ராவிடம் மன்றாடிக் கொண்டிருந்தான் ஜீவா. அவன் அமெரிக்காவில் பணி புரியும் ஒரு Software Engineer.

அவரோ பிடிவாதமான முகத்துடன் எங்கோ பார்வையைச் செலுத்தியபடி,

" இரண்டு வருஷமா நீ  சொன்னத நான் கேட்டேன் தானே, இப்போ நான் சொல்றத நீ கேளு. முடியாதுனா , உன் அப்பாகிட்ட பேசிக்கோ. நான் போறேன் " என்று எழுந்து சென்றுவிட்டார்.

Memoriesஅவனது " அம்மு.... " என்ற கெஞ்சலான கொஞ்சலும் இம்முறை பலனளிக்கவில்லை.

ஜீவா பரிதாபமான முகத்துடன் அப்பா பிரபாகரின் முகம் பார்க்க, அவரோ " என்னால ஒன்னும் பண்ண முடியாது தம்பி. நீ ஆச்சு , உன் அம்மாவாச்சு. என்னை இழுக்காத இதுல " என்று கைவிரித்தார்.

" யு டூ டாடி.. சரி நான் யோசிக்கிறேன் " என்று விடைக்கொடுத்தான் ஜீவா.

மானிடரின்  முன்பிலிருந்து எழுந்த பிரபாகரன் , அருகில் நின்றிருந்த தன் மனைவிக்கு ஹை- ஃபை கொடுத்து, " நான் சொன்னேன்ல பவி, கெஞ்சினா மிஞ்சுவான், மிஞ்சினா கெஞ்சுவான்னு" என்றார் முகமெல்லாம் பல்லாக.

" பின்னிடீங்க போங்க, செம ஐடியா. அவன் கண்டிப்பா ஓகே சொல்லுவான். ஐ யம் வேரி ஷுவர் . ஆனா, அதுவரை அவங்கிட்ட பேசாம இருக்கனுமேனு நினச்சா தான் கஷ்டமா இருக்கு "

"  உனக்கே கொஞ்சம் ஒவரா தெரில பவி. மிஞ்சி போனா ரெண்டு நாள். அதுக்கு மேல உன் பையனால தாக்கு பிடிக்க முடியாது. கவலைய விடு " என்று சமாதானம் கூறினார்.

அவர்களின் எண்ணம் போலவே, அடுத்த நாளே திருமணத்திற்கான தன் சம்மதத்தைத் தெரிவித்து, பெண் தேடும்படி சொன்னான் மகன். அப்போதும், 'எப்படியும் இவங்க ஒரு பொண்ண தேடி ,கண்டுபிடிச்சு ,பேசி எல்லாம் முடிவுபண்ண ஒரு மூனு மாசமாவது ஆகும். அப்போ கூட, "செட் ஆகாது மா" னு சொல்லி கொஞ்ச நாளைக்கு எஸ்கேப் ஆகிடலாம். இப்போதைக்கு நம்ம சுதந்திர பறவை' என்ற எண்ணத்தில் தான் இருந்தான். ஆனால் அவன் பெற்றோர் முன்னமே ஒரு பெண்ணைப் பார்த்து, ரொம்பவும் பிடித்துப் போய் தான் தன்னை வற்புறுத்தியுள்ளனர் என்பது அவனுக்குப் பின்னரே தெரியவந்தது.

கொஞ்சம் ஒவராக  சீன் போட்டாலும் பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்ததும் சரி என்று தலையாட்டிவிட்டான் ஜீவா ( அட பாவி, இதுக்கு இவ்ளோ சீன் தேவையா தம்பி????)

வள் மிதுனா.

அதன் பின் எல்லாம் விரைவாக நடந்தேறியது. பெண்ணின் தொலைப்பேசி எண் தனக்கு கொடுக்கப்பட்டிருந்தாலும் , முதலில் கண்ணோடு கண் பார்த்து பேசும் ஆவலில், அவளை தொடர்பு கொள்ள மனம் வரவில்லை அவனுக்கு.

திருமணத்திற்கென விடுமுறை எடுத்து வந்தவனை, பெண் வீட்டிற்கு அழைத்து சென்றனர். அவர்களை அங்கு சற்றும் எதிர்பாராத மிதுனாவுக்கும் அவளின் பெற்றோருக்கும் அது ஒரு இன்ப அதிர்ச்சியாய் அமைந்தது. ஜீவாவிற்கும் அது அதிர்ச்சியே.

அமைதியாக உள்ளே சென்று அமர்ந்தவன் பிரபாகரனிடம், “ அப்பா, நான் கொஞ்சம் அவங்க கிட்ட பேசனும்…” என்று எதோ சொல்ல வர, “ என்ன சம்மந்தி, மாப்பிள்ள என்ன சொல்றாரு?” என்று புன்னகையுடன் கேட்டார்  மிதுனாவின் தந்தை ராகவன்.

அவரும் நக்கலாக,“ ம்.. பொண்ணுகிட்ட பேசனுமாம்..”  என்றார். எல்லோரும் சிரிக்க தொடங்க, ஜீவா அவசரமாக “ அய்யோ அப்பா, நான் ராகவன் சார் கிட்டப்பேசனும்னு சொன்னேன்பா ” என்றான்.

எல்லோர் கண்களும் ஆச்சரியத்துடன் அவனைத் தொடர, எழுந்தவன் ராகவன் முன் வந்து நின்றான். ‘என்னடா இது?’ என்று எண்ணிய அவரும் எழுந்து, “ என்ன தம்பி, என்ன பேசனும்? “ என்றார் கலவரமாக.

ஜீவா சிரித்துக்கொண்டே , “  என்னை மறந்துடீங்களா சார். நான் உங்க ஸ்டூடண்ட். நான் 5th படிக்கும் போது, நீங்க தான் எனக்கு தமிழ் டீச்சர். நினைவிருக்கா சார்? “ என்று காலைத் தொட்டு  வணங்கினான்.

கிட்டதட்ட இருபது வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் எல்லாம் உடனே நினைவு வருவது சாத்தியமல்லவே. எனவே அவரும் ,’அப்பாடா, இவ்வளவு தானா ?’ என்று பெருமூச்சு ஒன்றை விட்டு அவனைத் தழுவிக்கொண்டார்.

ரண்டு வாரங்களுக்குப் பிறகு திருமணம் என்று நிச்சயிக்கப்பட்டது. மணமக்கள் இருவரும் மகிழ்ச்சியில் திளைக்க, அதன் பின்பு அவர்களைத் தொடர்பு கொள்ள முயன்றால், எப்போதும் அவர்கள் செல் போன்,” The subscriber you are calling is busy at the moment, please try again later ”என்பதையே பதிலாக தந்தது.

நிச்சயிக்கப்பட்ட முகூர்த்ததில் மிதுனாவைக் கரம் பிடித்தான் ஜீவா. சடங்குகள் எல்லாம் முடிய, பெற்றோர்களிடம் ஆசிப்பெற்றனர் மணமக்கள்.

ஜீவா தனது மாமனாரின் பாதம் தொட, அவர் “ நல்லா இருப்பா, சிறப்பா வருவீங்க “ என்று வாழ்த்தினார்.

ஐந்தாவது படிக்கும் போது ஜீவா தன் வகுப்பு தோழன் ஒருவனுடன் உருண்டு பிரண்டு சண்டையிட்டதால், தலைமை ஆசிரியரின் அறைக்கு அவன் அழைக்கப் பட்டிருந்தான்.

தமிழ் வகுப்பு முடிந்ததும் நடந்த சண்டை என்பதால், ராகவனும் உடன் வர வேண்டிய கட்டாயம். சேட்டைகள் எல்லாம் செய்தும், அப்பாவியைப் போல் முகத்தை வைத்துக்கொண்டு நின்றவனைக் கண்டவர் கடுப்பாகி, “   ஏன்டா  என் உயிர எடுக்குறீங்க? நீ எல்லாம்… உருப்படவே மாட்ட” என்று நொந்துக்கொண்டார்.

அந்த காட்சி மனதில் ஓட, அவரின் “ நல்லா இருப்பா” வை கேட்டவனுக்கு குபீர் என்று சிரிப்பு வந்தது. அவன் மூலமே இதை எல்லம் அறிந்திருந்த மிதுனா, இவன் எதை எண்ணி சிரித்திருப்பான்  என்பதை சரியாக யூகித்து, அவன் காலை ஒரு மிதி மிதித்தாள். அந்த கூட்டத்தின் நடுவே சத்தமாக கத்த கூட முடியாமல் அசடு வழிந்தவாறே நிமிர்ந்தான் ஜீவா.

இதை எல்லாம் மேலிருந்து பார்த்த கடவுள், “ ராகவா…. இப்படி மாத்தி மாத்தி பேசுறீயே.. என்னப்பா நீ , இப்படி பண்றீயேப்பா? “ என்று தலையில் கை வைத்துக்கொண்டார்.

இந்த கதைய Teacher’s day அன்னைக்கு கொடுக்கனும் னு நினைச்சேன். கொஞ்சம் ரொம்ப late ஆயிடுச்சு. இதை ஒரு Teacher பொண்ணுக்கு dedicate செய்றேன் ;)

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.